Pudhumai Penn: கவலையில் பாரதிராஜா.. காற்று வாங்கிய புதுமைப்பெண்.. வசூலுக்கு வழி செய்த எம்ஜிஆர்
Pudhumai Penn: புதுமைப்பெண் திரைப்படம் இன்றுடன் வெளியாகிய 40 ஆண்டுகள் ஆகின்றன. இயக்குனர்களின் இமயமாக விளங்கக்கூடிய பாரதிராஜாவின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத திரைப்படம் இந்த புதுமைப்பெண்.

Pudhumai Penn: தமிழ் சினிமாவில் தனித்துவம் கொண்டு இயக்குனர்கள் எத்தனையோ பேர் உள்ளனர். பலருக்கும் குருவாகவும் திகழ்ந்து வந்துள்ளனர். அப்படிப்பட்ட வரிசையில் இருப்பவர்தான் இயக்குனர் பாரதிராஜா. தற்போது வெற்றியை இயக்குனர்களாக பயணம் செய்து வரும் எத்தனையோ இயக்குனர்களுக்கு குருநாதராக பாரதிராஜா விளங்கி வந்துள்ளார்.
இவர் எடுக்கும் திரைப்படங்கள் அனைத்தும் சமூக கருத்துக்கள் மற்றும் மக்களின் வாழ்வியலை மையமாக வைத்திருக்கும். எத்தனையோ திரைப்படங்கள் வெற்றிகளையும் கண்டுள்ளது. சில படங்கள் தோல்விகளையும் கண்டுள்ளது.
ஆனால் தோல்வியடைந்த திரைப்படம் மீண்டும் வெற்றி பெறமாக மாறியது பாரதிராஜா திரைப்படம் தான். அந்த திரைப்படம் தான் புதுமைப்பெண். இந்த திரைப்படத்தில் ரேவதி, பாண்டியன், ராஜசேகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்துள்ளது.
கதை
வங்கி ஊழியராக பணிபுரிந்து வரும் பாண்டியனை பிராமண சமூகத்தைச் சேர்ந்த பெண்ணாக இருக்கக்கூடிய ரேவதி காதல் திருமணம் செய்து கொள்கிறார். ரேவதியை பாண்டியனின் தாயாருக்கு பிடிக்கவில்லை. ஏனென்றால் ரேவதி ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்தவர். ரேவதியை ஒரு முறை காண வரும் பொழுது அவருடைய தந்தை மகாபாரதம் மற்றும் ராமாயணம் ஆகிய புனித நூல்களை குறித்து இந்த நூல்களில் இருக்கும் பெண்கள் போல் நீ வாழ வேண்டும் என கூறிவிட்டுச் செல்கிறார்.
பாண்டியன் வேலை செய்யும் வங்கியின் மேலாளராக ராஜசேகர் இருக்கிறார். இவர் ஒரு கெட்ட குணம் கொண்ட பெண்கள் மீது அதிக ஈர்ப்பு உள்ள கதாபாத்திரம். பாண்டியனின் மனைவியான ரேவதி மீது ராஜசேகருக்கு ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது.
வங்கியில் பண பரிவர்த்தனையில் ஒரு சிக்கல் ஏற்படுகிறது. அதற்குக் காரணம் பாண்டியன் தான் என குற்றம் சாட்டப்படுகிறது. அந்த சமயத்தில் வரும் மேலாளர் ராஜசேகர் இந்த சிக்கலை நான் நிவர்த்தி செய்து தர வேண்டும் என்றால் உனது மனைவி ரேவதியை என்னோடு அனுப்ப வேண்டும் என கூறுகிறார். இதனால் கோபம் அடைந்த பாண்டியன் ராஜசேகரை தாக்கி கொலை செய்கிறார். பாண்டியன் கைது செய்யப்படுகிறார்.
சிறையில் இருக்கக்கூடிய தனது கணவனை மீட்பதற்காக ரேவதி படாத பாடுபடுகிறார். அதற்குப் பிறகு பல கொடுமைகளை தாங்கிக் கொண்டு தனது கணவன் பாண்டியனை மீட்டெடுத்து வருகிறார் ரேவதி. வெளிய வந்த பிறகு பாண்டியன் ரேவதி நடத்தை மீது சந்தேகப்படுகிறார்.
தனது தந்தையார் கொடுத்த புனித நூல்கள் அனைத்தையும் ஒரு குழி தோண்டி புதைத்து விட்டு வீட்டிலேயே அடைந்து கிடந்த ரேவதி வெளியே செல்கிறார்.
இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றன ஏனென்றால் பின்னணி இசை இளையராஜா. அனைத்து பாடல்களையும் எழுதியது வைரமுத்து.
எம்ஜிஆர்
வெற்றி பெறாமல் போன இந்த திரைப்படம் மீண்டும் வெற்றிகரமாக திரையில் ஓடுவதற்கு எம்.ஜி.ஆர் மிகப்பெரிய முக்கிய காரணமாகும். எம்ஜிஆர் மீது பாரதிராஜா அதிக அன்பு கொண்டவர். திரையரங்குகளில் இருந்து திரைப்படம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றிபெறவில்லை. அதே நேரத்தில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் பாக்யராஜ். இவர் திரைப்படமான முந்தானை முடிச்சு திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றியை கண்டது.
இதனால் கவலைப்பட்ட பாரதிராஜா அப்போது முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர்-ஐ நேரில் சந்தித்த முயற்சி செய்கிறார். பின்னர் எம்ஜிஆர் சந்தித்த பாரதிராஜா நடந்த காரியங்கள் அனைத்தையும் கூறுகிறார். உடனே எம்ஜிஆர் அமைச்சர் ஒருவரை அழைத்து இந்த திரைப்படத்திற்கு வரி விலக்கு கொடுங்கள் எனக் கூறுகிறார்.
பின்னர் இந்த திரைப்படத்திற்கு வரி விலக்கு செய்யப்பட்ட காரணத்தினால் டிக்கெட் விலைகள் குறைக்கப்படுகிறது. அதற்குப் பிறகு இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடுகிறது.
இந்த திரைப்படம் இன்றுடன் வெளியாகிய 40 ஆண்டுகள் ஆகின்றன. இயக்குனர்களின் இமயமாக விளங்கக்கூடிய பாரதிராஜாவின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத திரைப்படம் இந்த புதுமைப்பெண்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்