தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Anbe Vaa: எம்ஜிஆரின் ஒரே படம்.. காதல் கலாட்டா நிறைந்த அன்பே வா.!

Anbe Vaa: எம்ஜிஆரின் ஒரே படம்.. காதல் கலாட்டா நிறைந்த அன்பே வா.!

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 14, 2024 05:00 AM IST

57 Years of Anbe Vaa: அன்பே வா திரைப்படம் இன்றுடன் வெளியாகி 57 ஆண்டுகளாகின்றன.

அன்பே வா
அன்பே வா

தமிழ் சினிமாவிற்கு ஒரு காலத்தில் ராஜாவாக வாழ்ந்து வந்தவர் எம்ஜிஆர். சினிமாவை ஆண்டது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டையும் ஆளும் பொறுப்பை தமிழ் மக்கள் அவருக்கு கொடுத்தனர். தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்து வந்தது எம்.ஜி.ஆருக்கு பல வித்தியாசமான திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளனர்.

சில நடிகர்களுக்கு சில கூட்டணி மிகவும் அபூர்வமாக அமையும் அதற்குப் பிறகு அந்த கூட்டணி அமையவே அமையாது. அப்படி எம்ஜிஆர் திரை வாழ்க்கையில் ஏவிஎம் நிறுவனம், இயக்குனர் ஏ.சி.திருலோக சந்தர இவர்களின் கூட்டணியில் அமைந்த வித்தியாசமான திரைப்படம் தான் அன்பே வா.

அவருடைய திரைப்படங்களில் இது மிகவும் வித்தியாசமான கதை களத்தை கொண்ட திரைப்படமாகும். முழுவதும் காதலை அடிப்படையாகக் கொண்ட கேலிச்சித்திரமாக இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. இந்த திரைப்படம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு மிகவும் புதிதாக இருந்தது.

தனது சினிமா பயணத்தில் எம்ஜிஆர் நமது பாதையை விட்டு என்றுமே தவறியது கிடையாது அதன் காரணமாகவே அவர் வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்து வந்தார் ஆனால் அவர் பாதையை விட்டு சற்று தள்ளு நடந்த இடம் தான் இந்த அன்பே வா திரைப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

இப்படி ஒரு கதைக்களத்தை எம்ஜிஆர் ஒப்பிட்டு பார்க்கையில் பலரும் யோசித்தனர் அந்த தைரியம் ஏவிஎம் நிறுவனத்திற்கு மட்டுமே இருந்தது. இதுவரை எம்ஜிஆரை வைத்து திரைப்படம் எடுக்காத ஏவிஎம் நிறுவனம் முதல் முறையாக அன்பே வா திரைப்படத்தில் இணைந்தது.

ஏவிஎம் நிறுவனத்தோடு எம்ஜிஆர் நடித்த ஒரே படமும் இதுதான் 1966 ஆம் ஆண்டு பொங்கல் அன்று இந்த திரைப்படம் வெளியானது மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று உச்சகட்டத்தில் திரையரங்குகளில் கொடிகட்டி பறந்தது.

கதை முழுக்க சிம்லா பகுதியில் எடுக்கப்பட்டதால், ஈஸ்ட்மேன் கலரில் சிம்லா பகுதிகள் மக்களுக்கு விருந்தாக அமைந்தது. எம்ஜிஆர் திரைப்படத்தில் அடிப்படையாக என்னென்ன இருக்குமோ அது எதுவுமே இந்த திரைப்படத்தில் இருக்காது. குறிப்பாக சண்டை காட்சிகள் முழுவதுமாக தவிர்க்கப்பட்டிருக்கும்.

முழுக்க முழுக்க காதல் மற்றும் நகைச்சுவை இந்த இரண்டையும் வைத்து திரைப்படம் முழுமையாக நகரும் இந்த திரைப்படத்தில் வில்லனும் கிடையாது சண்டையும் கிடையாது எம்ஜிஆருக்கு என்று யாருமே கிடையாது.

மன உளைச்சலுக்கு ஆளான தொழிலதிபராக விளங்கக்கூடிய எம்ஜிஆர் ஓய்வெடுக்க தனது பங்களாவிற்கு சிம்லா வருகிறார். தனது பங்களாவில் வேறொரு குடும்பம் வாடகைக்கு இருப்பதை கண்டு முதலில் கோபம் அடைந்தாலும் பின்னர் வழிப்போக்கன் போல் அந்த பங்களாவிற்குள் நுழைந்து கதாநாயகியான சரோஜா தேவியோடு அவர் அடிக்கும் லூட்டி தான் இந்த திரைப்படத்தின் அடித்தளமாகும்.

பற்றாக்குறைக்கு எம்ஜிஆர் நாகேஷ் கூட்டணி சேர்ந்து இருப்பார் இருவரும் சேர்ந்து சரோஜாதேவியோடு அடிக்கும் லூட்டி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அளவிற்கு இருக்கும். எம்ஜிஆரின் திரைப்படங்களில் அன்பே வா திரைப்படம் என்றுமே தவிர்க்க முடியாத தனித்துவமான திரைப்படமாகும்.

திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றனர் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில், வாலி எழுத்தில் அனைத்து பாடல்களும் இன்று வரை தரம் குறையாமல் ரசிகர்கள் மத்தியில் வாழ்ந்து வருகிறது.

தற்போது இந்த திரைப்படத்தை பார்த்தால் கூட ஏதோ புதிதாக வெளியான திரைப்படம் போல் இருக்கும் அந்த அளவிற்கு திரைக்கதையும், படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்களும் இயல்பின் உச்சத்தில் அமைந்திருக்கும். இன்றுடன் இந்த திரைப்படம் வெளியாகி 57 ஆண்டுகள் ஆகின்றன. எம்.ஜி.ஆர் திரைப்படத்தில் மறக்கவே முடியாத காதல் காமெடி திரைப்படம் இதுதான்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9