Ajith Kumar: ‘அஜித் அண்ணன் ஏன் சிறந்த மனிதர்?.. காரணம் சொன்ன இளம் ரேசர்! - நெகிழ்ச்சி பதிவு இங்கே!
Ajith Kumar: நேற்றைய தினம் ரேஸ் டிராக்கில் அஜித் அண்ணனை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி. இந்தியன் மோட்டார் விளையாட்டுக்குறித்து நாங்கள் நிறைய பேசினோம். - சாய் சஞ்சய் நெகிழ்ச்சி!

Ajith Kumar: சேலத்தைச் சேர்ந்த ரேசரான சாய் சஞ்சய் அஜித்துடன் நடந்த சந்திப்புக்குறித்து நெகிழ்ச்சியான பதிவொன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அஜித் அண்ணன்
இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் அவர், ‘நேற்றைய தினம் ரேஸ் டிராக்கில் அஜித் அண்ணனை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி. இந்தியன் மோட்டார் விளையாட்டுக்குறித்து நாங்கள் நிறைய பேசினோம். கடந்த சனிக்கிழமை பயிற்சிக்கு முன்னர் அஜித் அண்ணன் என்னை தேடி வந்து வாழ்த்தினார். இது அவர் எவ்வளவு சிறந்த மனிதர் என்பதைக் காட்டுகிறது.’ என்று பதிவிட்டு இருக்கிறார்.
அஜித்திற்கு சினிமா தொழில் என்றாலும் அவரது காதல் மோட்டார் ரேசிங்தான். முன்னதாக, ரேசிங்கில் ஏற்பட்ட விபத்துக்காரணமாக அதனை விட்டு பல வருடங்களாக ஒதுங்கி இருந்த அஜித்குமார், மீண்டும் கார் ரேஸ் தொடர்பான போட்டிகளில் பங்கெடுத்து வருகிறார்.
சந்திப்பு நடந்தது எங்கே?
இதற்காக பிரத்யேக அணியை உருவாக்கி இருக்கும் அவர், துபாயில் நடைபெற்ற 24 மணி நேர ரேசிங்கில் பங்குபெற்றார். அதில் அவரது அணி 3ம் இடத்தை பிடித்தது. அதனை தொடர்ந்து தற்போது ஐரோப்பாவில் நடைபெற்று வரும் கார் ரேஸ் போட்டிகளில் பங்கெடுத்து வருகிறார். அதன்படி, நேற்றைய தினம் நடைபெற்ற ஜிடி4 கார் ரேஸ் போட்டியில் அஜித் ஒரே ஆளாக பங்கெடுத்தார். அங்குதான் இருவரும் சந்தித்துக்கொண்டிருக்கின்றனர்.
150 கோடி ரூபாய் வசூல்!
அஜித் நடித்த குட் பேட் அக்லி அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி நான்கு நாட்களில், 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகம் முழுவதும் 150 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது. நான்காவது நாளான ஞாயிற்றுக்கிழமை மட்டும் சுமார் 37 கோடி ரூபாய் வசூல் என்கிற அபார சாதனையை படைத்துள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம் பாக்ஸ் ஆபிஸில் இந்த படம் அசத்தலான வசூலைக் குவித்து வருகிறது.
முதல் நாளில் சுமார் 57 கோடி ரூபாய் வசூல் செய்த 'குட் பேட் அக்லி', இரண்டாம் நாளில் சுமார் 28 கோடி ரூபாய் வசூல் செய்தது. மீண்டும் வார இறுதியில் வசூல் அதிகரித்து, மூன்றாம் நாளில் 36.50 கோடி ரூபாயும், நான்காம் நாளில் 37 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளது. இதன் மூலம், முதல் வார இறுதியில் 150 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.
அதிக வசூல் செய்த படம்
குட் பேட் அக்லி இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த மூன்றாவது தமிழ் படமாகும். இது சமீபத்தில் மத கத ராஜா மற்றும் வீர தீர சூரன் ஆகிய படங்களை பின்னுக்குத் தள்ளி தரவரிசையில் உயர்ந்து நிற்கிறது. அஜித்தின் கடைசி படமான விடமுயாற்சியும், முதலிடத்தில் இருக்கும் பிரதீப் ரங்கநாதனின் டிராகனும் அதன் வழியில் நிற்கின்றன. மே மாதம் சூர்யாவின் ரெட்ரோ வெளியாகும் நிலையில், குட் பேட் அக்லி படம் எப்படி வரவேற்பை பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

டாபிக்ஸ்