தமிழ் செய்திகள்  /  Entertainment  /  It Has Been 56 Years Since The Release Of Panama Pasama

Panama Pasama: மகளை விரட்டியடித்த பணக்கார தாய்.. ஜெயிக்கப் போவது பணமா பாசமா!

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 23, 2024 05:00 AM IST

பணமா பாசமா திரைப்படம் இன்றுடன் வெளியாகி 56 ஆண்டுகள் ஆகின்றன

பணமா பாசமா
பணமா பாசமா

ட்ரெண்டிங் செய்திகள்

ஒரு பக்கம் அதிரடி மற்றும் வரலாற்று திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருந்தன. மற்றொரு பக்கம் கே எஸ் கோபாலகிருஷ்ணன் மற்றும் பாலச்சந்தர் உள்ளிட்டோர் குடும்ப திரைப்படங்களில் கொடுத்து வந்தனர்.

அப்படிப்பட்ட இயக்குனரின் திரைப்படத்தில் ஒன்றுதான் பணமா பாசமா. இந்த திரைப்படத்தில் மிக முக்கிய வெற்றி என்னவென்று கூறினால் அத்தனை கதாபாத்திரங்களும் தங்களது வேலையை சரியாக செய்திருப்பார்கள்.

பணக்காரராக இருக்கக்கூடிய வரலட்சுமி திமிர் பிடித்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அவரது வீட்டில் அவர் வைத்தது தான் சட்டம். கணவரை ஆளுமை செய்து கொண்டு மிகவும் திமிர் பிடித்த பெண்ணாக வரலட்சுமி நடித்திருப்பார். அவருக்கு இரண்டு பிள்ளைகள் ஒருவர் நாகேஷ், மற்றொருவர் சரோஜாதேவி.

பணக்கார வீட்டில் இருக்கக்கூடிய சரோஜாதேவி ஏழை ஓவியராக இருக்கக்கூடிய ஜெமினி கணேசனை காதலிக்கின்றார். ஆனால் ஜெமினி கணேசன் சரோஜா தேவியை கண்டு கொள்வதே கிடையாது. விதவிதமான உடைகளை அணிந்து அவரை காதலிப்பதற்காக முயற்சி செய்கிறார் ஆனால் ஜெமினி கணேசன் அதற்கு பிடி கொடுக்கவில்லை.

ஒரு நாள் மற்றவர்களிடம் ஜெமினி கணேசன் பேசிக் கொண்டிருப்பதை கேட்டு விட்டு புடவை அணிந்து பூ சூடி அவர் முன்பு போய் நிற்கின்றார் சரோஜாதேவி. பின்னர் இருவரும் காதல் செய்து திருமணம் செய்து கொள்கின்றனர். இந்த திருமணத்தை பணக்கார வரலட்சுமி ஏற்றுக்கொள்ளவில்லை வீட்டை விட்டு அனுப்பி விடுகிறார்.

இதனை காரணமாக வைத்து தனது சகோதரியை போலவே சாலையில் இலந்தை பழம் விற்கக்கூடிய விஜய் நிர்மலாவை திருமணம் செய்து கொள்கிறார். வீட்டிற்கு வரக்கூடிய விஜய நிர்மலா மாமியாரோடு சரிசமமாக போராடுகிறார். பின்னர் தீபாவளி திருநாளில் வரலட்சுமி தனது பெண்ணுக்காக விலை உயர்ந்த புடவை ஒன்றே அனுப்புகிறார். சரோஜாதேவி திருப்பி தனது தாய்க்கு ஒரு நூல் புடவையை அனுப்புகிறார்.

இறுதிக்கட்டத்தில் தனது மகள் அனுப்பிய நூல் புடவையை கட்டிக்கொண்டு வரலட்சுமி மகளை பார்க்கச் செல்கிறார். கதையைக் கேட்பதற்கு மிகவும் சாதாரணமாக இருந்தாலும் திரைக்கதையில் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் வெற்றியடைந்திருப்பார்.

அனைத்து காட்சிகளும் இந்த திரைப்படத்தில் மிகவும் சுவாரசியமாக இருக்கும். அதற்கு பஞ்சமே கிடையாது. திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றன. எலந்த பழம்..எலந்த பழம்.. என்று பாடகி எல். ஆர்.ஈஸ்வரி குரலில் ஒலித்த பாடல் இன்று வரை தரம் குறையாமல் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கின்றது.

இந்த திரைப்படம் இன்றுடன் வெளியாகி 56 ஆண்டுகள் ஆகின்றன. சிறந்த திரைக்கதைக்கு என்றும் அழிவில்லை என்பதற்கு பணமா பாசமா திரைப்படம் ஒரு மிகப்பெரிய உதாரணமாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்