மிரள வைத்த ஜிப்ரான்.. இஸ்லாமியராக மாறிய ஜெய் நஸ்ரியா.. அழகிய திருமணம் எனும் நிக்காஹ்
Thirumanam Enum Nikkah: திருமணம் எனும் நிக்காஹ் படத்தை அனீஸ் என்பவர் இயக்கியுள்ளார். திரைப்படத்தின் நாயகனாக ஜெய் நாயகியாக நஸ்ரியா நசீம் நடித்துள்ளனர். திரைப்படத்திற்கு இசையமைத்தவர் ஜிப்ரான். இந்த திரைப்படம் 2011 ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது.
Thirumanam Enum Nikkah: மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட எத்தனையோ திரைப்படங்கள் வெற்றிகளையும் கண்டுள்ளன தோல்விகளையும் கண்டுள்ளன. ஆனால் அதிக பணம் போட்டு எடுக்கப்பட்ட படம் தான் வெற்றி பெறும் என்பதும் கிடையாது. குறைந்த செலவில் மிகப்பெரிய திரை கதையை கொண்டு வெற்றி பெற்ற எத்தனையோ கதைகள் இங்கு உள்ளன.
சில நேரங்களில் தமிழ் சினிமா மிகப்பெரிய பிரம்மாண்டங்களையும் கொண்டாடும் சிறிய முதலீடுகளில் எடுக்கப்படும் படங்களையும் கொண்டாடும். ரசிகர்களுக்கு தேவை தங்களை நிறைவு செய்யும் திரைப்படம் மட்டுமே. ரசிகர்கள் யாரும் பணம் குறித்து பார்ப்பது கிடையாது படத்தை மட்டுமே பார்க்கின்றனர்.
சிறிய முதலீடுகளில் எடுக்கப்படும் சின்ன திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து ஹிட் திரைப்படங்களாக மாறுகின்றன அப்படிப்பட்ட திரைப்படங்களில் ஒன்றுதான் திருமணம் எனும் நிக்காஹ்.
இந்த திரைப்படத்தை அனீஸ் என்பவர் இயக்கியுள்ளார். திரைப்படத்தின் நாயகனாக ஜெய் நாயகியாக நஸ்ரியா நசீம் நடித்துள்ளனர். திரைப்படத்திற்கு இசையமைத்தவர் ஜிப்ரான். இந்த திரைப்படம் 2011 ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது. திரையரங்குகளில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் இளைஞர்கள் மத்தியில் அழியாத திரைப்படமாக இந்த படம் மாறியது.
கதை
சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் ரயிலில் ஜெய் மற்றும் நஸ்ரியா இருவரும் சந்திக்கின்றனர். விஜயராகவாச்சாரியாக இருக்கக்கூடிய ஜெய் சென்னைக்கு செல்வதற்காக அபூபக்கர் என்ற பெயரில் பயணச்சீட்டு வாங்கி பயணிக்கிறார். அதே ரயிலில் பிரியாவாக இருக்கக்கூடிய நஸ்ரியா ஆயிஷாவாக பயணிக்கிறார். இருவரும் இஸ்லாமியராக அறிமுகமாக நின்றனர்.
முதல் பயணத்திலேயே ஏற்படக்கூடிய காதல் பின்னர் உண்மை தெரியாமல் இருவரும் இஸ்லாமியராகவே காதலித்து வருகின்றனர். ஆச்சாரத்தை அனுதினமும் பின்பற்றக்கூடிய பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர் ஜெய். இருப்பினும் ஆயிஷா பானு நஸ்ரியா மீது கொண்ட காதலால் உண்மையை சொல்லாமல் அபூபக்கர் ஆக நடித்து காதல் செய்து வருகிறார்.
இதே நிலையில் நஸ்ரியாவும் இஸ்லாமியராக நடித்து ஜெய்யை காதலிக்கிறார். அதற்காக ஜெய் இஸ்லாமியர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சாரங்கள் உள்ளிட்டவற்றை தேடி கற்றுக் கொள்கிறார். இதன் மூலம் இவருக்கு இஸ்லாமிய குடும்பத்தில் மட்டும் ஏற்படுகிறது.
நஸ்ரியாவும் இஸ்லாமிய இளைஞனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக தனது தோழியிடம் இஸ்லாமிய பழக்கவழக்கத்தை கற்றுக் கொள்கிறார். இருவரது வீட்டிலும் திருமண பேச்சு ஆரம்பமாகின்றது. இனிமேலும் காதலை மறைக்க கூடாது என்பதற்காக இருவரும் கூறும் தருணத்தில் உண்மை வெளிப்படுகிறது.
இருவரும் பிராமண குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று உண்மை நடிகர் ஜெய் மற்றும் நஸ்ரியாவுக்கு தெரிய வருகிறது. பார்க்கும் ரசிகர்களுக்கு இவர்கள் சேர்வது எழுதி தான் என நினைப்பார்கள். ஆனால் இருவரும் பிரிந்து விடுகின்றனர். ஜெய் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பழகி வந்திருப்பார் அந்த குடும்பத்தில் இருக்கக்கூடிய ஒரு இளம் பெண் ஜெய் காதலித்திருப்பார். அந்தப் பெண்ணின் ஜெய் ஏமாற்றி விட்டதாக கூறி அந்த இஸ்லாமிய குடும்பம் ஜெய்யை தாக்க வருவார்கள். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது தான் திரைப்படத்தின் மீதி கதையாகும்.
இந்த திரைப்படத்தில் காதல் காட்சிகள் அனைத்தும் மிகவும் சுவாரசியமாக கட்டமைக்கப்பட்டிருக்கும். தங்கள் காதலுக்காக மதத்தை மாற்றி நடித்து காதல் செய்யும் விதம் மிகவும் அருமையாக எடுக்கப்பட்டிருக்கும். அபூபக்கர், ஆயிஷா இருவரும் இந்த பொய்யான பெயர்களில் இஸ்லாமிய மதத்தினராக காதல் செய்து இருவரும் உண்மை தெரிந்த பிறகு பிரிந்து செல்வது எதிர்பாராத மாற்றம்.
இதுதான் பார்க்கும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறது. அதன் பின்னர் இருவரும் இந்த சிக்கலில் இருந்து மீண்டு எப்படி சேர்கிறார்கள் என்பதுதான் திரைப்படத்தின் இரண்டாம் பாதியாக அமைந்திருக்கும். இருப்பினும் நுனி நாற்காலியில் அமர வைத்த இயக்குனர் திடீரென திரைப்படத்தை முடித்து இருப்பார்.
இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருப்பார். திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றிகள் பெற்றன. இந்த திரைப்படத்திற்கு அது ஒரு மிகப்பெரிய பலம் என்று கூறினால் அது மிக ஆகாது. என் தாரா என் தாரா என்ற பாடல் இன்று வரை பலரது பிளே லிஸ்டில் இருந்து வருகிறது. இன்றுடன் இந்த திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. இது போன்ற படைப்புகள் என்றும் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன மக்களும் ரசித்துக் கொண்டுதான் இருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்