MGR: சரோஜா தேவியிடம் பேசாமலேயே நடித்த எம்ஜிஆர்.. கருத்து மோதலில் உருவான படம் !
50 years of Petralthan Pillaiya: எம்ஜிஆர் நடித்து வெளியான பெற்றால் தான் பிள்ளையா திரைப்படம் வெளியாகி இன்றுடன் 57 ஆண்டுகள் ஆகின்றன.

மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுத்து தமிழ் மக்களின் தெய்வமாக வாழ்ந்தவர் எம்ஜிஆர். அதனை வைத்து தமிழ்நாட்டை ஆளும் பதவியை மக்கள் அனைவரும் அவர் கையில் கொடுத்தனர். அரசியல் மற்றும் சினிமா இந்த இரண்டிலும் தலைசிறந்த மன்னராக விளங்கினார் எம்ஜிஆர்.
திரைப்படங்கள் தான் இவருடைய ஆணி வேர். இவருடைய திரை பயணங்களில் மிகவும் முக்கிய திரைப்படமாக அமைந்தது பெற்றால் தான் பிள்ளையா. ஒரு சில படங்கள் வெற்றி பெறாமல் போனாலும் இவர் நடித்த 90% திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன. அப்படிப்பட்ட திரைப்படங்களில் ஒன்றுதான் இந்த பெற்றால் தான் பிள்ளையா.
கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் ஆறுதாஸ் திரைக்கதையில் உருவானது இந்த திரைப்படம். திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றனர் இதற்கு இசையமைத்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
திரைப்படத்தில் இடம் பெற்ற நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி என்ற பாடல் இன்றுவரை சமூக சீர்திருத்த பாடலாக இருந்து வருகிறது. ஒரு பிள்ளை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த ஒரு பாடல் போதும் என பொது மேடையில் பலரும் இதனை பாடி வருகின்றனர்.
கதை
இளைஞர் ஒருவரிடம் ஏமாற்றம் அடைந்த இளம் பெண் ஒருவர் ஆண் குழந்தை ஒன்றை பெற்று எடுக்கிறார். அதனை வளர்க்க முடியாமல் வறுமையில் வாடும் அந்த இளம் பெண் அருகே இருக்கும் கோயிலில் வைத்து விட்டு சென்று விடுகிறார்.
நாடோடியாக திரிந்து வரும் எம்ஜிஆர் அந்த குழந்தையை பார்க்கிறார். அந்த குழந்தையை விட்டுச் செல்ல மனமில்லாமல் அவரின் எடுத்து வளர்க்கிறார். ஒரு தந்தையைப் போல அந்த குழந்தையை 5 வருடம் கல்வி கொடுத்து, உணவு கொடுத்து வளர்க்கிறார்.
தனது அதீத பாசத்தை அந்த குழந்தையின் மீது வைத்து வளர்க்கிறார் எம்ஜிஆர். கடைசியில் அந்த இளம் பெண் தனது காதலனோடு சேர்ந்து விடுகிறார். மிகப்பெரிய பணக்காரராகவும் மாறிவிடுகிறார். அதற்குப் பிறகு இருவரும் சேர்ந்து தனது குழந்தையை தேடும் பணியில் ஈடுபடுகின்றனர்.
அப்போது அந்த குழந்தையை எம்ஜிஆர் வளர்க்கிறார் என கண்டுபிடித்து அந்த குழந்தையின் அழைத்துச் சென்று விடுகின்றனர். இதுவரை எந்த திரைப்படத்திலும் எம்ஜிஆர் இவ்வளவு சோகமாக நடித்து யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு மனம் உருகி எம்ஜிஆர் நடித்திருப்பார்.
கடைசியில் அந்த குழந்தையின் குடும்பத்தோடு எம்ஜிஆர் இணைந்து விடுகிறார். இந்த திரைப்படத்தில் சரோஜாதேவி கதாநாயகியாக நடித்திருப்பார். எம்ஜிஆர் சரோஜாதேவி இந்த ஜோடிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருந்தது. அப்படிப்பட்ட ஜோடியின் கடைசி படம் இதுதான்.
இதற்குப் பிறகு எம்ஜிஆர் மற்றும் சரோஜாதேவி இருவரும் இணைந்து நடிக்கவில்லை. இந்த திரைப்படத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இந்த திரைப்படத்தில் நடிக்கும் பொழுது இருவரும் பேசாமலேயே நடித்துள்ளனர். அந்த அளவிற்கு எம்ஜிஆர் சரோஜாதேவி மீது கடுமையான கோபத்தில் இருந்துள்ளார். ஏதாவது கூறவேண்டும் என்றாலும் இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சு மூலமாக சரோஜாதேவியிடம் தெரிவித்துள்ளார்.
இந்த திரைப்படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி உள்ளது. 1975 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் மலையாளத்தில் அஷ்டமி ரோகினி என ரீமிக்ஸ் செய்யப்பட்டது அந்த திரைப்படத்தில் பிரேம் நசீர் நாயகனாக நடித்திருந்தார்.
இன்று வரை இந்த திரைப்படத்தை நினைவில் வைத்திருக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியது அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரே பாடல் தான் நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி இந்த பாடலை எழுதியது கவிஞர் வாலி. ஒரு நல்ல பாடல் ஒரு திரைப்படத்தை கடைசி வரை கொண்டு செல்லும் என்பதற்கு பெற்றால் தான் பிள்ளையா என்ற திரைப்படம் ஒரு மிகப்பெரிய உதாரணமாகும்.

டாபிக்ஸ்