போதைப் பொருள் மீது அப்படி என்ன கோபம் - விளக்கம் கொடுக்கும் சூரசம்ஹாரம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  போதைப் பொருள் மீது அப்படி என்ன கோபம் - விளக்கம் கொடுக்கும் சூரசம்ஹாரம்!

போதைப் பொருள் மீது அப்படி என்ன கோபம் - விளக்கம் கொடுக்கும் சூரசம்ஹாரம்!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jul 30, 2023 04:45 AM IST

35 Years of Soora Samhaaram: சூரசம்ஹாரம் திரைப்படம் இன்றுடன் வெளியாகி 35 ஆண்டுகளாகின்றன.

சூரசம்ஹாரம்
சூரசம்ஹாரம்

காவல்துறைக்கும் போதைப் பொருளுக்கும் நடக்கும் சண்டை தான் இந்த திரைப்படத்தின் அடித்தளமாகும். தற்போது வெற்றியடைந்த விக்ரம் திரைப்படமும் போதைப் பொருளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது தான். அதற்கு முன்பே போதைப் பொருளை வைத்து எத்தனையோ திரைப்படங்களை கமல்ஹாசன் வெற்றிப் படங்களாக்கி இருக்கிறார்.

கதை

கமல்ஹாசனும், அவரது நண்பர் அருணும் காவல்துறை அதிகாரிகளாக பணியாற்றியவர். அருண் தங்கை திவ்யா போதைப் பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறார். பலமுறை அருண் கண்டித்தும் கேட்காத காரணத்தினால் ஒரு அறையில் வைத்துப் போட்டு விடுகிறார்.

போதைப் பொருளின் மீது ஆர்வம் கொண்டு காரணத்தினால் அறையிலேயே திவ்யா இறந்து விடுகிறார். இதனால் ஆத்திரம் அடையும் அருண் போதைப்பொருள் விற்பனை செய்யும் மோகன் தாஸ்ஸை பழி வாங்க முடிவு செய்கிறார்.

அப்படி ஒரு பொருள் விற்பனை செய்யும் மோகன் தாஸ் விமான நிலையத்தில் வைத்து அருணை கொலை செய்து விடுகிறார். அதனைச் சுதா மற்றும் அவரது இளைய சகோதரர் இருவரும் பார்த்து விடுகின்றனர்.

இதனை விசாரணை செய்ய வரும் கமலஹாசன் அவர்களிடம் பல முறை கெஞ்சிக் கேட்கிறார். ஆனால் சுதாவும் அவளது இளைய சகோதரனும் உண்மையைச் சொல்ல மறுக்கின்றனர். அருணின் மனைவி அவர்களிடம் மன்றாடி கெஞ்சும் போது உண்மையைச் சொல்ல அந்த சிறுவன் முன் வருகிறான்.

அதற்குப் பிறகு மோகன்தாஸ் கும்பல் கமல்ஹாசனைக் கடத்தி போதைப் பொருட்களை வலுக்கட்டாயமாகக் கொடுத்து போதைக்கு அடிமையாக்குகின்றனர். அதற்குப் பிறகு அந்த போதைப் பொருள் கும்பலை எப்படி கமல்ஹாசன் பழி வாங்குகிறார் என்பதுதான் மீதி கதை.

இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கேள்வியே தேவையில்லை இளையராஜா தான் இசை.

இந்த திரைப்படத்தில் இடம் பெற்று பட்டி தொட்டி எங்கும் வெற்றியடைந்த நான் என்பது நீ அல்லவோ என்ற பாடலை இளையராஜா இசைக் குழுவில் புல்லாங்குழல் வாசிக்கக் கூடிய அருண்மொழி என்பவரின் முதல் பாடலாகும்.

அதற்குப் பிறகு அவர் பல்வேறு பாடல்கள் பாடியுள்ளார். இந்த பாடல்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளன. சூரசம்ஹாரம் திரைப்படம் இன்றுடன் வெளியாகி 35 ஆண்டுகள் ஆகின்றன. போதைப் பொருள்களுக்கு எதிரான கமல்ஹாசனின் பயணம் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.