வைரல் பாட்டால் வந்த வினை! 5 வருஷத்துக்கு பின் பாடகியை குறிவைக்கும் பக்தர்கள்.. என்ன நடந்தது?
பிரபல கானா பாடகியான இசைவாணி, சபரிமலைக்கு பெண்கள் வருவது குறித்து பாடல் ஒன்றை பாடி பிரச்சனையை ஏற்படுத்திய நிலையில், அவர் மீதும், இயக்குநர் பா.ரஞ்சித் மீதும் புகாரளிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை, ஐப்பசி மாதங்கள் பிறந்தாலே, கேரளா, தமிழ்நாடு மட்டுமின்றி, இந்திய அளவில் பெரும்பாலான மக்கள் சபரிமலை ஐயப்பனுக்கு விரதமிருந்து மாலை அணிந்து மலைக்கு செல்வர்.
இவர்கள் இந்த நடைமுறையை மிகவும் புனிதமானதாகக் கருதி கட்டுப்பாடுகளுடன் விரதம் மேற்கொள்வர். ஆனால், பல காலங்களாக கன்னி சாமி என அழைக்கப்படும் ஐயப்பனை தரிசிக்க பெண்களை அனுமதிக்குமாறு போராட்டங்கள் நடைபெற்று வந்தது.
பெண்களுக்கு அனுமதி
முன்னதாக பூப்படையாத சிறுமிகளும், 50 வயதைக் கடந்த பெண்களும் ஐயப்பனுக்கு விரதமிருந்து அவரை தரிசிக்க வரலாம் என கூறப்பட்டது. பின் வழக்குகள் தொடுக்கப்பட்டு, பல போராட்டங்கள் நடத்தப்பட்டு அனைத்து தரப்பினரும் ஐயப்பன் கோவிலுக்கு செல்லலாம் என தீர்ப்பும் வழங்கப்பட்டது. இருப்பினும், கோயிலுக்கு செல்லும் பெண் பக்தர்கள் ஒருவித அச்ச உணர்வுடனேயே இருக்கின்றனர்.
