தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Anjali Devi: உச்சத்தில் இருந்த அஞ்சலிதேவி.. நாயகிக்காக உருவாக்கப்பட்ட படம்.. உச்ச வசூலில் மணாளனே மங்கையின் பாக்கியம்

Anjali Devi: உச்சத்தில் இருந்த அஞ்சலிதேவி.. நாயகிக்காக உருவாக்கப்பட்ட படம்.. உச்ச வசூலில் மணாளனே மங்கையின் பாக்கியம்

Suriyakumar Jayabalan HT Tamil
May 24, 2024 05:15 AM IST

Manalane Mangaiyin Bakkiyam: தற்போது வெளியான அரண்மனை 4 திரைப்படம் கூட மிகப் பெரிய அளவில் வசூல் சாதனை செய்து திரையரங்குகளில் ஓடி வருகின்றன. அப்பொழுது மாயாஜால கதையை அடிப்படையாகக் கொண்டு மணாளனே மங்கையின் பாக்கியம் திரைப்படம் வெற்றிவாகை சூடி உள்ளது.

உச்சத்தில் இருந்த அஞ்சலிதேவி.. நாயகிக்காக உருவாக்கப்பட்ட படம்.. உச்ச வசூலில் மணாளனே மங்கையின் பாக்கியம்
உச்சத்தில் இருந்த அஞ்சலிதேவி.. நாயகிக்காக உருவாக்கப்பட்ட படம்.. உச்ச வசூலில் மணாளனே மங்கையின் பாக்கியம்

ட்ரெண்டிங் செய்திகள்

நடித்ததோடு மட்டுமல்லாமல் 27 படங்களை தயாரிக்கவும் செய்தார் அஞ்சலி தேவி. அவர் நடிக்க, அவரது கணவர் ஆதிநாராயணராவ் இசையமைத்து தயாரித்த பிரமாண்ட திரைப்படம் தான் 'மணாளனே மங்கையின் பாக்கியம்'. 

இதில், காதல் மன்னன் ஜெமினி கணேசனுக்கு ஜோடியாக அஞ்சலி தேவி நடித்திருப்பார். நடிகை அஞ்சலி தேவியின் சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான அஞ்சலி பிக்சர்ஸ் சார்பில் உருவான இப்படத்தை வேதாந்த ராகவையா இயக்கி இருந்தார்.

50 வயதைக் கடந்த தமிழ் ரசிகர்களுக்கு அஞ்சலிதேவி என்றதுமே சட்டென்று நினைவுக்கு வருவது ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அழைக்காதே நினைக்காதே அவைதனிலே என்னையே ராஜா ஆருயிரே’ என்ற பாடல் தான். 

இந்த பாடல் காட்சியில் இடம்பெற்ற அஞ்சலி தேவியின் நளினமான நடனம் அப்போது பரவலாக பேசப்பட்டது. அந்த அளவுக்கு அவரது நடனம் என்றைக்கும் ரசிக்கக்கூடிய வகையில் படமாக்கப்பட்டிருக்கும். இந்த பாடலை பி.சுசீல அருமையாக பாடியிருப்பார்.

தெலுங்கிலும் தமிழிலும் ஒரே சமயத்தில் எடுக்கப்பட்ட இப்படம் 1957 மே 24 ஆம் தேதி வெளியானது. இப்படம் வெளியாகி நேற்றுடன் 66 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’ இன்று 67-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அஞ்சலிதேவியை மனதில் வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் இது.

ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழ் இருமொழிகளில் தயாரித்தனர். இரண்டிலும் அஞ்சலிதேவி தான் நாயகி. தெலுங்கில் நாகேஸ்வரராவும், தமிழில் ஜெமினி கணேசனும் நாயகர்கள். மாயாஜால காட்சிகள், தாய்க்குலம் சென்டிமென்ட், அம்புலிமாமாவில் வரும் அத்தனை ஆவி, பூத, புராண சம்பவங்களும் இந்தப் படத்தில் நிரம்பியிருந்தது.

உச்சத்தில் இருந்த நடிகை அஞ்சலி தேவிக்காகவே உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் இந்த மணாளனே மங்கையின் பாக்கியம். ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டது. இரண்டு திரைப்படத்திலுமே அஞ்சலிதேவி தான் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

தெலுங்கு மொழியில் நாகேஸ்வரராகும் தமிழ் மொழியில் ஜெமினி கணேசனும் நாயகர்களாக நடித்தனர். தெலுங்கில் அம்புலி மாமா என வெளியிடப்பட்ட அந்த திரைப்படத்தில் ஆவி, பூதம் என அனைத்து புராண சம்பவங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன அதேபோல தமிழிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

அப்போது இதுபோன்ற மாயாஜால கதைகளுக்கு மிகப்பெரிய மவுசு இருந்தது அதனால் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றன. அஞ்சலிதேவி இருந்த ஒரே காரணத்தினால் இந்த திரைப்படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் திரையரங்குகளில் வந்து குவிந்தனர். இன்றும் இது போன்ற திரைப்படங்களுக்கு மவுசு இருந்து தான் வருகிறது.

தற்போது வெளியான அரண்மனை 4 திரைப்படம் கூட மிகப் பெரிய அளவில் வசூல் சாதனை செய்து திரையரங்குகளில் ஓடி வருகின்றன. அப்பொழுது மாயாஜால கதையை அடிப்படையாகக் கொண்டு மணாளனே மங்கையின் பாக்கியம் திரைப்படம் வெற்றிவாகை சூடி உள்ளது.

நேற்று ரிலீசானது போல் உள்ளது. ஆனால் 66 ஆண்டுகள் உருண்டோடியது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது. காலங்கள் உருண்டோடினாலும் அஞ்சலி தேவியின் பிரமாதமான நடிப்பில் இந்தப்படமும் ஒரு மிகப்பெரிய மைல்கல்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்