பிக் பாஸ் வீட்டில் திடீர் ட்விஸ்ட்.. இந்த வாரத்தில் மிட் வீக் எவிக்ஷன் இருக்காம்? அப்போ வெளியேறும் போட்டியாளர் இவரா?
பிக் பாஸ் வீட்டில் தற்போது 15 போட்டியாளர்கள் எஞ்சி உள்ளனர். நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், திடீர் ட்விஸ்டாக இந்த வாரம் மிட் வீக் எவிக்ஷன் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 63 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கடந்த வாரம் யாருமே எதிர்பாராத வகையில் டபுள் எவிக்ஷன் நடைபெற்றிருக்கிறது. இதில் சாச்சனா மற்றும் ஆர்.ஜே. ஆனந்தி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது 9 வாரங்களைக் கடந்து 10வது வாரத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரே வாரத்தில் இரண்டு போட்டியாளர்கள் எலிமினேட் ஆவது வழக்கம்.
ஆனால் இந்த சீசனில் முதல் எட்டாவது வாரம் டபுள் எவிக்ஷனே நடக்காமல் இருந்த நிலையில், 9-ஆவது வாரத்தில் டபுள் எவிக்ஷன் என அறிவித்தார் விஜய் சேதுபதி.அதன்படி அடுத்தடுத்து சாச்சனா, ஆர்.ஜே.ஆனந்தி ஆகியோரை எலிமினேட் ஆனார்கள்.
முதலில் ஆர்.ஜே.ஆனந்தியை தான் எலிமினேட் செய்தார் விஜய் சேதுபதி. அவர் பெயர் எலிமினேஷன் கார்டில் வந்ததை பார்த்ததும் போட்டியாளர்கள் பலர் கண்ணீர் விட்டு அழுதனர். அவரை தொடர்ந்து சாச்சனா எலிமினேஷன் ஆனார்.
ஃவைல்ட்கார்டு போட்டியாளர்கள்
ஃவைல்ட்கார்டு போட்டியாளர்களாக மஞ்சரி, ரயான், ராணவ், வர்ஷினி, ரியா உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் எண்ட்ரி ஆகினர். இதற்கு முன் இல்லாத சீசனில் நடந்த ஒரு விசயம், இந்த சீசனில் கண் கூடாக நடந்தது. புதிதாக வந்த போட்டியாளர்களை, வீட்டில் இருந்த பழைய போட்டியாளர்களுக்கு ஏற்கமனமில்லை. அதை அவர்கள் வெளிப்படையாக தெரிவிக்கவும் செய்தனர்.
அவர்களின் ரியா, வர்ஷினி ஆகியோர் ஏற்கனவே வெளியேற்றப்பட்டு விட்டனர். இப்போது, ராணவ் மட்டும் மஞ்சரி மீது பார்வை திரும்பியிருக்கிறது. ஆரம்பத்தில் புதிதாக வந்த போட்டியாளர்களுடன் சுற்றி வந்த ரயான், அதன் பின் தாங்கள் குறி வைக்கப்படுவதை உணர்ந்து, பழைய போட்டியாளர்களுடன் ஐக்கியமாக முடிவு செய்தார்.
திடீர் ட்விஸ்ட்
பிக் பாஸ் வீட்டில் தற்போது 15 போட்டியாளர்கள் எஞ்சி உள்ளனர். நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், ஆட்கள் அதிகமாக இருப்பதால் இனி வார வாரம் டபுள் எவிக்ஷன் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதில் திடீர் ட்விஸ்டாக இந்த வாரம் மிட் வீக் எவிக்ஷன் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மிட் வீக் எவிக்ஷன் என்றால் வாரத்தின் நடுவே ஒரு நாளில் யாராவது போட்டியாளரை வெளியேற்றுவார்கள்.
இந்த வாரம் நாமினேஷனில் ஜாக்குலின், செளந்தர்யா, ரயான், அருண், விஜே விஷால், தர்ஷிகா, அன்ஷிதா, சத்யா, பவித்ரா ஆகிய 9 பேரில் இருந்து ஒருவர் தான் மிட் வீக் எவிக்ஷனில் வெளியேற வாய்ப்புள்ளது. சத்யா, தர்ஷிகா ஆகிய இருவரில் இருந்து ஒருவர் தான் மிட் வீக் எவிக்ஷனில் வெளியேற வாய்ப்புள்ளது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்