தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Cooliekkaran: விஜயகாந்த்-க்கு இசையமைத்த டி. ராஜேந்தர்.. சூப்பர் ஹிட் அடித்த கூலிக்காரன்.. அறிமுகத்தில் அசத்திய ரூபிணி

Cooliekkaran: விஜயகாந்த்-க்கு இசையமைத்த டி. ராஜேந்தர்.. சூப்பர் ஹிட் அடித்த கூலிக்காரன்.. அறிமுகத்தில் அசத்திய ரூபிணி

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 04, 2024 07:00 AM IST

37 Years of Cooliekkaran: ரஜினிகாந்துக்கு பக்கவாக பொருந்தி போகும் கதையம்சம், அவரது படங்களில் வரும் அனைத்து ஜனரஞ்சக விஷயங்களும் நிறைந்திருந்தபோதிலும் ரஜினி சொல்லி விஜயகாந்தை வைத்து எடுக்கப்பட்ட இந்த படம், விஜயகாந்த் சினிமா கேரியரில் திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.

விஜயகாந்த்-க்கு இசையமைத்த டி. ராஜேந்தர்.. சூப்பர் ஹிட் அடித்த கூலிக்காரன்.. அறிமுகத்தில் அசத்திய ரூபிணி
விஜயகாந்த்-க்கு இசையமைத்த டி. ராஜேந்தர்.. சூப்பர் ஹிட் அடித்த கூலிக்காரன்.. அறிமுகத்தில் அசத்திய ரூபிணி

ட்ரெண்டிங் செய்திகள்

ராஜசேகர் இயக்கிய இந்த படத்தின் விஜயகாந்த் - ரூபிணியும் ஜோடியாக நடித்தார்கள். மகராஷ்ட்ராவை சேர்ந்த ரூபணி இந்த படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதன் பிறகு ரஜினி, கமல் என டாப் நடிகர்களுக்கு ஜோடி போட்டு ஒரு ரவுண்டு வந்தார்.

சர்ப்ரைஸிங்காக கூலிக்காரன் படத்துக்கு டி. ராஜேந்தர் இசையமைத்திருப்பார். தனது படம் தவிர்த்து மற்ற இயக்குநர்களுக்கு இவர் இசையமைத்திருக்கும் படங்களில் ஒன்றாக கூலிக்காரன் உள்ளது. பாடல் வரிகளும் இவரேதான் எழுந்தியிருப்பார். படத்தில் இடம்பிடித்த அனைத்து பாடல்களும் அப்போது சூப்பர் ஹிட்டாகின.

ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவான கூலிக்காரன் திரைப்படம் அனைத்து செண்டர்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வசூலை அள்ளியது. இதன் காரணமாக விஜயகாந்தின் மார்க்கெட் ரூ. 50 லட்சத்தில் இருந்து ரூ. 1 கோடி வரை உயர்ந்தது என கூறப்படுகிறது.

இந்த படம் உருவான சுவாரஸ்ய பின்னணி குறித்தும், படத்துக்காக கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் தொகையை மட்டும் சம்பளமாக விஜயகாந்த் பெற்றது பற்றி படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேட்டி ஒன்றில் வெளிப்படுத்திய தகவல் ஆச்சர்யப்படுத்தும் விதமாகவே அமைந்தது.

ரஜினி - தாணு இணைந்து ஒரு படம் செய்வதற்கு முடிவெடுத்து சில காரணமாக தள்ளிபோய் கொண்டே இருந்துள்ளது. இதனால் ரஜினி வேறு ஹீரோவை வைத்து படம் செய்து விட்டு வாருங்கள், பின்னர் நாம் இணைந்து பணியாற்றலாம் என்று தாணுவிடம் கூறியதோடு, இந்தியில் சூப்பர் ஹிட்டான காலிியா என்ற படத்தை விஜயகாந்தை வைத்து தயாரிக்குமாறும் சொல்லியுள்ளார்.

பின்னர் இதற்கான பணிகள் முறையாக செய்த தாணு, விஜயகாந்த் கால்ஷிட்டையும் பெற்று படத்தில் நடிக்க வைத்தார்.

ரஜினிகாந்துக்கு பக்கவாக பொருந்தி போகும் கதையம்சம், அவரது படங்களில் வரும் அனைத்து ஜனரஞ்சக விஷயங்களும் நிறைந்திருந்தபோதிலும் ரஜினி சொல்லி விஜயகாந்தை வைத்து எடுக்கப்பட்ட இந்த படம், விஜயகாந்த் சினிமா கேரியரில் திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.

ரஜினிகாந்துக்கு சூப்பர் ஸ்டார் என்று பட்டம் சூட்டி அழகுபார்த்த கலைப்புலி தாணு, விஜயகாந்தை கூலிக்காரன் படம் மூலம் புரட்சி கலைஞர் ஆக்கினார்.

நாகேஷ், நிழல்கள் ரவி, விஜயன், ஸ்ரீவித்யா, கே. நட்ராஜ் என அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்தவர்கள் அனைவரும் கூலிகாரன் படத்தில் தோன்றி தங்களது கதாபாத்தில் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள்.

மாஸ் ஹீரோவான ரஜினியின் கமர்ஷியல் ஹிட் படங்களை அடுக்கிகொண்டே போகலாம். கமலுக்கு சகலகலா வல்லவன் போன்று விஜய்காந்துக்கு கூலிக்காரன் திரைப்படம் அவரை மாஸ் ஹீரோவாக்கியது.

கூலிக்காரன் படத்தில் நடிக்க கமிட்டான விஜயகாந்துக்கு அட்வான்ஸாக ஒரு தொகை கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் தாணு. இதையடுத்து படத்தின் ரிலீஸுக்கு பிறகு சம்பள பணத்தை கொடுக்க, அதை வாங்க மறுத்துள்ளார் விஜயகாந்த். தனது சினிமா மார்கெட்டை ஏறுமுகமாக அமைந்த கூலிக்காரன் படத்துக்கு பெற்ற அட்வான்ஸ் பணமே சம்பளமாக போதும் என அவர் தெரிவித்ததாக கலைப்புலி தாணு பேட்டி ஒன்றில் கூறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவே இருந்தது.

1980ஸ்களில் வெளியான மாஸ் ஹிட் படங்களில் ஒன்றான கூலிக்காரன் வெளியாகி இன்றுடன் 37 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்