Tamil News  /  Entertainment  /  It Is The Story Of The Song Thangathil Mugam Eduthu From The Movie Meenava Nanban

Story of Song : கடும் கோபத்தில் எம்ஜிஆர்.. ஏன் இப்படி செய்தீர்கள்.. தங்கத்தில் முகமெடுத்து பாடல் உருவான கதை!

Divya Sekar HT Tamil
Jan 09, 2024 06:00 AM IST

மீனவ நண்பன் படத்தில் இடம்பெற்ற தங்கத்தில் முகமெடுத்து பாடல் உருவான கதை குறித்து இதில் காண்போம்.

தங்கத்தில் முகமெடுத்து பாடல் உருவான கதை
தங்கத்தில் முகமெடுத்து பாடல் உருவான கதை

ட்ரெண்டிங் செய்திகள்

ஸ்ரீதரின் "உரிமைக்குரலி"ன்வெற்றிக்கு பின்னர் வந்த படம்தான் "மீனவ நண்பன்". படத்தின் பாடல்கள் அனைத்தும் இனிமையிலும் இனிமை. "தங்கத்தில் முகமெடுத்து", மற்றும் "பொங்கும் கடலோசை" பாடல்கள் எவர்கிரீன் வரிசையில் சேர்ந்து கொண்டது. அப்படி இப்படத்தில் இடம்பெற்ற தங்கத்தில் முகமெடுத்து பாடல் உருவான கதை குறித்து இதில் காண்போம்.

"தங்கத்தில் முகமெடுத்து

சந்தனத்தில் உடலெடுத்து

மங்கை என்று வந்திருக்கும் மலரோ

நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ

தங்கத்தில் முகமெடுத்து

சந்தனத்தில் உடலெடுத்து

மங்கை என்று வந்திருக்கும் மலரோ

நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ

தங்கத்தில் முகமெடுத்து

சந்தனத்தில் உடலெடுத்து

தங்கத்தில் முகமெடுத்து

சந்தனத்தில் உடலெடுத்து

காமன் போல வந்திருக்கும் வடிவோ

அந்த தேவ லோக மன்னவனும் நீயோ

தங்கத்தில் முகமெடுத்து

சந்தனத்தில் உடலெடுத்து

காமன் போல வந்திருக்கும் வடிவோ

அந்த தேவ லோக மன்னவனும் நீயோ"

கே. ஜெ. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராமின் அருமையான குரலில் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் கவிஞர் முத்துலிங்கம் வரிகளில் அமைந்த அற்புதமான பாடல் தான் இது. கவிஞர் முத்துலிங்கமுக்கு மக்கள் திலகம் எம்ஜிஆர் அடுத்த படத்தில் உங்களுக்கு பாடல் எழுத வாய்ப்பு தருவதாக வாக்கு கொடுத்து விட்டார். இந்நிலையில் ஒரு நாள் மேடையில் முத்துலிங்கத்தை சந்தித்த எம்ஜிஆர் என்ன பாடல் எழுதி விட்டீர்களா என கேட்டுள்ளார். அதற்கு முத்துலிங்கம் இன்னும் இல்லை எனக்கு வாய்ப்பு வரவில்லை என கூறியுள்ளார்.

கோபமடைந்த எம்ஜிஆர் உடனே எம்.எஸ்.விக்கு அழைத்து ஏன் இன்னும் முத்துலிங்கத்திற்கு வாய்ப்பு தரவில்லை என கேட்டுள்ளார். அதற்கு எம் எஸ் வி அவர் அந்த சமயத்தில் ஊரில் இல்லை. அதனால் தான் வாய்ப்பு தர முடியவில்லை என கூறியுள்ளார். பிறகு என் படத்தில் இவருக்கு வாய்ப்பு தாருங்கள் என கூறியுள்ளார். 

 ஆனால் மீனவ நண்பன் இந்த படத்தில் அனைத்து பாடல்களும் எழுதி முடித்து விட்டன. அதனால் இதில் அனைத்து பாடல்களும் நிறைவடை ந்துவிட்டது. எனவே அடுத்த படத்தில் வாய்ப்பு தரலாம் என கூறியுள்ளார். அதற்கு எம்.ஜி.ஆர் வேண்டாம் இப்படத்திலேயே இவருக்கு வாய்ப்பு தாருங்கள் ஒரு கனவு காட்சி அமைத்து அதற்கு இவரை பாட்டு எழுத சொல்லுங்கள் என கூறியுள்ளார். எம்ஜிஆர் சொன்னதை அப்படியே கேட்டு அதற்காக எழுதிய பாடல் தான் இந்த பாடல்.

முதலில் முத்துலிங்கம் அழகுகளே உன்னிடத்தில் அடைக்கலம் உன் அங்கங்களே மன்மதனின் படைக்கலம் என பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த வரிகள் இயக்குனர் ஸ்ரீதருக்கும் ,எம் எஸ் விஸ்வநாதனுக்கும் பிடிக்கவில்லை. அடைக்கலம் போன்ற வார்த்தைகளை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக வேறு ஏதாவது வரிகளை மாற்றி எழுதி தாருங்கள் என முத்துலிங்கத்திடம் கேட்டுள்ளனர். அதன் பிறகு தான் தங்கத்தில் முகம் எடுத்து சந்தனத்தில் உடலெடுத்து என மாற்றி பாடலை எழுதியுள்ளார் முத்துலிங்கம். இப்பாடல் உருவானது இப்படிதான்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.