Manakanakku: விஜயகாந்தோடு சேர்ந்த கமல்ஹாசன்.. வரலாற்றுத் திரைப்படம்.. ராதா போட்ட மனக்கணக்கு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Manakanakku: விஜயகாந்தோடு சேர்ந்த கமல்ஹாசன்.. வரலாற்றுத் திரைப்படம்.. ராதா போட்ட மனக்கணக்கு

Manakanakku: விஜயகாந்தோடு சேர்ந்த கமல்ஹாசன்.. வரலாற்றுத் திரைப்படம்.. ராதா போட்ட மனக்கணக்கு

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 14, 2024 05:41 AM IST

Manakanakku: தமிழ் சினிமாவில் நடிப்பு நாயகனாக திகழ்ந்துவரும் கமல்ஹாசன் வந்து செல்லும் காட்சிகளில் அவருக்கு ஈடு கொடுத்து அவரை விட ஒரு படி மேலாக நடிகர் விஜயகாந்த் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இன்று வரை வரலாற்று காவியமாக இந்த திரைப்படத்தில் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

விஜயகாந்தோடு சேர்ந்த கமல்ஹாசன்.. வரலாற்றுத் திரைப்படம்.. ராதா போட்ட மனக்கணக்கு
விஜயகாந்தோடு சேர்ந்த கமல்ஹாசன்.. வரலாற்றுத் திரைப்படம்.. ராதா போட்ட மனக்கணக்கு

அந்த காலகட்டத்தில் உச்ச நடிகர்களாக பலர் வலம் வந்தாலும் மற்ற நடிகர்களுக்கு உதவியாக துணை கதாபாத்திரங்களில் நடித்துக் கொடுத்து சகஜமான நட்போடு திகழ்ந்து வந்தார்கள். நடிகர் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் எத்தனையோ திரைப்படங்கள் நடித்து மக்கள் மத்தியில் பெயர் பெற்று வெற்றி நாயகனாக உருவானார்கள்.

அதற்குப் பிறகு களத்தில் இறங்கி வெற்றி வாகை சூடிய நடிகர் விஜயகாந்த் எத்தனையோ நடிகர்களுக்கு வாழ்க்கையாக மாறியுள்ளார். மேலும் பல முக்கிய நடிகர்களின் திரைப்படத்தில் துணை கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்.

ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இன்று வரை ஒரு சில நடிகர்கள் ஒன்று சேராமல் தனித்தனியாகவே நடித்து வருவது இருந்து வருகிறது. முக்கியமான தனது நண்பர்கள் திரைப்படத்தில் மட்டும் கமல்ஹாசன் நடித்துக் கொடுப்பார். மற்றபடி எந்த கதாபாத்திரங்களிலும் களமிறங்க மாட்டார் குறிப்பாக அவர் வெற்றிவாகு சூடிக்கொண்டிருந்த எண்பதுகளில் களமிறங்குவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும்.

அப்படிப்பட்ட காலகட்டத்தில் நடிகர் விஜயகாந்த் நடித்த மனக்கணக்கு என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோல் செய்திருப்பார் நடிகர் கமல்ஹாசன். இந்த திரைப்படம் 1986 ஆம் ஆண்டு வெளியாகி உள்ளது. இதில் நடிகர் விஜயகாந்த் மற்றும் நடிகர் கமல்ஹாசன் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இதுவே இவர்கள் இணைந்து நடித்த ஒரே திரைப்படமாகும்.

இயக்குனர் ஆர் சி சக்தி இயக்கத்தில் விஜயகாந்த், சரத் பாபு, ராஜேஷ், ராதா, அம்பிகா உள்ளிட்டோர் நடித்த இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் முக்கிய திரைப்படமாக பார்க்கப்படுகிறது. இயக்குனர் ஆர்ச்சி சக்தி கமல்ஹாசனின் நெருங்கிய நண்பராகத் திகழ்ந்து வந்துள்ளார்.

இணைபிரியாத நண்பர்களாக கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஆர்.சி சக்தி விளங்கி வந்துள்ளனர். அதன் காரணமாக இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விருந்தினராக கமல்ஹாசன் நடித்திருப்பார். மேலும் இந்த படத்தில் முக்கிய சிறப்பு என்னவென்றால் தமிழ் சினிமாவில் உச்ச நடிகைகளாக விளங்கி வந்த சகோதரிகள் அம்பிகா மற்றும் ராதா சொந்த குரலில் பேசி இந்த திரைப்படத்தில் நடித்திருப்பார்கள். அவர்கள் சொந்த குரலில் பேசிய ஒரே திரைப்படமும் இதுதான்.

இந்த திரைப்படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்துள்ளார். கமல்ஹாசன் வந்து செல்லும் ஒரு சில நிமிடங்கள் கூட தான் இருக்கும் தடத்தை அழகாக பதித்து சென்றிருப்பார். இந்த திரைப்படம் இயக்குனர்கள் ஆர் சி சக்தி மற்றும் ரங்கராஜன் சேர்ந்து இயக்கிய திரைப்படமாகும்.

தமிழ் சினிமாவில் நடிப்பு நாயகனாக திகழ்ந்துவரும் கமல்ஹாசன் வந்து செல்லும் காட்சிகளில் அவருக்கு ஈடு கொடுத்து அவரை விட ஒரு படி மேலாக நடிகர் விஜயகாந்த் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இன்று வரை வரலாற்று காவியமாக இந்த திரைப்படத்தில் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

நடிகை ராதா செய்த செயல்

படம் இயக்குவதற்கு முன்பு இயக்குனர் சக்தி ஒப்பனை கலைஞராக இருந்து வந்துள்ளார். நடிகை ராதாவுக்கு ஒப்பனை கலைஞராக இருந்து வந்த இவர் ராதாவின் மூலம் கேட்டுக்கொண்டு விஜயகாந்த் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியை இணைத்துள்ளார். நடிகை ராதா கேட்டுக் கொண்டதற்காக இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் மற்றும் விஜயகாந்த் இருவரும் சம்மதிக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்த மனக்கணக்கு திரைப்படம் இன்றுடன் 56 ஆண்டுகளாகின்றன. நடிகை ராதா உருவாக்கிய இந்த கூட்டணி இன்றுவரை தமிழ் சினிமாவின் சரித்திர சம்பவமாக திகழ்ந்து வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.