Gulebakavali: கொடிகட்டி பறந்த பாடல்கள்.. நினைத்ததை நடத்திய எம்.ஜி.ஆர்.. வசூல் சாதனை செய்த குலேபகாவலி
Gulebakavali: குலேபகாவலி திரைப்படம் வெளியான 68 ஆண்டுகள் கடந்தும் ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இந்த திரைப்படத்தில் மொத்தம் 11 பாடல்கள் இதில் பத்து பாடல்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருப்பார் மயக்கம் மாலை பொழுதே நீ போ போ என்ற பாடலை கே.வி. மகாதேவன் இசையமைத்திருப்பார்.

Gulebakavali: குலேபகாவலி, 1955ம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம். ஆக்ஷன் மற்றும் சாகச திரைப்படம். இந்தப்படத்தை டி.ஆர்.ராமண்ணா தயாரித்து இயக்கியிருந்தார். ராமையாய தாஸ் எழுதியிருந்தார். இந்தப்படத்தில் எம்.ஜி.ஆர்., டி.ஆர். ராஜகுமாரி, ராஜசுலோக்சனா மற்றும் ஜி.வரலட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர்.
அரபிய நாட்டுப்புற கதையை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட கதை, ஒன் தவுசண்ட் அண்ட் ஒன் நைட்ஸ் என்ற கதை தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்ட கதையாகும். இளம் இளவரசன் பகாவலி என்ற ஒரு மந்திர மலரை அவரது தந்தையின் கண் பார்வையை குணப்படுத்துவதற்காக கண்டுபிடிப்பதே படத்தின் கதையாகும். இந்தப்படம் 1955ம் ஆண்டு வெளியானது.
ஒரு அரசனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். அதில் ஒருவரது மகனை அவர் பார்த்தால் அவரது கண் பார்வை பறிக்கப்படும் என்று ஒரு ஜோசியர் கூறியிருப்பார். இதனால் அந்த தாயும், மகனும் காடுகளில் வசிப்பார்கள். ஒருமுறை இருவரும் இதையறியாமல் பார்த்துவிட அந்த அரசனின் பார்வை பறிபோகும்.
இந்தக்கதையை தனது தாயின் மூலம் அறிந்த மகன், பகாவலி என்ற அரிய மலரை பறித்து வருவதற்காக செல்வார். அந்த மலர் அரசனின் பார்வையை மீட்டுகும் என்று கூறப்பட்டதால் அவர் அந்த மலரை தேடிச்செல்வார். இதற்காக அவர் நிறைய சாகசங்களை செய்ய வேண்டியிருக்கும். அதையெல்லாம் கடந்து அவர் அந்த மலரை பறித்து வந்து தனது தந்தையின் கண் பார்வையை சரிசெய்தாரா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
இளவரசானாக எம்.ஜி.ஆர். இளவரசியாக ராஜகுமாரி, இளவரசி மெஹபூபா, ராணியாக ஜி.வரலட்சுமி, சுக்குராக கே.ஏ,தங்கவேலு, குலமாக சந்திரபாபு உள்ளிட்ட பலர் தங்களின் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள்.
விஸ்வதநாதன் – ராமமூர்த்தியின் இசையில், தஞ்சை ராமையா தாஸ் பாடல் வரிகளில் பாடல்கள் 12 பாடல்கள் படத்தில் இடம் பெற்றிருக்கும். அதில் மயக்கும் மாலை பொழுதே நீ போ போ… இனிக்கும் இன்ப இரவே நீ வா வா… என்ற பாடல் இன்றளவும் மறக்க முடியாத பாடலாக இருந்திருக்கும். மற்ற பாடல்களும் படு ஹிட். குலேபகாவலி திரைப்படம் வெளியான 68 ஆண்டுகள் கடந்தும் ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்துள்ளது.
இந்த திரைப்படத்தில் மொத்தம் 11 பாடல்கள் இதில் பத்து பாடல்கள் எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்திருப்பார் மயக்கம் மாலை பொழுதே நீ போ போ என்ற பாடலை கே.வி. மகாதேவன் இசையமைத்திருப்பார்.
சந்திரபாபு சம்பவம்
எம். எஸ். விஸ்வநாதன் எம் எஸ் நாயுடு இடம் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது ஒரு இளைஞரை அழைத்து வந்து இவன் நன்றாக பாடுகிறானா என்று பார், எனக் கூறிவிட்டு எம்.எஸ். நாயுடு அருகே சென்றுள்ளார். அந்த இளைஞர் பாடி காட்டியுள்ளார். அதற்கு பிறகு எம்.எஸ். நாயுடு எப்படி பாடுகிறான் என கேட்டார். எங்கே பாடுகிறான், வசனத்தை அப்படியே உச்சரிக்கிறான் என கூறியுள்ளார். இதனால் அந்த இளைஞர் முறைத்தபடி அங்கிருந்து சென்றுள்ளார் அவர்தான் நடிகர் சந்திரபாபு.
பின் நாளில் குலேபகாவலி திரைப்படத்தில் சந்திரபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். அப்போது அந்த திரைப்படத்திற்கு இசையமைத்த எம் எஸ் விஸ்வநாதன் இந்த டியூன் எப்படி இருக்கிறது என கேட்டுள்ளார். இது ஒரு ட்யூனாக இதற்கு எப்படி ஆட முடியும் என கேட்டுள்ளார். அதற்கு எம் எஸ் விஸ்வநாதன் எழுந்து ஆடி காட்டியுள்ளார். இதில் மகிழ்ச்சியடைந்த சந்திரபாபு எம்.எஸ். விஸ்வநாதனின் கட்டியணைத்துள்ளார். அதன் பின்னர் இருவரும் நண்பர்களாக மாறியுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்