தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Aandavan Kattalai: பாடல்கள் சூப்பர் ஹிட்.. அழகாகச் ஜொலித்த தேவிகா.. சிவாஜியின் ஆண்டவன் கட்டளை.. பாடலுக்காக கூடிய கூட்டம்

Aandavan Kattalai: பாடல்கள் சூப்பர் ஹிட்.. அழகாகச் ஜொலித்த தேவிகா.. சிவாஜியின் ஆண்டவன் கட்டளை.. பாடலுக்காக கூடிய கூட்டம்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 12, 2024 06:15 AM IST

Aandavan Kattalai: சிவாஜி - தேவிகா ஜோடி தொடர்ச்சியாக இணைந்ததிற்கு பத்மினி திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு சற்று விலகி இருந்ததும் ஒரு காரணம். அந்த இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் சிவாஜி கணேசனின் பொருத்தமான ஜோடியாக வலம் வந்தார் தேவிகா.

பாடல்கள் சூப்பர் ஹிட்.. அழகாகச் ஜொலித்த தேவிகா.. சிவாஜியின் ஆண்டவன் கட்டளை.. பாடலுக்காக கூடிய கூட்டம்
பாடல்கள் சூப்பர் ஹிட்.. அழகாகச் ஜொலித்த தேவிகா.. சிவாஜியின் ஆண்டவன் கட்டளை.. பாடலுக்காக கூடிய கூட்டம்

ட்ரெண்டிங் செய்திகள்

1961 முதல் 1965 ம் ஆண்டுகளில் எம்.ஜி.ஆர் - சரோஜா தேவி, சிவாஜி - தேவிகா, ஜெமினி சாவித்ரி ஜோடிகள் ரசிகர்களின் ஆதர்ச ஜோடிகளாக வலம் வந்தனர்.

சிவாஜி - தேவிகா ஜோடி தொடர்ச்சியாக இணைந்ததிற்கு பத்மினி திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு சற்று விலகி இருந்ததும் ஒரு காரணம். அந்த இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் சிவாஜி கணேசனின் பொருத்தமான ஜோடியாக வலம் வந்தார் தேவிகா.

அப்படி அவர்கள் இருவரும் இணைந்து நடித்து 1964 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ ஆண்டவன் கட்டளை’. இந்தப்படத்தை பி.எஸ்.வீரப்பா தயாரித்து இருந்தார். விவேகானந்தர் போல் பரம புத்தனாக வாழும் பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடித்த சிவாஜி கணேசனை அவரது மாணவி கதாபாத்திரத்தில் நடித்த தேவிகா விரட்டி விரட்டி காதலிக்க, ஒரு கட்டத்தில் ஆண்மையின் பலவீனத்தால் தேவிகாவிடம் சரணடைகிறார் சிவாஜி.

அப்படியே இருவரும் டூயட் பாடிக்கொண்டிருக்க தேவிகா சென்ற கப்பல் தண்ணீருக்குள் சென்று விடுகிறது. இதனையடுத்து சிவாஜிதான் தேவிகாவிவை கொன்று விட்டார் காவல்துறை அவரை சிறையில் அடைக்க, இதைக்கேள்விப்பட்ட சிவாஜியின் தாய் இறந்து விடுகிறார். அதன் பின்னர் என்ன ஆனது? என்பது படத்தின் மீதிக்கதை!

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்தத்திரைப்படம் பத்திரிகைகளின் விமர்சனத்தால் எதிர்பார்த்த வெற்றியை பெற வில்லை. குறிப்பாக சிவாஜி கணேசனின் மிகையான நடிப்பு கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. ஆலயமணியைப் போலவே நான்கு தியேட்டர்களில் 100 நாட்களைக் கடந்து சாதனை படைக்கும் என வீரப்பா எண்ணிய நிலையில், அவரது எண்ணம் அப்படியே மாறி 50 நாட்களைத் தாண்டி மட்டுமே படம் ஓடியது.

அமைதியான நதியினிலே ஓடம்

இந்த திரைப்படத்தில் இந்த பாடல் இன்று வரை அழியாமல் இருந்து வருகிறது. இந்த பாடலை வித்தியாசமாக படமாக்க வேண்டும் என இயக்குனர் நினைத்துள்ளார். படகில் சிவாஜி மற்றும் தேவிகா இருவரும் பயணம் செய்வது போல இந்த பாடலை எடுக்கலாமென இயக்குனர் நினைத்துள்ளார். இவர்கள் படையில் செல்லும் பொழுது அருகில் இருக்கக்கூடிய பாலத்தின் மேல் ரயில் சென்றால் நன்றாக இருக்கும் என நினைத்து முடிவு செய்துள்ளார்.

அதற்குப் பிறகு பழனியில் இருந்து உடுமலைப்பேட்டை வரக்கூடிய ரயிலின் நேரம் அறிந்து அதற்கு ஏற்ற போல படப்பிடிப்பு செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளனர். இந்த செய்தி ரசிகர்களுக்கு தெரிந்துள்ளது. உடனே அனைவரும் சிவாஜியை பார்ப்பதற்காக கூட்டம் கூட்டமாக வந்துள்ளனர். இந்த ரயில் தான் அந்த இடத்தில் செல்ல போகிறது என தகவல் தெரிந்து உடுமலைப்பேட்டையில் இருந்து புறப்படும் ரயிலில் பல ரசிகர்கள் ஏறியுள்ளனர்.

இந்தப் படகு கேரளாவிலிருந்து வரவழைக்கப்பட்டு உள்ளது. கடுமையான உழைப்புக்கு என்றும் அழிவு கிடையாது என்பதற்கு இந்த பாடல் ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டாகும். அருமையான கண்ணதாசன் வரிகளுக்கு அழகான திரை வடிவம் கொடுத்தார் இயக்குனர்.

ஆனால் வெற்றி விழா கொண்டாடவில்லை. ஆனால் தேவிகா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். குறிப்பாக ‘அழகே வா அருகே வா’ பாடலில் தேவிகா விழியால் வெளிப்படுத்திய நடிப்பு வேறு ரகமாய் அமைந்திருக்கும். இந்தப்படத்தின் ஆகப்பெரும் அடையாளமாக ‘ஆறு மனமே ஆறு’ பாடல் இன்று வரை ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்தப்பாடலில் எட்டு குறள்களை உள் புகுத்தி கண்ணதாசன் எழுதிய வரிகள் இன்றும் நம் வாழ்க்கைக்கான பாடம்!

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.