ஆறே மாதத்தில் எடையை குறைத்து ஆளே மாறிப்போன ஜெய்பீம் நடிகை! ரஜிஷாவை புகழ்ந்து தள்ளிய ஜிம் டிரெய்னர்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஆறே மாதத்தில் எடையை குறைத்து ஆளே மாறிப்போன ஜெய்பீம் நடிகை! ரஜிஷாவை புகழ்ந்து தள்ளிய ஜிம் டிரெய்னர்!

ஆறே மாதத்தில் எடையை குறைத்து ஆளே மாறிப்போன ஜெய்பீம் நடிகை! ரஜிஷாவை புகழ்ந்து தள்ளிய ஜிம் டிரெய்னர்!

Suguna Devi P HT Tamil
Published Apr 13, 2025 10:46 AM IST

ஜெய்பீம், கர்ணன் போன்ற படங்களின் மூலம் பிரபலமான நடிகை ரஜிஷா விஜயன் கடந்த ஆறு மாதம் மேற்கொண்ட கடுமையான உடற்பயிற்சியில் 15 கிலோ வரை எடையை குறைத்துள்ளார். இவரது டிரான்ஸ்பார்ம் போட்டோ தற்போது வைரலாகி வருக்கிறது.

ஆறே மாதத்தில்  எடையை குறைத்த ஆளே மாறிப்போன ஜெய்பீம் நடிகை! ரஜிஷாவை புகழ்ந்து தள்ளிய ஜிம் டிரெய்னர்!
ஆறே மாதத்தில் எடையை குறைத்த ஆளே மாறிப்போன ஜெய்பீம் நடிகை! ரஜிஷாவை புகழ்ந்து தள்ளிய ஜிம் டிரெய்னர்!

அடுத்த படத்திற்காக 

நடிகை ரஜிஷாவிற்கு தற்போது 33 வயதாகிறது. நடிக்க வந்த புதிதில் குறைவான எடையுடனே காணப்பட்டார். சில ஆண்டுகள் கழித்து சற்று உடல் எடை அதிகரித்து இருந்தது. இருப்பினும் இதுவரை இவர் நடித்து இருந்த அனைத்து படங்களிலும் எடை பெரிய விஷயமாக இருந்ததில்லை. இந்த நிலையில் தற்போது அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்திற்காவே எடை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். மேலும் இவர் எடை குறைத்த பின்னர் இன்ஸ்டாவில் பகிர்ந்த பல போட்டோக்களை ரசிகர்கள் விரும்பி வருகின்றனர். 

ஜிம் டிரெயினரின் பாராட்டு 

ரஜிஷாவிற்கு உடற்பயிற்சி பயிற்றுநராக இருந்த அலி ஷிஃபாஸ் அவரது இன்ஸ்டாவில் ரஜிஷாவை பாராட்டி ஒரு பதிவை பதிவித்துள்ளார். அதில், "2024 ஆம் ஆண்டு கலீத் ரகுமான் பரிந்துரைத்த பிறகு ரஜிஷா என்னைப் பார்க்க வந்தார். நான் முதன்முதலில் அவரை சந்தித்தபோது அவர் மிகவும் சோர்வாக இருந்தார், சில உடல்நலப் பிரச்சினைகளை சந்தித்தார். கடந்த கால படப்பிடிப்பு விபத்துகளிலும் அவருக்கு இரண்டு தசைநார் கிழிவுகள் இருந்தன.

 ஆனால் அவர் தனது வரவிருக்கும் படத்திற்காக (விரைவில் அறிவிக்கப்படும்) இந்தப் பயணத்தை மேற்கொள்ள முழுமையாகத் தீர்மானித்திருந்தார். 6 மாத காலப்பகுதியில், அவர் மொத்தம் 15 கிலோ எடையைக் குறைத்தார். கடந்த காலங்களில் அவர் க்ராஷ் டயட் உள்ளிட்ட அனைத்தையும் மேற்கொண்டதைப் போலல்லாமல், இந்த முறை சரியான சீரான உணவு மற்றும் கொழுப்பு இழப்பு மூலம் தசை இழப்பு இல்லாமல் இந்த சாதனையை அடைய முடிந்தது. இந்த நேரத்தில் அவர் பல காயங்களைச் சந்தித்தார், ஆனால் ஒருபோதும் கைவிடவில்லை.

அவரது அர்ப்பணிப்பை உண்மையிலேயே பாராட்டுகிறேன், மேலும் அவரது வரவிருக்கும் படங்களுக்கு இங்கே அவருக்கு நல்வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டு இருந்தார். இதனையடுத்து பல திரைப் பிரபலங்களும் ரஜிஷாவிற்கு அவர்களது வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் கூடிய விரைவில் அவரது படம் குறித்தான அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர். 

Suguna Devi P

TwittereMail
சுகுணா தேவி பி, கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். அச்சு ஊடகம், மொழிபெயர்ப்பு துறை மற்றும் டிஜிட்டல் ஊடகம் என 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தேசம், லைப்ஸ்டைல் சர்வதேசம், சினிமா உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் ஆங்கில இலக்கியத் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றுள்ள இவர், விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் 2018-2019 ஆம் ஆண்டு பணியாற்றியுள்ளார். மேலும் ஈடிவி பாரத் தமிழ், தமிழ்நாடு அரசு நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான இதழ் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2024 செப்டம்பர் மாதம் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.