தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Its Been 46 Years Since The Release Of Nizhal Nijamagiradhu

கம்பன் ஏமாந்தான்.. நிஜமான நிழல்.. 3 பரிமாணங்களில் கதை.. பாலச்சந்தரின் ஆகச்சிறந்த படைப்பு நிழல் நிஜமாகிறது

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 24, 2024 07:15 AM IST

Nizhal Nijamagiradhu: 1969 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான அடிமைகள் என்ற கதையால் ஈர்க்கப்பட்டார் பாலச்சந்தர். அதன் பின்னர் அந்த கதையின் உரிமையை ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு வாங்கினார். அதுதான் நிழல் நிஜமாகிறது

நிழல் நிஜமாகிறது
நிழல் நிஜமாகிறது

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த வகையில் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இயக்குனராக விளங்கி வந்தவர் கே.பாலச்சந்தர். இதுதான் எடுத்த பல நாடகங்களை திரைப்படமாக கொடுத்து பல்வேறு விதமான வெற்றி திரைப்படங்களை கண்டவர் பாலச்சந்தர். ஆனால் வேற்று மொழியில் எடுக்கப்பட்ட ஒரு கதையின் மீது ஈர்க்கப்பட்டு அதனை தமிழ் மக்களுக்கு ஏற்றவாறு மாற்றி தன்னுடைய ஸ்டைலில் பாலச்சந்தர் கொடுத்த திரைப்படம் தான் நிழல் நிஜமாகிறது.

வேற்று மொழியில் வெளியான எத்தனையோ திரைப்படங்களை தனது ஸ்டைலில் கொடுத்து வெற்றிகளை கொடுத்தவர் பாலச்சந்தர். 1969 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான அடிமைகள் என்ற கதையால் ஈர்க்கப்பட்டார் பாலச்சந்தர். அதன் பின்னர் அந்த கதையின் உரிமையை ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு வாங்கினார். அதுதான் நிழல் நிஜமாகிறது

தமிழ் மக்களுக்கு ஏற்றார் போல தனது ஸ்டைலில் அந்த கதையை அங்கங்கே மாற்றி அமைத்து புது உயிர் கொடுத்து வெளியிட்டார்.

கதை

 

ஏழை பெண்ணாக வீட்டு வேலைக்காரியாக கனவுகளில் ராணி போல் வாழ்ந்து கொண்டிருப்பவர் ஷோபா. சரத் பாபுவும், சுமித்ராவும் அண்ணன் தங்கை. இவர்கள் இருவரும் இருக்கும் வீட்டிற்கு ஷோபா வேலைக்காரியாக வருகிறார். அவர்கள் வீட்டில் வேலைக்காரனாக அனைவராலும் செவிடன் என அழைக்கப்படுபவர் வேலை பார்க்கிறார்.

சரத் பாபுவின் நண்பனாக வரக்கூடியவர் கமல்ஹாசன். வேலை காரணமாக சரத்பாபுவின் ஊருக்கு வருகிறார் தனது வீட்டின் பக்கத்திலேயே சரத்பாபு கமலை குடி வைக்கிறார். அதே ஊரில் பெண்களைப் பார்த்து எப்போதும் கெட்ட எண்ணங்களோடு தெரியக்கூடியவராக மௌலி வசிக்கின்றார்.

சுமித்ராவிற்கு ஆண்களைக் கண்டால் சுத்தமாக பிடிக்காது. திருமணத்தின் மீது ஈடுபாடு இல்லாதவர். தங்கைக்கு திருமணம் செய்துவிட்டு தான் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சரத் பாபு காத்திருக்கிறார். அப்போது சுமித்ராவும் கமல்ஹாசனும் சந்திக்கின்ற சூழ்நிலை ஏற்படுகிறது இருவருக்கும் ஆரம்பத்திலேயே மோதல்கள் உண்டாக்குகின்றது.

நண்பனுக்கும் தம்பிக்கும் இடையில் சரத் பாபு அவதிப்படுகிறார். அப்படியே கமல்ஹாசன் மற்றும் சுமித்ரா இவர்களின் பயணம் செல்ல இருவருக்கும் மனதில் காதல் ஏற்படுகிறது ஆனால் ஈகோ சிக்கலால் காதலை சொல்ல மறுக்கின்றனர் இருவரும்.

வேலைக்காரியாக பணிபுரியும் சோபாவின் மீது செவிடனுக்கு காதல் ஏற்படுகிறது. அதுபோலவே சரத்பாபுவிற்கும் ஷோபா மீது காதல் வருகிறது. சரத்பாபுவின் ஆசி வார்த்தைகளின் நம்பி கர்ப்பமாகின்றால் ஷோபா. இதை அனைத்தையும் கமல்ஹாசனிடம் கூறி ஷோபா கதறி அழுகிறார்.

ஷோபாவின் கர்ப்பத்திற்கு சரத்பாபு தான் காரணம் என செவிடன் கூறுகிறார். அவருடைய கர்ப்பத்திற்கு கமல்ஹாசன் தான் காரணம் எனக்கூறி சுமித்ரா அவரது வீட்டை விட்டு ஷோபாவை விரட்டுகிறார். தனியாக வீடு எடுத்து கமல்ஹாசன் சோபாவை தங்க வைக்கிறார் அவளுக்கு துணையாக செவிடனை அமர்த்துகிறார்.

கடைசியில் ஷோபாவின் கர்ப்பத்திற்கு கமல்ஹாசன் காரணம் இல்லை என சுமித்ரா தெரிந்து கொள்கிறார். அதற்கு காரணம் தனது அண்ணன் சரத்பாபு தான் என அறிந்து கொள்கிறார். பின்னர் சுமித்ரா திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார். அப்போது திடீரென அனைத்தையும் நிறுத்தி ஷோபா தனது நடிப்பை வெளிப்படுத்துகிறார். இதுதான் அந்த திரைப்படத்தின் முக்கிய கட்டம். இந்த படம் இந்த அளவிற்கு மிகப்பெரிய வெற்றியடைவதற்கு காரணமே இறுதிக்கட்டம் தான்.

மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிகை சோபா நடித்திருந்தாலும் கதாநாயகியாக அவருக்கு இதுதான் முதல் திரைப்படமாகும். கதாநாயகி என்று கூறலாம் இருப்பினும் படத்தின் மைய நாயகி இவர் தான். முதல் படம் என்று தெரியாத அளவிற்கு தனது கதாபாத்திரத்தை தெளிவாக நடித்திருப்பார்.

அவ்வப்போது திரையரங்குகளில் இருக்கும் ரசிகர்களின் நெகிழ வைக்கும் அளவிற்கு கமல்ஹாசன் அங்கங்கே தனது டச் நடிப்பை கொடுத்திருப்பார். இன்றைய திரைப்படத்தின் இறுதி கட்டத்தை காண்பதற்காகவே ஏராளமான மக்கள் திரையரங்குகளில் நோக்கி ஓடினார்கள்.

படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இரண்டு தான் என்றாலும் பட்டி தொட்டி எங்கும் ஒழுக்கம் அளவிற்கு மிகப்பெரிய ஹிட் அடித்தன. கம்பன் ஏமாந்தான் என்று எஸ்பிபி குரலில் ஒலிக்கும் இந்த பாடல், அப்போது அனைவரது நாவிலும் நின்றது.

மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன், கவியரசர் கண்ணதாசன் இருவரும் கூட்டணி சேர்ந்து இந்த மெகா ஹிட் பாடல்களை கொடுத்தனர். எஸ்பிபி மற்றும் வாணி ஜெயராம் இவர்கள் இருவரும் சேர்ந்து இலக்கணம் மாறுதோ என்ற பாடல்களை பாடி இருப்பார்கள். அனைவரது வீட்டு விசேஷங்களிலும் இந்த பாடல் அந்த காலகட்டத்தில் கட்டாயம் இருக்கும் என கூறுகின்றனர் ரசிகர்கள்.

இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு கதாபாத்திரங்களையும் படத்தைப் பார்த்தவர்கள் கட்டாயம் மறக்க முடியாது. ஏனென்றால் அனைவருமே இந்த திரைப்படத்திற்கு முக்கிய பங்காற்றியுள்ளனர். இந்த திரைப்படம் இன்றுடன் வெளியாகி 46 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் சினிமாவின் சரித்திரத்தில் இருந்து பிரிக்க முடியாத கலைச்சித்திரமாக இந்த திரைப்படம் விளங்கி வருகிறது என்று கூறினால் அது மிகையாகாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்