Naam Iruvar: சிவாஜியின் 250 ஆவது படம்.. பிரபுவோடு கைகோர்த்து தருணம் அது
நாம் இருவர் திரைப்படம் இன்றுடன் வெளியாகி 39 ஆண்டுகள் ஆகின்றன.
தமிழ் சினிமாவில் இருக்கக்கூடிய நடிகர்களுக்கு ஒரு முன்னோடியாக இன்று வரை இருக்கக்கூடியவர் நடிகர் சிவாஜி கணேசன். தனது வாழ்வியலை சினிமாவாக மாற்றிக்கொண்டு நடிகர்களில் இவரும் ஒருவர். நடிகர் சிவாஜி கணேசனின் மகனாக பிறந்தாலும் தனக்கென ஒரு தனி முத்திரையை சினிமாவில் பதித்தவர் நடிகர் பிரபு.
நடிகர் பிரபு ஆரம்ப காலகட்டத்தில் தனது தந்தையோடு ஒரு சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தமிழ் சினிமாவில் வரலாறு படைத்த சிவாஜிகணேசனின் 250 ஆவது திரைப்படத்தில் அவரோடு சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை நடிகர் பிரபு பெற்றார். கன்னடத்தில் வெளியான ராமபுரதா ராவணா என்ற திரைப்படத்தை மறு உருவாக்கம் செய்து நாம் இருவர் என வெளியிட்டவர். இது நடிகர் சிவாஜி கணேசனின் 250 வது படமாகும்.
கதை
ஓய்வு பெற்ற குடிகார ராணுவ வீரராக இருக்கக் கூடியவர் சிவாஜி கணேசன் அவர் தனது மகளான ஊர்வசியோடு தனது ஊரில் வசித்து வருகிறார் புதிய ஆசிரியராக அந்த ஊருக்கு பிரபு வருகின்றார். அந்த பள்ளியின் அறங்காவலராக விளங்கக்கூடிய ஸ்ரீவித்யாவின் வீட்டில் பிரபு தங்குகிறார்.
ஸ்ரீவித்யாவும் சிவாஜிகணேசனும் ஏற்கனவே காதலித்து வந்துள்ளனர் ஸ்ரீவித்யாவின் தந்தையார் பணக்காரர் என்பதால் சிவாஜி கணேசனை ஏற்க மறுக்கின்றார் இதனால் காதல் தோல்வி அடைந்த சிவாஜி கணேசன் ராணுவத்திற்கு சென்று விடுகிறார். ஸ்ரீவித்யா திருமணம் செய்யும் நாளிலேயே கணவர் இறந்து விடுகிறார். அன்றிலிருந்து அவர் தனியாக வாழ்ந்து வருகிறார்.
நடிகர் சிவச்சந்திரன் போதைப்பொருள் கடத்துவது, கள்ள நோட்டு அச்சிடுவது என பல்வேறு விதமான குற்றங்களை அந்த ஊரில் இருந்து கொண்டு செய்து வருகிறார். ஆசிரியராக வரக்கூடிய பிரபு தலையிட்டு சிவாஜி கணேசனின் குடிப்பழக்கத்தை நிறுத்துகின்றார். அவருக்கு கல்வியையும் கற்பிக்கின்றார். அதன் பின்னர் பிரபுவும் ஊர்வசியும் காதலிக்கின்றனர்.
ஊர் மக்கள் அனைவரும் பணம் சேகரித்து பள்ளியை மேம்படுத்த நினைக்கின்றனர் அப்போது அந்த பணத்தை திருட வேண்டும் என வில்லன்களின் தலைமையாக இருக்கக்கூடிய வி.கே. ராமசாமி நினைக்கின்றார். இதனை கோபாலகிருஷ்ணன் கண்டுபிடித்து விட்டதால் அவரை கொலை செய்து திருட்டப்பட்டதை அவர் மீது கட்டிவிடுகின்றனர்.
இதனைக் கண்டறிந்த ஸ்ரீவித்யா, சிவாஜி கணேசன், பிரபு ஆகிய மூவரும் விகே ராமசாமிக்கு எதிராக கூட்டணி அமைத்து அவரை சட்டத்தின் முன்பு நிறுத்துகின்றனர்.
இந்த திரைப்படம் 1985 ஆம் ஆண்டு மார்ச் எட்டாம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது. படம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய அளவில் வசூல் சாதனை செய்யவில்லை. வெளியாகி 39 ஆண்டுகள் ஆனாலும் சிவாஜிகணேசனின் 250 வது திரைப்படம் என்ற தனித்துவத்தை தன்னகத்தே வைத்துள்ளது. சிவாஜி கணேசனால் பெருமை கொண்ட திரைப்படங்களில் இந்த திரைப்படமும் ஒன்று என்று கூறினால் அது மிகையாகாது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்