Rajini Health Update : ரஜினி ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. நடிகர் ரஜினிகாந்த் நாளை வீடு திரும்ப உள்ளதாக தகவல்!
Rajini Health Update : நடிகர் ரஜினிகாந்த் இன்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை டிஸ்சார்ஜ் என தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. உடல் நலக்குறைவு காரணமாக ரஜினிகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ரஜினியின் ரத்த நாளத்தில் வீக்கம் இருந்ததால் அறுவை சிகிச்சையின்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது ஐசியூவில் இருந்து தனி வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் இன்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை டிஸ்சார்ஜ் என தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவமனையில் அனுமதி
முன்னதாக ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 30 ஆம் தேதி சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நடிகர் ரஜினிகாந்த் அவரது அடிவயிறுப் பகுதியில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று கூறப்பட்டது.