Chinnappadass: தாஸ்.. தாஸ்.. சின்னப்பதாஸ்.. தாஸ்.. பஞ்ச் பேசும் சத்யராஜ்.. மக்களிடம் இடம் பிடித்த மாஸ் திரைப்படம்
Chinnappadass: எம்ஜிஆர், ரஜினிகாந்த் ஸ்டைலில் பஞ்ச் பேசி சத்யராஜ் நடித்த சின்னப்பதாஸ் சிறந்த பொழுதுபோக்கு படமாக அமைந்தது. சத்யராஜுக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்த இந்த படம் வெளியாகி இன்றுடன் 35 ஆண்டுகள் ஆகிறது.

Chinnappadass: தமிழ் சினிமா ஹீரோக்கள் தங்களது சினிமா வாழ்க்கையில் ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட், காதல் என அனைத்து கலந்த மாஸ் மசாலா அம்சங்களுடன் ஒரேயொரு படமாவது இருக்கும்படி பார்த்துக்கொள்வது தொன்று தொட்டு கடைப்பிடிக்கும் பழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் சத்யராஜ் தனக்கான வாய்ப்பாக பொழுதுபோக்கு அ்ம்சங்களுடன் கூடிய பக்கா கமர்ஷியல் படமாக நடித்தது தான் சின்னப்பதாஸ்.
பாரதிராஜாவின் கடலோர கவிதைகள் படத்தில் சின்னப்பதாஸ் என்ற கேரக்டரில் ரஸ்டி ஹீரோவாக தோன்றி மனதில் பதிந்தார் சத்யராஜ். அந்த கேரக்டரின் பெயரை டைட்டிலாக வைத்து உருவான சின்னப்பதாஸ் படத்தில் ராதா, நாசர், எஸ்எஸ் சந்திரன், ரவிச்சந்திரன் உள்பட பலரும் நடித்திருப்பார்கள்.
ஏராளமான ரீமேக் படங்களின் மூலம் ஹிட் இயக்குநராக பெயரெடுத்த சிவி ராஜேந்திரன் படத்தை இயக்கியிருந்தார். இது அவரது 50வது படமாக மட்டுமில்லாமல், கடைசி படமாகவும் அமைந்தது. இந்த படமும் இந்தியில் வினோத் கன்னா, டிம்பிள் கபாடியா நடிப்பில் சூப்பர் ஹிட்டான இன்சாஃப் படத்தின் ரீமேக் தான்.
கதை
சட்டகல்லூரி படித்து முடித்த புரொபோசர், கடத்தல் கும்பலில் முக்கிய கேங்ஸ்டர், அப்புறம் போலீஸ் என படத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை போல் நினைத்த கேரக்டர்களில் தோன்றியிருப்பார் சத்யராஜ்.
காதலியை கொலை செய்த கடத்தல் கும்பலை போலீஸிடம் சட்டத்தின் பிடியில் சிக்கவைப்பது தான் படத்தின் ஒன்லைன். மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு என்று சொல்வது போல் வில்லன்களிடம் சேருவது, பின்னர் நல்லவனாக மாறி போலீசில் சேருவது, காதலி இறந்த துக்கத்துக்கு பிறகு அவரது தங்கையை கரம் பிடிப்பது என மனதில் நினைத்தெல்லாம் செய்திருப்பார்.
இலக்கணம் மீறல் தான் ஒரு கமர்ஷியல் படம் ஹீரோவுக்கான இலக்கணம் என்பதை சரியாக புரிந்து கொண்டு மூளைக்கு வேலை கொடுக்காமல் சுமார் இரண்டே கால் மணி நேரம் முழுமையாக என்ஜாய் செய்யும் விதமாக படத்தின் மூலம் எண்டர்டெயின் செய்திருப்பார் சத்யராஜ். இதற்கு பக்க பலமாக பிரபல வசனகர்த்தா எம்ஜி வல்லபன் கூரான வசனங்கள் அமைந்திருந்தன.
முட்டாள் இல்ல முரட்டாள், சென்ட்ரலும் ஸ்டேட்டும் கைகொடுக்கனும், ஆபத்துல கதாநாயகன் தான் காப்பதனுமா காமெடியன் காப்பாத்தகூடாதா, பணம் பதவி வேணும்ன மானம் மரியாதை பார்க்ககூடாது என படம் நெடுகிலும் பல்வேறு பஞ்ச்கள் இடம்பிடித்திருக்கும்.
வாலி, கங்கை அமரன் பாடல்கள் எழுத இளையராஜா இசையில் கிளாசிக்காக ஒரு பாடலும் இல்லாவிட்டாலும், படத்தில் பாடல்கள் அனைத்தும் அந்த காலகட்டத்தில் ஹிட் அடித்தன. குறிப்பாக அது இது எது, பாக்கு வெத்தல போன்ற பாடல்கள் தாளம் போட வைக்கும் விதமாக அமைந்தன.
எம்ஜிஆர், ரஜினிகாந்த் ஸ்டைலில் பஞ்ச் பேசி சத்யராஜ் நடித்த சின்னப்பதாஸ் சிறந்த பொழுதுபோக்கு படமாக அமைந்தது. சத்யராஜுக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்த இந்த படம் வெளியாகி இன்றுடன் 35 ஆண்டுகள் ஆகிறது.
இன்று வரை தமிழ் சினிமாவில் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர் சத்யராஜ் நடித்த வருகிறார். அவருக்கான மவுசை இன்று வரை அவர் குறையாமல் வைத்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்