தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Vijay New Party: கட்சி தொடங்கும் நடிகர் விஜய் - ஏற்பாடுகள் தீவிரம்!

Actor Vijay New Party: கட்சி தொடங்கும் நடிகர் விஜய் - ஏற்பாடுகள் தீவிரம்!

Marimuthu M HT Tamil
Jan 26, 2024 03:20 PM IST

நடிகர் விஜய் கட்சி தொடங்கவுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுள்ளது.

நடிகர் விஜய்!
நடிகர் விஜய்!

ட்ரெண்டிங் செய்திகள்

விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாகப் பதிவுசெய்ய, வரும் பிப்ரவரி 4ஆம் தேதி டெல்லி செல்ல உள்ளார், விஜய் மக்கள் இயக்கப்பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எனத் தெரிகிறது. இதற்காக புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான 25க்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகள் டெல்லி செல்லவுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக நேற்று நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. இந்த முடிவினை முக்கிய நிர்வாகிகளிடம் தெரிவித்தநிலையில், அத்தகவல் வெளியில் கசிந்துள்ளது.

கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் நிலையில், அப்படம் இன்னும் இரண்டு மாதங்களில் முடிந்து ரிலீஸ் ஆனபின், அரசியல் நகர்வு குறித்த முக்கியத் தகவலை நடிகர் விஜய் அறிவிப்பார் எனத் தெரிகிறது. அதுவும் நடிகர் விஜய்யின் பிறந்த மாதமான ஜூன் மாதத்தில், இதுதொடர்பான பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் எனத் தெரிகிறது. மேலும் வரும் நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிடக்கூட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நிர்வாகிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் அதில் நல்ல பெயரைச் சம்பாதித்துள்ள இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளது எனக்கூறப்படுகிறது.

முன்னதாக தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர், அரசியலுக்குள் நுழைந்து தமிழக முதலமைச்சராகப் பதவி வகித்தனர். அதேபோல், திரைக்கதை எழுத்தாளரும் வசனகர்த்தாவுமான கலைஞர் கருணாநிதி தமிழகத்தின் ஐந்துமுறை முதலமைச்சராக இருந்துள்ளார். அந்த வழியில் தேமுதிக என்னும் கட்சியைத் தொடங்கி, மறைந்த நடிகர் விஜயகாந்த், எதிர்க்கட்சி அந்தஸ்துவரைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.