Aayiram Jenmangal : ரஜினி நடித்த முதல் திகில் திரைப்படம்.. நூறு நாட்களுக்கு மேல் ஓடி வெற்றியை கண்ட ஆயிரம் ஜென்மங்கள்!
46 years of Aayiram Jenmangal : நடிகர் ரஜினிகாந்த் நடித்த முதல் பேய் திரைப்படமான ஆயிரம் ஜென்மங்கள் படம் இன்றுடன் வெளியாகி 46 ஆண்டுகள் ஆகின்றன.

கணவன் - மனைவி குடும்பத்தோடு ஒரு இடத்திற்கு சென்று வசிக்கின்றனர். அதில் மனைவியின் உடலில் ஆவி இறங்கி விடுகிறது. அவரைக் காப்பாற்ற மருத்துவரான ரஜினி வருகிறார். இது 1978 ஆம் ஆண்டு வெளியான ஆயிரம் ஜென்மங்கள் திரைப்படம்.
துரை இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளியான திகில் திரைப்படம் ஆயிரம் ஜென்மங்கள். லதா,விஜயகுமார்,ரஜினிகாந்த், பத்மப்ரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது 1976 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான யக்ஷகானம் படத்தின்ரீமேக் ஆகும். இப்படம் 10 மார்ச் 1978 அன்று வெளியானது.
இப்படத்தில் சாவித்திரியாக லதாவும், ரவியாக விஜயகுமாரும், டாக்டர் ரமேஷாக ரஜினிகாந்த், ராதாவாக பத்மப்ரியா, அன்னபூரணியாக மனோரமா, அழகுவாக சுருளி ராஜன், வி.கோபாலகிருஷ்ணன் டாக்டராக, ரவியின் அப்பாவாக வி.எஸ்.ராகவன், ராதாவின் அம்மாவாக புஷ்பலதா, தோட்ட மேலாளராக மதிஒளி சண்முகம், ராதாவின் மாமாவாக கே.கண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார். அனைத்து பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் எழுதியுள்ளார்.
விஜயகுமார், லதாவும் கணவன் மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். சிங்கப்பூரிலிருந்து லதாவின் அண்ணன் வருகிறார். அவர்தான் ரஜினிகாந்த். விஜயகுமாரின் எஸ்டேட்டில் வேலை செய்யும் வில்லன். அங்கு இருக்கும் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்கின்ற காரணத்தினால் வேலையை விட்டு விஜயகுமார் நீக்குகிறார்.
இதனால் விஜயகுமார் மீது வில்லனுக்கு விரோதம் ஏற்படுகிறது. லதாவுடன் திருமணம் நடப்பதற்கு முன்பு விஜயகுமாருக்கும் பத்மபிரியாவும் காதலிக்கின்றனர். திருமணம் நடக்கவிருக்கும் சமயத்தில் வில்லன் பத்மபிரியாவை கெடுக்க முயற்சி செய்யும்போது நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே விழுந்து பத்மபிரியா உயிரிழந்து விடுகிறார்.
லதாவோடு திருமணமான பிறகு விஜயகுமாருடன் சேர்ந்து வாழ நினைக்கும் பத்மபிரியாவின் ஆவி, லதாவின் உடலுக்குள் புகுந்து விடுகிறது. வெளிநாட்டில் இருந்து வரும் அண்ணன் ரஜினிகாந்த், லதாவின் செயல்பாடுகளில் வித்தியாசத்தை கண்டு கொள்கிறார். முதல் இரவு அவள் ஆத்திரமூட்டும் வகையில் ஆடை அணிந்து படுக்கையறையில் மயக்கும் பாடலைப் பாடுகிறாள். ரமேஷ் கதவைத் தட்டி ரவியை வெளியே இழுத்து, தொழிற்சாலை தீப்பிடிப்பதாக அழைப்பு வந்தது. இரண்டாவது இரவு, ரவியின் கிளாஸ் பாலில் சில வலுவான மயக்க மருந்துகளை கரைக்கிறார்.
மூன்றாம் நாள் காலை, அவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக இருக்கும் தொழிலாளர் தினக் கூட்டத்தில், உருமாறிய சாவித்திரி கைவிட்டு நடனமாடி பாடுகிறார். அன்று இரவு, அவள் ரவியை அவர்களின் கோடைகால குடிசைக்கு அழைத்துச் செல்கிறாள், ஆனால் ரமேஷ் அதை தீயிட்டுக் கொளுத்தும்போது அவளுடைய திட்டம் மீண்டும் தவறாகிறது. இந்த ஆவியின் சூட்சமத்தை கண்டு கொண்ட ரஜினிகாந்த், தங்கையையும், தங்கையின் கணவனையும் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை.
இந்த படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடி வெற்றியை கண்டது. 73 வயதிலும் கதாநாயகனாக நடிக்கும் ரஜினியைதான் பலருக்கும் தெரியும். ஆரம்ப காலகட்டத்தில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த முதல் பேய் படம் இதுதான் என கூறப்படுகிறது. அதற்குப் பிறகு அவர் நடித்த பேய் திரைப்படம் சந்திரமுகி. இரண்டு படத்திற்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டுமே மலையாள படத்தில் இருந்து ரீமேக் செய்யப்பட்டதாகும்.
இந்த ஆயிரம் ஜென்மங்கள் இன்றுடன் 46 ஆண்டுகள் ஆகும். எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் இது போன்ற திரைப்படங்களை காலத்தால் அழிக்க முடியாது என்று கூறினால் அது மிகை ஆகாது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்