40 Years Of Vidhi: நீதிமன்றத்தால் தோலுரித்த படம்.. பட்டித் தொட்டியெங்கும் கொடி பறந்த பாடல்கள்
விதி திரைப்படம் இன்றுடன் வெளியாகி 40 ஆண்டுகள் ஆகின்றன.

சரியாக 40 ஆண்டுகளுக்கு முன் பெண் உரிமை பாடம் நடத்தி விட்டு ரசிகர்களை திரையரங்களிலிருந்து வெளியே அனுப்பி வைத்த படம் தான் 'விதி' ராமேஸ்வரி எழுதிய கொத்தமலுப்பு என்ற நாவலைத் தழுவி தெலுங்கில் பின்னப்பட்ட படம் தான் நியாயம் காவலி.
இந்த படத்தை தான் நடிகர் திலகம் சிவாஜியின் பெரும்பாலான படங்களை இயக்கிய கே.விஜயன் தமிழில் விதி என்ற பெயரில் ரீமேக் செய்தார். சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார். ஆரூர் தாஸ் தான் வசனகர்த்தா... இந்த படத்தை ஆனந்த வள்ளி பாலாஜி தயாரித்திருந்தார்.
80களில் நடிப்பில் கொடிகட்டி பறந்த போதுதான் நடிகர் மோகன் விதி திரைப்படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார். இந்த காலத்து கன்னி பெண்கள் விரும்புவது சேலை மாலை என்ற தங்கையின் கேள்விக்கு வேலை என்று முற்போக்கு பேசும் பெண்ணாக அழுத்தமான தன் துள்ளல் நடிப்பின் மூலம் ராதாவாக பூர்ணிமா தன்னை வெளிப்படுத்தியிருப்பார்.
