இந்தியில் ரீமேக் ஆகும் திகில் தமிழ் படம்! ஜான்வி கபூர் தான் ஹீரோயின்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  இந்தியில் ரீமேக் ஆகும் திகில் தமிழ் படம்! ஜான்வி கபூர் தான் ஹீரோயின்!

இந்தியில் ரீமேக் ஆகும் திகில் தமிழ் படம்! ஜான்வி கபூர் தான் ஹீரோயின்!

Suguna Devi P HT Tamil
Nov 04, 2024 02:58 PM IST

தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பல இந்திய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவரது மகள் தான் ஜான்விகபூர் அவரது தாயைப்போலவே இவரும் ஹிந்தி மற்றும் தெலுங்கில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்தியில் ரீமேக் ஆகும் திகில் தமிழ் படம்! ஜான்வி கபூர் தான் ஹீரோயின்!
இந்தியில் ரீமேக் ஆகும் திகில் தமிழ் படம்! ஜான்வி கபூர் தான் ஹீரோயின்!

கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகை ஸ்ரீதேவி இறந்ததன் பின்னர் ஜான்வி கபூர் பல படங்களில் நடித்து வருகிறார். கோஸ்ட் ஸ்டோரீஸ் கார்கில் கேள் இந்த ஆண்டு வெளியான மிஸ்டர் அண்ட் மிஸஸ் மாகி போன்ற படங்களில் நடித்து அவரது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். ரசிகர்கள் மத்தியிலும் ஜான்விகபூரின் நடிப்பிற்கு பெரும் வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் தற்போது தமிழ் படம் ஒன்றின் ரீமேக்கில் ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

தமிழில் வெளியான ஈரம்

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர்கள் ஆதி, நந்தா மற்றும் சரண்யா மோகன், சிந்து மேனன் ஆகியோர் ஒன்று சேர்ந்து நடித்து கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான படம் ஈரம். இப்படத்தை இயக்குனர் ஷங்கர் தயாரித்து இருந்தார். திகில் க்ரைம் படமாக வெளியாகி இருந்த இப்படம் அதிகமான ரசிகர்களை கவர்ந்தது. இருப்பினும் வெளியான சமயத்தில் எந்த மொழியிலும் இந்த படம் ரீமேக் செய்யப்படவில்லை. இந்நிலையில் இந்த படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. மேலும் இப்படத்தில் ஹீரோயின் ஆக ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கிட்டத்தட்ட 15 வருடங்களுக்குப் பிறகு தற்போது 'ஈரம்' படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர்தான் 'ஈரம்' படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கதையில் சிறிய மாற்றம் செய்து பிரம்மாண்டமாக இப்படம் உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லியோ மற்றும் பீஸ்ட் திரைப்படத்தில் மனோஜ் பரமஹம்சாவே ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அலட்டல் இல்லாத திகில் படமாக ஈரம் உருவாக்கி இருந்தது. குறிப்பாக ஆதி மற்றும் நந்தா, சிந்து மேனன் மற்றும் சரண்யா மோகன் மட்டுமே நடித்து இருந்தனர். இருப்பினும் நேர்த்தியான நடிப்பால் படம் சிறப்பாக இருந்தது. இந்தியில் ரீமேக் ஆகப் போகும் இப்படத்தில் ஜான்விக்கு ஜோடியாக யார் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.