தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  காதலின் தீபம் ஒன்று..மாஸ் ப்ளஸ் க்ளாஸ் படம்.. ரஜினியை மக்கள் நாயகனாக மாற்றிய தம்பிக்கு எந்த ஊரு..!

காதலின் தீபம் ஒன்று..மாஸ் ப்ளஸ் க்ளாஸ் படம்.. ரஜினியை மக்கள் நாயகனாக மாற்றிய தம்பிக்கு எந்த ஊரு..!

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 20, 2024 05:45 AM IST

Thambikku Entha Ooru: சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ரசிக்கும் விதமாக மாஸ் ப்ளஸ் க்ளாஸ் ஹீரோவாக மாற்றிய தம்பிக்கு எந்த ஊரு திரைப்படம் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகள் ஆகிறது.

தம்பிக்கு எந்த ஊரு
தம்பிக்கு எந்த ஊரு

ட்ரெண்டிங் செய்திகள்

ரஜினியை வைத்து இயக்குநர்களுக்கு பக்க பலமாக அமைந்தது எழுத்தாளர் பஞ்சு அருணாச்சலத்தின் கதை, திரைக்கதை அமைப்பு. அந்த வகையில் பஞ்சு அருணாச்சலம் கதையில் கிராமத்து பின்னணியில் உருவாகி மற்றொரு மாஸ் ஹிட் படமாக அ்மைந்ததுதான் தம்பிக்கு எந்த ஊரு.

ஊதரித்தனமாக சுத்தும் ரஜினியை உழைப்பின் அருமை தெரிந்துகொள்வதற்காக அவரது தந்தை விஎஸ் ராகவன், கண்டிப்பான தனது நண்பர் கண்காணிப்பில் இருக்க கிராமத்துக்கு அனுப்புகிறார். நகர வாழ்க்கையில் ஊறிப்போன ரஜினிக்கு கிராமத்து வாழ்க்கை, அதன் எதார்த்தங்களும் கற்றுக்கொடுக்கும் பாடமே தம்பிக்கு எந்த ஊரு ஒன்லைன். மிகவும் சிம்பிளான, தெளிவாக அமைந்திருக்கும் இந்த கதையில் ரஜினி போன்ற ரசிகர் கூட்டத்தை கொண்ட நடிகர் கிடைத்தால் எப்படி மாஸாக உருவாக்க வேண்டுமா மாஸ் ப்ளஸ் க்ளாஸாக உருவாகி ரசிகர்களை கவர்ந்த படமாக தம்பிக்கு எந்த ஊரு உள்ளது.

இப்போது ரஜினிக்கு ஒரு லுக் இருப்பது போல், 80களில் இளமையான தோற்றத்தில் இருந்த ரஜினிக்கு வகுடு எடுத்து தலை சீவிய ஹேர்ஸ்டைல், ஸ்லிம்மான பாடி, ஹேண்ட்ஸமான லுக் என படம் முழுவதிலும் தோன்றும் ரஜினி தனது வழக்கமான ஆக்‌ஷன் பாணியிலிருந்து விலகி காமெடி, ரொமாண்ஸ் என கலக்கியிருப்பார். ரஜினியின் புதுமையான இந்த பாணி சிறியவர், பெரியவர் என அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

வழக்கமாக ரஜினிக்கு வில்லனாக தோன்றும் செந்தாமைரை இந்தப் படத்தில் அவருக்கு காட்ஃபாதராக தோன்றும் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து மற்றொரு சர்ப்ரைஸ் விஷயமாக அமைந்திருக்கும்.

ரஜினியின் எவர்க்ரீன் மெலடி பாடலான காதலின் தீபம் ஒன்று பாடல் இடம்பெறுவது இந்தப் படத்தில்தான். டக் இன் பண்ண பிளாக் அண்ட் ஒயிட் ஷர்ட், பிளாக் பேண்டில், க்ளீன் ஷேவ் முகத்துடன், கூலாக லைட் மூவ்மெண்ட்ஸை வெளிப்படுத்தி ரஜினியின் ஸ்டைல் நடனத்துடன் கூடிய இந்த பாடலின் காட்சியமைப்பை மிஞ்சும் விதமாக எந்த பாடலும் இல்லை என உறுதியாக கூறலாம்.

இந்த பாடலை கம்போசிங் செய்யும் முன் உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இசைமைப்பாளர் இளையராஜா, வாயில் விசில் அடித்தே ட்யூன் காம்போஸ் செய்துள்ளார். பாடலை பாடிய எஸ்பிபி, ஜானிகியும் போன் மூலமே கரெக்‌ஷன்களை கூறி சரி செய்து பாட வைத்துள்ளார். இப்படி உருவான இந்தப் பாடல் இளையராஜாவுக்கு மட்டுமல்ல, ரஜினியின் எவர்கீரின் மெலடி பாடலாகவும் மாறியுள்ளது.

இதேபோல் இந்த படத்தில் ஜனகராஜ் இருந்தும், காமெடிக்கு முக்கியத்துவம் அளிக்கும் காட்சிகளில் வெகுளித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி சிரிக்க வைத்திருப்பார். ஆரம்பத்தில் கிராமத்துக்கு புதியவராக வந்து செந்தாமரையிடம் கெத்து காட்டி குட்டு வாங்கும் காட்சி முதல், கதிரை பக்குவமாக அறுப்பது, மாடு குளிப்பாட்டுவது என எதார்த்தமான காமெடியில் வயிற்றை புண்ணாக்கியிருப்பார்.

குறிப்பாக அடல்ட் புத்தகம் படிக்கும்போது கட்டிலில் பாம்பு வரும் காட்சியில் டைமிங்,ரைமிங் டயலாக், முகபாவணை, உடல்மொழி என அனைத்தையும் வெளிப்படுத்தி சுமார் 2 நிமிடம் வரை பார்வையாளர்களை தன் வசப்படுத்தியிருப்பார். இன்றும் ரஜினியின் மாஸ்டர் பீஸ் காமெடி காட்சியாக இது உள்ளது.

இந்த படத்தில் பாம்பு காட்சி வைத்து அதில் பயப்படுவதுபோல் நடித்தது பெரிய அளவில் ஒர்க்அவுட்டாக அதன் பிறகு காமெடிக்கு முக்கியத்துவமான தனது படங்களில் பாம்பு தொடர்பான காட்சிகளை அடிக்கடி வைத்து வெவ்வேறு விதமான நடிப்பை வெளிப்படுத்தி சிரிக்க வைத்துள்ளார்.

இளைஞர்களை கவரும் விதமாக ஆக்‌ஷன், பழிக்கு பலி போன்ற கதைகளில் நடித்து வந்த ரஜினியை, சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ரசிக்கும் விதமாக மாஸ் ப்ளஸ் க்ளாஸ் ஹீரோவாக மாற்றிய தம்பிக்கு எந்த ஊரு திரைப்படம் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகள் ஆகிறது. இந்த படத்தை ரீவிசிட் செய்வது கண்டிப்பாக புத்துணர்ச்சியான உணர்வையே தரும்..

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்