Rakul Preet Singh: தொடர் ப்ளாப்.. கழுத்தை நெறித்த பைனான்சியர்கள்.. 250 கோடி கடனை அடைக்க அலுவலகத்தை விற்ற ரகுல் கணவர்!
Rakul Preet Singh: கொரோனா காலமான 2021 ம் ஆண்டு பூஜா தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியான வெளியான பெல் பாட்டம், அதனைதொடர்ந்து வெளியான மிஷன் ராணிகஞ்ச், கணபத் உள்ளிட்ட படங்கள் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. - அலுவலகத்தை விற்ற ரகுல் கணவர்!

Rakul Preet Singh: கடந்த சில நாட்களாக பிரபல நடிகை ரகுல்ப்ரீத் சிங்கின் கணவரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானியின் பூஜா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம், பணப்பரிவர்த்தனைகளில் சரியாக இல்லை என்றும் உரிய நேரத்தில் பணத்தை செலுத்த வில்லை என்றும் புகார் எழுந்தன.
இதனை சமாளிக்க ஜாக்கியும், அவரது அப்பா வாசு பக்னானியும் மும்பையில் தங்களுக்கு சொந்தமான 7 மாடி அலுவலகத்தை விற்று, நிதி நெருக்கடியை சமாளித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக தங்களுடைய 80 சதவீத பணியாளர்களை இன்னொரு அடுக்குமாடி குடியிருப்பிற்கு மாற்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து நஷ்டம்
முன்னதாக, பூஜா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், நடிகர்கள் அக்ஷய் குமார், டைகர் ஷெராப் நடித்த ‘படே மியான் சோட் மியான்’ படத்தை 350 கோடி செலவில், பிரமாண்டமாக தயாரித்து இருந்தது. ஆனால், அந்த படம் பெரிதான வரவேற்பை பெறவில்லை. பாக்ஸ் ஆபிஸிலும் கடுமையான சரிவை சந்தித்த அந்த படம் வெறும் 50 கோடி அளவில் மட்டுமே வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. இதனால் கடுமையான நிதி நெருக்கடியில் பக்னானி சிக்கினார். இதனையடுத்து, கிட்டத்தட்ட 2 வருட போராட்டத்திற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அலுவலக கட்டிடத்தை பிரபல பில்டர் ஒருவர் வாங்கி இருப்பதாகவும், அவர் அதனை இடித்து விட்டு புதிய அடுக்குமாடி குடியிருப்பைக்கட்டி வாடகைக்கு விட இருப்பதாக சொல்லப்படுகிறது.