தமிழ் செய்திகள்  /  Entertainment  /  It Has Been 58 Years Since The Release Of The Mgr Starrer Naan Aanaiyittal

Naan Aanaiyittal : ஒருபக்கம் காதல்..மறுபக்கம் வேலையாவின் சூழ்ச்சி.. 58-ம் ஆண்டில் நான் ஆணையிட்டால் திரைப்படம்!

Divya Sekar HT Tamil
Feb 04, 2024 04:50 AM IST

எம்.ஜி.ஆர், கே.ஆர்.விஜயா, சரோஜா தேவி, நம்பியார் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த நான் ஆணையிட்டால் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 58 ஆண்டுகள் ஆகிறது.

 நான் ஆணையிட்டால் திரைப்படம்
நான் ஆணையிட்டால் திரைப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

இப்படத்தில் பாண்டியனாக எம்ஜிஆர். மாலா எனும் கதாபாத்திரத்தில் கே.ஆர்.விஜயா. கண்ணகியாகவும் காவேரியாகவும் சரோஜாதேவி. வேலய்யாவாக நம்பியார். மேனேஜராக ஆர்.எஸ்.மனோகர். கொள்ளைக்கூட்டத் தலைவன் முத்துவீரனாக ஓ.ஏ.கே.தேவர். செழியன் எனும் கேரக்டரில் அசோகன் நடித்து இருப்பார்கள்.

இப்படத்தில் கொள்ளைக்கூட்டம் மிகப்பெரியது. திட்டமிட்டு, கொள்ளையடிப்பதில் கெட்டிக்காரர்கள். இந்தக் கொள்ளைக் கூட்டத்துக்கு தலைவன் சொல்வது தான் வேத வாக்கு. தலைவர் சொல்வதை கேட்டு அதன்படியே செயல்படுவார்கள். ஆனால் அந்தக் கூட்டத்தில் இருந்த பாண்டியா, கொஞ்சம் கொஞ்சமாக மனம் திருந்துகிறான். திரும்பி, பழைய வாழ்க்கைக்கே செல்லவேண்டும் என விரும்புகிறான்.

கொள்ளையடிப்பது பாவம் இனி அந்த செயலை செய்யக்கூடாது என சிந்திக்கிறான். திருந்தி வாழ்வதே நல்லது. இனி வாழ்க்கையில் இந்த தவறை செய்யக்கூடாது என முடிவெடுத்து அதன்படி செயல்பட முடிவெடுக்கிறான். தன் தலைவனிடம் தன் கருத்தைச் சொல்லுகிறான். புரியவைக்க முயலுகிறான்.

பாண்டிய சொன்னதை கேட்ட தலைவனுக்கு எல்லாமும் புரிகிறது. தலைவனும் இனி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட கூடாது என முடிவெடுக்கிறார். செய்த பாவமெல்லாம் போதும் என்று தன் குழுவினரிடம் அறிவிக்கிறார் தலைவர். அக்கூட்டத்தில் அனைவருக்கும் இந்த முடிவு சரி என்று தோன்றுகிறது. அவர்களும் நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள். இனி நேர்மையான தைரியமாக நடக்கலாம் என்று பெருமிதம் கொள்கிறார்கள்.

ஆனால், அந்தக் கூட்டத்தில் இருக்கும் வேலையாவுக்கு இதில் உடன்பாடில்லை. இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறான். இப்படி நம் கொள்ளைத் தொழிலையே அழித்த பாண்டியா மீது ஆத்திரம் கொள்கிறான். ஒரு கொலையைச் செய்துவிட்டு, அந்தக் கொலையை பாண்டியா மீது போடுகிறான். அதில் இருந்து தப்பிக்க வழி தேடுகிறார் பாண்டியா.

இந்த சமயத்தில், பணக்காரர் ஒருவருக்கு மகனாக நடிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அங்கே மேனேஜர் குமார் தீய செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான். அவனுக்கு பாண்டியாவின் வருகை இடையூறாக இருக்கிறது.அப்போது வேலையாவும் மேனேஜர் குமாரும் கூட்டு சேர்ந்து பாண்டியாவை அழிக்க திட்டம் போடுகிறார்கள். இதன் நடுவே பாண்டியாவுக்கு காதல் மலர்கிறது. ஒருபக்கம் காதல், இன்னொரு பக்கம் வேலையாவின் சூழ்ச்சி, மற்றொரு பக்கம் மேனேஜர் குமாரின் சதி எல்லாவற்றையும் சமாளித்து, அவற்றிலிருந்து பாண்டியா எப்படி வெளியே வந்தார்? காதல் வாழ்க்கை ஜெயித்ததா என்பது தான் படத்தின் கதை.

இப்படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். அனைத்து பாடல்களுமே ஹிட் என்று சொல்லலாம். குறிப்பாக 

”தாய் மேல் ஆணை..

தமிழ் மேல் ஆணை..

தாய் மேல் ஆணை

தமிழ் மேல் ஆணை

குருடர்கள் கண்ணை திறந்து வைப்பேன்

தனியானாலும் தலை போனாலும்

தீமைகள் நடப்பதை தடுத்து நிற்பேன்”பாடல் இன்றும் மவுசு குறையாமல் ஒலித்து கொண்டு இருக்கிறது. இப்படம் வெளியாகி இன்றுடன் 58 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.