தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Jacqueline Fernandez To Be Accused In 200 Crore Extortion Case

ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக சேர்க்க அமலாக்கத்துறை முடிவு

Aarthi V HT Tamil
Aug 17, 2022 07:16 PM IST

பணமோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸை குற்றவாளியாக சேர்க்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.

ஜாக்குலின்
ஜாக்குலின்

ட்ரெண்டிங் செய்திகள்

பலரிடம் மோசடியில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து இருப்பதாக மத்திய அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தது. 

அதன் பேரில் அமலாக்கத்துறை, சுகேஷ் சந்திரசேகருக்கு சொந்தமாக சென்னை, பெங்களூருவில் இருக்கும் பங்களாக்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத 2 கிலோ தங்கம், 82.5 லட்சம் ரூபாய் ரொக்கம், 16 சொகுசு கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யதனர்.

இந்த வழக்கு தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர், அவரது மனைவி லீனா மரியா பால் உள்ளிட்ட 6 பேர் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

இந்த விசாரணையில் சுகேஷ் சந்திரசேகர், நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸுக்கு 10 கோடி ரூபாய் அளவில் பரிசுப் பொருட்கள் வாங்கி கொடுத்து இருப்பது தெரிய வந்தது. 

சில மாதங்களுக்கு முன்பு கூட ஜாக்குலின் பெர்னான்டஸ் வெளிநாடு செல்ல முயன்ற போது, மும்பை விமான நிலையத்தில் அமலாக்கத் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டர். 

பின்பு விசாரணை நடத்தி அவருக்கு சொந்தமான 7.27 கோடி ருபாய் பணத்தையும் அமலாக்கத்துறையினர் முடக்கினர். இதன்மூலம் அமலாக்கத்துறையினர் பணமோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸை குற்றவாளியாக சேர்த்து உள்ளனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்