Poove Poochudava: தனிமையை சிறப்பாக வெளிப்படுத்திய பத்மினி.. அசத்திய நதியா.. பட்டம் பெற்ற சித்ரா
Poove Poochudava: பூவே பூச்சூடவா இந்த திரைப்படம் வெளியாகி 39 ஆண்டுகளாகின்றன. கதையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தற்போது ஒத்துழைப்பு திரைப்படங்கள் வெற்றி காண்கின்றன. அதற்கு முன்னோடி இந்த பூவே பூச்சூடவா திரைப்படம் தான் என்று கூறினால் அது மிகையாகாது.
Poove Poochudava: இயக்குனர் பாசில் எத்தனையோ வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். தனித்துவமான திரை கதையை கொண்டு இயக்குனர்களில் எவரும் ஒருவர். அப்படிப்பட்ட அவருடைய இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் பூவே பூச்சூடவா. அவருடைய திரைப்படத்தில் இருக்கக்கூடிய அனைத்து கதாபாத்திரங்களும் எதுவும் இல்லாமல் தனிமையாக இருப்பார்கள்.
அதுபோலத்தான் இந்த படத்திலும் கதை தொடங்கும். ஒரு வயதான பார்ட்டிக்கு அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்பட கதை தொடங்கும் அந்த பாட்டியின் கதாபாத்திரம் தான் நடிகை பத்மினி. தனிமையில் யாரையும் அண்ட விடாமல் வாழும் பத்மினிக்குப் பின்னால் ஒரு கதை இருக்கும்.
அவருக்கு ஒரே ஒரு மகள் அன்பும் ஆசையும் கொடுத்து வளர்த்திருப்பார். அவர் ஒரு இளைஞனோடு ஓடிவிடுவார். இதனால் ஆதங்கம் தாங்க முடியாமல் மகள் மேல் கோபத்தில் தனியாக வாழ்ந்து கொண்டிருப்பார். பத்மினியின் உலகமே அவருடைய மகள் தான் இந்த சூழ்நிலையில் இருக்கும் பொழுது இப்படி ஒரு சம்பவம் நடந்த பிறகு அவர் வெறுப்பை உமிழும் பாட்டியாக மாறிவிடுவார்.
ஆனால் பத்மினி தனியாக இருக்கின்ற காரணத்தினால் இவரை அந்த ஊரில் இருக்கக்கூடிய அனைத்து மக்களும் கிண்டல் செய்து வருவார்கள். பத்மினியின் நடிப்பை பற்றி கூறத் தேவையில்லை அவர் அந்த கதாபாத்திரத்தை சரியாக நடித்துக் காட்டியிருப்பார்.
பத்மினியின் மகன் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்து விட்டு இறந்து விடுகிறார். அப்போது பத்மினிக்கு ஆசை ஏற்படுகிறது அந்த பேத்தி நம்மை தேடி ஒரு நாள் வந்து விடுவாள் என தன்னந்தனியே நினைத்து மகிழ்ச்சி கொள்கிறார்.
தன்னைத் தேடி அவள் வருவாள் என்பதற்காக தனியாக வாழ்ந்து கொண்டிருந்த பத்து மணி தனது வீட்டு வாசலில் ஒரு காலிங் பெல்லை வைக்கிறார். இப்போதாவது தனது பேட்டி வந்து இதனை அழுத்தி அழைப்பால் என எதிர்பார்த்துக் கொண்டு காத்திருக்கிறார்.
ஆனால் அந்த காலிங் பெல்லை அந்த ஊரில் இருக்கக்கூடிய சிறுவர்கள் அடித்து விட்டு அடித்து விட்டு செல்கின்றனர். இதனால் ஒருநாள் இது தொந்தரவாக பத்மினிக்கு மாறுகிறது. முழுமையான ஏமாற்றத்தோடு பத்மினி காத்துக் கொண்டிருக்கிறார். நடிகை பத்மினி தனது நடிப்பின் மூலம் தனிமை இவ்வளவு கொடுமை என வெளிக்காட்டி இருப்பார். அதனை வெளி காட்ட வைத்தது இயக்குனர் பாசில்.
ஒரு நாள் காலிங் பெல் அடிக்கின்றது குழந்தைகள் தான் நடிக்கிறார்கள் என ஆயுதங்களோடு செல்கிறார்கள் கோபத்தில் சென்று பார்த்தல் அங்கு ஒரு இளம் பெண் நிற்கிறார். இதனைக் கண்டதும் அவருக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் நிற்கிறார். உள்ளே வந்த பேத்தியின் முதலில் எதிர்த்து அதற்குப் பிறகு இணைந்து விடுகிறார்.
கடைசி காட்சியில் பேத்தியை வழி அனுப்பி வைக்கிறார். இந்த இடைப்பட்ட சம்பவம்தான் திரைப்படத்தில் முக்கியமான கட்டமாகும். இவர்கள் இருவரும் இணைந்த பிறகு இயக்குனர் பாசில் வெளிப்படுத்தி இருக்கும் திரை கோணமானது மிகவும் வித்தியாசமாகும். அவர் பாசத்தை இந்த கோணத்தில் பார்த்திருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.
இந்த திரைப்படத்தில் ஜெய்சங்கர், எஸ்.வி. சேகர் உள்ளிட்ட அனைவரும் நடித்துள்ளனர் அவர்களும் தங்களது பங்களிப்பை தெளிவாக கொடுத்திருப்பார். பேச்சியாக நடித்திருக்க கூடிய நதியா சிறப்பாக நடித்திருப்பார். அவரது துறை பயணத்தில் இந்த திரைப்படத்திற்கு எப்போதுமே தனி இடம் உண்டு.
சின்னக் குயில்
மற்றொரு சிறப்பு என்னவென்றால் இந்த திரைப்படத்தில் சின்னக் குயில் பாட்டு என்ற பாடலை தனது குரலில் முதலில் பாடகி சித்ரா பாடி இருப்பார். அதிலிருந்து அவருக்கு சின்ன குயில் சித்ரா என பெயர் வைக்கப்பட்டது அதுவே அவரது அடையாளமாக மாறியது.
இளையராஜாவின் இசை ஒரு பக்கம், பி.சி.ஸ்ரீராம் கேமரா ஒரு பக்கம் ஃபாசிலின் திரைக்கதை ஒரு பக்கம் என அனைத்துமே ரசிகர்களை திரைப்படத்தின் பக்கம் திருப்பியது. கவர்ச்சி, சண்டை காட்சி என எதுவுமே இல்லாமல் முழுக்க முழுக்க உணர்வை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் பாசில் வெற்றியை தன்வசமாக்கினார்.
இன்றுடன் இந்த திரைப்படம் வெளியாகி 39 ஆண்டுகளாகின்றன. கதையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தற்போது ஒத்துழைப்பு திரைப்படங்கள் வெற்றி காண்கின்றன. அதற்கு முன்னோடி இந்த பூவே பூச்சூடவா திரைப்படம் தான் என்று கூறினால் அது மிகையாகாது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்