Manaivi Oru Manickam: பாம்பாக மாறிய மனைவி.. இச்சாதாரியாக கலக்கிய ராதா.. திரைக்கதையை விறுவிறுப்பாக்கிய அர்ஜுன்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Manaivi Oru Manickam: பாம்பாக மாறிய மனைவி.. இச்சாதாரியாக கலக்கிய ராதா.. திரைக்கதையை விறுவிறுப்பாக்கிய அர்ஜுன்

Manaivi Oru Manickam: பாம்பாக மாறிய மனைவி.. இச்சாதாரியாக கலக்கிய ராதா.. திரைக்கதையை விறுவிறுப்பாக்கிய அர்ஜுன்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 17, 2024 05:15 AM IST

Manaivi Oru Manickam: உடலில் ஆவி ஏறிய பிறகு ராதாவின் நடிப்பு மிகவும் அழகாக இருக்கும். அவ்வப்போது கண்களிலேயே கவர்ச்சி காட்டி மயக்க கூடிய அளவிற்கு தனது நடிப்பை ராதா வெளிப்படுத்தி இருப்பார். அர்ஜுன் நடிப்பை சாதாரணமாக கூறி விட முடியாது. அவரும் தனது கதாபாத்திரத்தை சரியாக நகர்த்தி இருப்பார்.

மனைவி ஒரு மாணிக்கம்
மனைவி ஒரு மாணிக்கம்

90களில் பல திரைப்படங்கள் இருந்தாலும் பேய் திரைப்படங்களும் அவ்வப்போது வந்து திரையரங்குகளில் வெற்றி நடை போட்டன. அப்படிப்பட்ட திரைப்படங்களில் ஒன்றுதான் மனைவி ஒரு மாணிக்கம்.

இச்சாதாரி நாகங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் மனைவி ஒரு மாணிக்கம். இதற்கு முன்பு கமல்ஹாசன் நடித்த நீயா என வெளியிடப்பட்ட பாம்பு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதேபோல இந்த மனைவி ஒரு மாணிக்கம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த திரைப்படத்தின் மூலக்கதை எழுதியவர் ராமநாராயணன். திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் இசை அமைத்துள்ளார். படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றன.

கதை

 

கணவன் மனைவியாக இச்சாதாரி நாகங்கள் வாழ்ந்து வருகின்றன. கிராமத்தில் இருக்கக்கூடிய ஒரு சிறுவன் மரத்தில் ஏறும் பொழுது அங்கு இருக்கின்ற ஆண் இச்சாதாரி பாம்பை கண்டு பயந்து கீழே விழுந்து இறந்து விடுகிறார்.

அந்த சிறுவனின் தாயார் அருகே இருக்கக்கூடிய சாமியாரிடம் அழைத்துச் சென்று தனது மகனுக்கு உயிர் கொடுக்கும்படி வேண்டி கேட்டுக்கொள்கிறார். தன்னைக் கண்டு பயந்த குழந்தைக்கு என்ன ஆனது என்று காண்பதற்காக அந்த ஆண் இச்சாதாரி பாம்பு திரும்பி வருகின்றது. உடனே அந்த சாமியார் அந்த ஆண் இச்சாதாரி பாம்பை பிடித்து அதன் உயிரை அந்த குழந்தைக்கு கொடுக்கின்றார்.

இந்த ஊரில் இல்லாமல் அந்த குழந்தையை வேறு எங்காவது அழைத்துச் செல்லும்படி சாமியார் அந்த தாயிடம் கூறுகிறார். அந்த ஊருக்கு வராமல் அந்த தாயார் குழந்தையை அழைத்துச் செல்கின்றார். கணவன் இறந்ததை அறிந்த பெண் இச்சாதாரி பாம்பு அந்த சிறுவன் எப்போது வருவான்? அவனை கொலை செய்து தனது கணவனின் உயிரை மீட்டெடுக்க வேண்டும் என எண்ணுகிறது.

வளர்ந்த பிறகு மீண்டும் தாயோடு அந்த சிறுவன் தற்போது நடிகர் முகேஷ் ஆக வருகிறார். அவரது மனைவியாக நடிகை ராதா நடித்திருப்பார். ஊருக்கு வந்த பிறகு அந்த பெண் இச்சாதாரி பாம்பு அந்த தாயை கொன்றுவிடுகிறது.

முகேஷ் உடலில் ஆண் இச்சாதாரி பாம்பின் உயிர் இருக்கின்ற காரணத்தினால் அவரது உடலில் விஷம் ஏறாது. எனவே வேறு ஏதேனும் வழி.களை கையாண்டு முக்கிய இசை கொலை செய்வதற்காக பெண் இச்சாதாரி பாம்பு முயற்சி செய்கின்றது.

இறுதியாக முகேஷின் மனைவியாக இருக்கக்கூடிய ராதாவின் உடம்பில் பெண் இச்சதாரி பாம்பு ஆவியாக புகுந்து விடுகிறது. அதற்குப் பிறகு முகேஷ் தம்பியாக நடிகர் அர்ஜுன் நடித்திருப்பார். முகேஷின் தாயார் பாம்பின் மூலம் இறப்பதற்கு முன்பு அர்ஜுனுக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டு இறந்து விடுகிறார்.

வித்தியாசமாக நடக்கும் செயல்களைக் கண்டு அர்ஜுன் சந்தேகப்படுகிறார். அதற்குப் பிறகு அவருடைய தாயார் எழுதிய கடிதம் அவருக்கு கிடைக்கின்றது. நடந்த சம்பவம் அனைத்தும் அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருக்கின்றது அதற்குப் பிறகு. ராதாவின் உடம்பில் இருக்கக்கூடிய பெண் இச்சாதாரி ஆவியை அர்ஜுன் எப்படி விரட்டுகிறார் தனது சகோதரரே எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் மீதிக்கதை.

உடலில் ஆவி ஏறிய பிறகு ராதாவின் நடிப்பு மிகவும் அழகாக இருக்கும். அவ்வப்போது கண்களிலேயே கவர்ச்சி காட்டி மயக்க கூடிய அளவிற்கு தனது நடிப்பை ராதா வெளிப்படுத்தி இருப்பார். தனது சகோதரரை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ராதாவை தடுக்கும் வீரனாக அர்ஜுன் நடித்திருப்பார். அர்ஜுன் நடிப்பை சாதாரணமாக கூறி விட முடியாது. அவரும் தனது கதாபாத்திரத்தை சரியாக நகர்த்தி இருப்பார்.

முழு திரைப்படமும் அடுத்தது என்ன நடக்கும் என விறுவிறுப்போடு சொல்லும். கடைசியில் கஷ்டப்பட்டு காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஏற்படும் வகையில் திரைக்கதையில் அந்த அளவிற்கு விறுவிறுப்பை இயக்குனர் அதிகப்படுத்தி இருப்பார்.

திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் வாயை விட்டு நகராத அளவிற்கு மிகவும் இனிமையாக இருக்கும். மொத்த திரைப்படமும் ராதா, அர்ஜுன் இவர்களை வைத்து நகரும். தமிழ் சினிமாவில் பேய் திரைப்படம் அல்லது பாம்பு திரைப்படம் என கணக்கெடுத்தால் கட்டாயம் மனைவி ஒரு மாணிக்கம் திரைப்படம் அந்த வரிசையில் முக்கிய இடத்தை வகிக்கும். இன்றுடன் அந்த திரைப்படம் வெளியாகி 34 ஆகின்றன.

தற்போது அந்த திரைப்படத்தை பார்த்தால் கூட தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை திரைப்படங்களோடு போட்டி போடும் என்று கூறினால் அது மிகையாகாது. பார்க்கும் ரசிகர்களை ஆவலோடு வைத்திருக்கும் மனைவி ஒரு மாணிக்கம். வாய்ப்பு கிடைத்தால் ஒரு முறை பாருங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.