டி.ஆர் வெற்றிப்படைப்பு.. அருமையாக நுழைந்த சிம்பு.. நடனத்தில் மிரட்டல்.. சொன்னால் தான் காதலா
23 Years of Sonnal Thaan Kaadhala: நடன குழு ஆடுவதை விட மிகவும் சிறப்பாக நடிகர் சிலம்பரசன் இந்த சொன்னால் தான் காதலா திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களில் வேகமாக நடனமாடி அசத்தியிருப்பார். சிலம்பரசன் என்றால் நடனம் என உருவாக்கியது இந்த திரைப்படம் தான்.
23 Years of Sonnal Thaan Kaadhala: இந்த படம் வெளியாவதற்கு முன்பு 1999இல் மோனிஷா என் மோனாலிசா என்ற படத்தில் அறிமுக ஹீரோவை வைத்து இயக்கியிருந்தார் இயக்குநர் டி. ராஜேந்தர். இந்த படம்தான் நடிகை மும்தாஜின் அறிமுக படமாகவும் இருந்தது.
மோனிஷா என் மோனாலிசா படத்திலேயே முழுக்க கிராபிக்ஸுடன் கூடிய ஒரு பாடலில் தனது மூத்த மகனான சிலம்பரசனை நடனமாட வைத்திருப்பார் டி. ராஜேந்தர். அப்போது சிலம்பரசனை அறிமுகப்படுத்தி பரிச்சயப்படுத்தினார். இதையடுத்து சிலம்பரசனு ஹீரோவாக அறிமுகப்படுத்தி காதல் அழிவதில்லை படம் குறித்து அறிவப்பை வெளியிட்டார் டி. ராஜேந்தர்.
ஆனால் சிலம்பரசன் ஜோடியாக புதுமுகத்தை நடிக்க வைக்கும் முயற்சியை ஈடுபட்ட டி. ராஜேந்தர், காதல் அழிவதில்லை படத்தின் பணிகளை தள்ளி வைத்தார். அந்த இடைவெளியில் முரளி, ரோஜா, கரண், ஸ்வாதி, வடிவேலு, மணிவண்ணன் உள்பட பலருடன் டி. ராஜேந்தர் நடிக்க காதல் கலந்த குடும்ப படமாக சொன்னால்தான் காதலா படத்தை உருவாக்கினார்.
ரோஜாவை துரத்தி காதலிக்கும் முரளி, குடும்ப சூழ்நிலையில் முரளி காதலை தவிர்க்கும் ரோஜா என இவர்கள் இருவருக்குமான காதல் கதை செல்ல, டி. ராஜேந்தர் சகோதரி ஸ்வாதியின் கொடுமைக்கார கணவனாக கரண் இருக்க, காதல், குடும்ப சிக்கல் என இரண்டையும் தீர்த்து வைக்கும் கேரக்டரில் தோன்றும் டி. ராஜேந்தர் தனது பாணியில் திரைக்கதை அமைத்திருப்பார்.
இந்த படம் மிகப் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், படத்தின் பாடல்கள் அனைத்தும் கவனத்தை ஈர்த்தன. மொத்தமுள்ள 8 பாடல்கள் சிலம்பரசனை இரண்டு பாடல்களில் தோன்ற வைத்து நடனமாட வைத்திருப்பார்.
சிம்புவுக்கு அசத்தல் அறிமுகம்
அவருக்கு விசிடிங் கார்டாக அமைந்திருந்த இந்த படத்தில் தனது நடன திறமையால் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை அப்போது உருவாக்க தொடங்கினார். சொன்னால்தான் காதலா என்ற வரிகளிலேயே குத்து பாடல், வெஸ்டர்ன் மியூசிக்கில் தொடங்கும் அந்த இரு பாடல்களும் ஹிட்டடித்தன.
காதல் படமாக இல்லாமல் குடும்ப செண்டிமெண்டும் நிறைந்திருந்த இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ஓரளவு வசூலையும் ஈட்டியது. அத்துடன் அந்த ஆண்டின் தமிழ்நாடு அரசு விருதையும், பிலிம்பேர் விருதுகளில் சிறப்பு விருதையும் பெற்றது.
காதலின் பெருமை, அடுக்கு மொழி வசனங்கள், பாடல்களில் பிரமாண்டம் என அக்மார்க் டி. ராஜேந்தர் ஸ்டைல் படமாக வெளிவந்த சொன்னால்தான் காதலா படம் வெளியாகி இன்றுடன் 23 ஆண்டுகள் ஆகிறது.
அதிர்ந்த தனுஷ்
சொன்னால்தான் காதலா திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் இரண்டு பாடல்களுக்கு நடனமாடியிருப்பார். சுக்குமலா என்ற பாடலுக்கு அவர் மிகவும் அருமையாக நடமாடியிருப்பார். ஒருமுறை நடிகர் தனுஷ் ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவிற்குள் நுழையும் பொழுது இவரை எடுத்துக்காட்டாக கூறி இயக்குனர் இதுபோல ஆட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதுபோல் என்னால் ஆட வராது இவர் என்ன இப்படி ஆடுகிறார் என தனுஷ் ஆச்சரியப்பட்டு கூறியுள்ளார். இந்த சம்பவத்தை நடிகர் தனுஷ் வெளிப்படையாகவும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அந்த அளவிற்கு நடிகர் சிலம்பரசனுக்கு இந்த திரைப்படம் ஒரு நல்ல ஆரம்பமாக அமைந்தது.
நடன குழு ஆடுவதை விட மிகவும் சிறப்பாக நடிகர் சிலம்பரசன் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களில் வேகமாக நடனமாடி அசத்தியிருப்பார். சிலம்பரசன் என்றால் நடனம் என உருவாக்கியது இந்த திரைப்படம் தான்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்