அய்யோ போச்சே.. தவறாக கணக்கு போட்டு எவிக்ட் ஆன ஜாக்குலின் - டாப் ஐந்து இடத்தில் இருப்பவர்கள் யார்?
ஜாக்குலின் வெளியேற்றத்திற்குப் பிறகு, பிக் பாஸ் தமிழ் 8 நிகழ்ச்சியில் ஐந்து டாப் போட்டியாளர்கள் தற்போது இருக்கிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வழக்கத்திற்கு மாறாக இந்த முறை போட்டியாளர்கள் பணப்பெட்டியை மீட்டெடுத்து, குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டிற்குள் மீண்டும் நுழைய வேண்டும். அப்படி நுழைந்தால் அவர்கள் போட்டியிலும் தொடராலும், பணமும் அவர்களுக்கு சொந்தம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
புது விதமான முயற்சி
ஆனால் சமீபத்திய பணியை போட்டியாளர் முடிக்கத் தவறினால் எடுத்த பணத்துடன் போட்டியை விட்டு வெளியேற வேண்டும். மேலும் ஒரு போட்டியாளர் எத்தனை முறை வேண்டுமானாலும் பணப்பெட்டியை எடுக்கலாம் என சொல்லப்பட்டது.
இந்நிலையில் 8 லட்சம் ரூபாய் பணப்பெட்டி எடுக்க சென்ற ஜாக்குலின் 35 விநாடிகளில் பணப்பெட்டியை எடுத்து வர வேண்டும் என சொல்லப்பட்டது. ஆனால் அவர் பணப்பெட்டியை எடுத்து வர 37 விநாடிகள் எடுத்து கொண்டார். அதனால் துரதிர்ஷடவசமாக ஜாக்குலின் பிக் பாஸ் 8 ஆவது சீசனில் இருந்து எலிமினேட் ஆனார்.
ஜாக்குலின் சாதனை
101 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் விளையாடி வந்த ஜாக்குலின், பணப்பெட்டி டாஸ்கில் எலிமினேட் ஆனது போட்டியாளர்கள் அனைவருக்குமே பேரதிர்ச்சியாக இருந்தது. ஜாக்குலின் வலுவான போட்டியாளர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். ஏனென்றல் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய வாரம் முதல் கடைசி வாரம் வரை என அனைத்து வாரமும் அவர் நாமினேட் செய்யப்பட்டு மக்களால் காப்பாற்றப்பட்டார்.
முன்னதாக பணப்பெட்டி டாஸ்கில் முதலாவதாக 50 ஆயிரம் பணத்தை முத்துக்குமரன் வென்றார். பின்னர் 2 லட்சத்திற்கான டாஸ்கில் டிக்கெட் டூ ஃபினாலே வென்ற ரயான் வெற்றி பெற்றார். அடுத்ததாக 2 லட்சத்துக்கான டாஸ்கில் பவித்ரா வெற்றி பெற்றார்.
முதல் ஐந்து போட்டியாளர்கள்
ஜாக்குலின் வெளியேற்றத்திற்குப் பிறகு, பிக் பாஸ் தமிழ் 8 நிகழ்ச்சியில் ஐந்து டாப் போட்டியாளர்கள் தற்போது இருக்கிறார்கள். இதில் முத்துக்குமரன், பவித்ரா, ராயன், சௌந்தர்யா மற்றும் விஷால் ஆகியோர் அடங்குவர். நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி ஜனவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.
யார் இந்த ஜாக்குலின்
ஜாக்குலின், விஜய் டிவியில் ஒளிபரப்பான கானா காணும் கலங்கள் சீரியலில் அடியெடுத்து வைத்தார். பின்னர் விஜய் சீரியலில் ஒளிபரப்பான ஆண்டாள் அழகர் சீரியலில் நடித்தார்.கலக்க போவது யாரு, விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோ அவரது கேரியரில் மாற்றங்களைக் கொண்டு வந்தது.
வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் தொலைக்காட்சியை சேர்ந்த தொகுப்பாளர் ஒருவர் போட்டியாளராக உள்ளே நுழைவார்கள். அந்த வகையில் தான் இந்த முறை பிக் பாஸ் 8 ஆவது சீசனில் ஜாக்குலின் போட்டியாளராக உள்ளே சென்று இருக்கிறார் என்று கருத்தப்படுகிறது. மூன்று வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் விஜய் தொலைக்காட்சிக்கு ஜாக்குலின் வந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்