Feburary 14 Movie Release: காதலர் தினத்தை குறிவைத்து காத்திருக்கும் படங்கள்.. லிஸ்ட் ரொம்ப பெருசா போகுதே..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Feburary 14 Movie Release: காதலர் தினத்தை குறிவைத்து காத்திருக்கும் படங்கள்.. லிஸ்ட் ரொம்ப பெருசா போகுதே..

Feburary 14 Movie Release: காதலர் தினத்தை குறிவைத்து காத்திருக்கும் படங்கள்.. லிஸ்ட் ரொம்ப பெருசா போகுதே..

Malavica Natarajan HT Tamil
Published Feb 09, 2025 02:01 PM IST

Feburary 14 Movie Release: தமிழ்நாட்டில் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு 10 படங்கள் ரிலீஸ் ஆக உள்ளதாகத் தெரிகிறது.

Feburary 14 Movie Release: காதலர் தினத்தை குறிவைத்து காத்திருக்கும் படங்கள்.. லிஸ்ட் ரொம்ப பெருசா போகுதே..
Feburary 14 Movie Release: காதலர் தினத்தை குறிவைத்து காத்திருக்கும் படங்கள்.. லிஸ்ட் ரொம்ப பெருசா போகுதே..

விடாமுயற்சி திரைப்படம்

அந்த வகையில், இந்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் 10 படங்கள் ரிலீஸ் ஆக இருப்பது தெரிகிறது. ஏற்கனவே, அஜித்தின் விடாமுயற்சி படம் தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி வசூலைக் குவித்து வரும் நிலையில், விடாமுயற்டசி படத்திற்கு போட்டியாக களமிறங்க எந்த பெரிய படங்களும் முன் வரவில்லை. இதனால், சின்ன சின்ன பட்ஜெட் படங்கள் தான் தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ம் தேதி வெளியாகிறது.

பிப்ரவரி 14 ரிலீஸ் படங்கள்

பிப்ரவரி 14ம் தேதி இயக்குநர் சுசீந்திரனின் 2கே லவ் ஸ்டோரி திரைப்படம், ஜெயப்பிரகாஷ் ராமகிருஷ்ணன் இயக்கிய காதல் என்பது பொது உடமை, ஜே எஸ் கே எழுதி இயக்கிய ஃபயர் திரைப்படம் போன்றவை காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படங்கள். இவை காதலர் தினத்தன்று வெளியாகிறது.

இவற்றைத் தவிர கவுண்டமனியின் ஒத்த ஓட்டு முத்தையா, ஸ்ரீகாந்த்தின் தினசரி படம், அத்துடன் அது வாங்கினால் இது இலவசம், கண்ணீரா, படவா, கேப்டன் அமெரிக்கா பிரேவ் நியூ வேர்ல்டு (டப்பிங்), 9 ஏஎம் 9 பிஎம் வேலண்டைன்ஸ் டே ஆகிய படங்களும் தமிழ்நாட்டில் வெளியாகின்றன.

காதலை மையப்படுத்திய படங்கள்

இந்த 10 படங்களில் தமிழ்நாட்டு மக்கள் பெரிதும் எதிர்பார்ப்பது 2கே லவ் ஸ்டோரி, காதல் என்பது பொது உடைமை, ஃபயர், ஒத்த ஓட்டு முத்தையா ஆகிய படங்களைத் தான். இதில், 2கே லவ் ஸ்டோரி படம், 2000ம் ஆண்டுக்குப் பின் பிறந்தவர்களின் காதல், உறவு முறை அவற்றில் உள்ள சிக்கல் குறித்து பேசுகிறது. காதல் என்பது பொது உடைமை படம் தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்தும், அவர்கள் சந்திக்கும் பிரச்சனை குறித்தும் பேசுகிறது.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

ஃபயர் படம், கன்னியாகுமரியை சேர்ந்த காசி என்பவரின் கதையை வைத்து எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இவர் பல பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தி அவற்றை வீடியோவாத பதிவு செய்து கொடுமை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒத்த ஓட்டு முத்தையா படம், காமெடி நடிகர் கவுண்டமனி நடிப்பில் வெளியாக உள்ளது. இது அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். இந்தப் படங்கள் குறித்து பேச்சுகள் தான் இப்போது மக்களிடையே அதிக அளவில் உள்ளது. இருப்பினும் இந்தப் படங்கள் ரிலீஸ் ஆன பின் தான் இவை மக்களிடையே ஏற்படுத்திய தாக்கம் குறித்து தெரியவரும்.

அதே சமயம், காதலர் தினத்தை முன்னிட்டு பல முக்கிய நடிகர்களின் படத்தின் டீசர், டிரெயிலர்கள், பாடல்கள் எல்லாம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.