Idhu Namma Bhoomi: ஓடிச் சென்ற தங்கை.. குடும்பத்தை ஒன்று சேர்க்க போராடும் கார்த்திக்.. ஒன்று சேர்த்த இது நம்ம பூமி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Idhu Namma Bhoomi: ஓடிச் சென்ற தங்கை.. குடும்பத்தை ஒன்று சேர்க்க போராடும் கார்த்திக்.. ஒன்று சேர்த்த இது நம்ம பூமி

Idhu Namma Bhoomi: ஓடிச் சென்ற தங்கை.. குடும்பத்தை ஒன்று சேர்க்க போராடும் கார்த்திக்.. ஒன்று சேர்த்த இது நம்ம பூமி

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 05, 2024 06:30 AM IST

Idhu Namma Bhoomi: வேறுபாடுகளை உடைக்கக்கூடிய கதையை மக்களுடையே புகுத்திய இது நம்ம பூமி திரைப்படம் இன்றுடன் வெளியாகி 32 ஆண்டுகள் ஆகின்றன. இயக்குநர் பி.வாசு திரைப்பயணத்தில் தவிர்க்க முடியாத படங்களில் இதுவும் ஒன்று என்று கூறினால் அது மிகையாகாது.

ஓடிச் சென்ற தங்கை.. குடும்பத்தை ஒன்று சேர்க்க போராடும் கார்த்திக்.. ஒன்று சேர்த்த இது நம்ம பூமி
ஓடிச் சென்ற தங்கை.. குடும்பத்தை ஒன்று சேர்க்க போராடும் கார்த்திக்.. ஒன்று சேர்த்த இது நம்ம பூமி

அப்படிப்பட்ட வித்தைகள் தெரிந்த இயக்குநர்களில் ஒருவர் தான் பி.வாசு. இயக்குநர் பி வாசு இயக்கிய எத்தனையோ திரைப்படங்கள் வெற்றி விழா கண்டுள்ளது. இந்த திரைப்படங்களின் வரிசையில் ஒன்றுதான் இது நம்ம பூமி.

1992 ஆம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் இது நம்ம பூமி. நடிகர் கார்த்திக் கதாநாயகனாகவும், நடிகை குஷ்பு நாயகியாக நடித்திருப்பார்கள்.

எத்தனையோ வெள்ளிவிழா திரைப்படங்களை நவரச நாயகன் கார்த்திக் கொடுத்திருக்கிறார். என்னதான் பிரபல நடிகருக்கு மகனாக பிறந்தாலும் தமிழ் சினிமாவில் ஜொலிப்பது என்பது அவ்வளவு எழுது கிடையாது. தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்குவது என்பது கடினமான உழைப்பு இருந்தால் மட்டுமே முடியும். அந்த வகையில் தனக்கான மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வெள்ளிவிழா திரைப்படங்களை கொடுத்தவர் நவரச நாயகன் கார்த்திக்.

கதை

கார்த்திக்கின் தந்தையான விஜயகுமார் அவ்வூரில் பணக்கார குடும்பத்துப் பெண்ணான ஸ்ரீ வித்யாவைக் காதலித்து ரகசிய திருமணம் செய்து கொள்கிறார். இதனால் ஸ்ரீ வித்யாவின் தந்தை மாரடைப்பால் இறந்து போகிறார். இதனால் தங்கையின் மேல் ராதாரவி உச்சக்கட்ட கோபம் ஆகிறார்.

பின்னர் தனது கடின உழைப்பால் விஜயகுமார் உயர்ந்து ராதா ரவி போல் பணக்காரராக மாறிவிடுகிறார். ஆனால் இருவரும் ஒருவரை ஒருவர் வெறுக்கின்றனர். விஜயகுமாரின் மகனான கார்த்தி அவருடைய பாட்டியின் வீட்டில் வளர்ந்து வருகிறார்.

தனது தாயான ஸ்ரீ வித்யாவை பார்க்க கார்த்திக் ஆசைப்பட்டு வரும்போது அவர் இறந்து போனதாகக் கூறுகின்றனர். அதற்குப் பிறகு காரணம் தெரிந்த கார்த்திக், இரண்டு குடும்பத்தையும் சேர்ப்பதாகச் சபதம் ஏற்கிறார்.

இதனை நிறைவேற்றுவதற்காக ராதாரவியின் மகளான குஷ்புவைத் திருமணம் செய்ய வேண்டும் எனத் தீர்மானிக்கிறார். இறுதியில் இரண்டு குடும்பமும் இணைந்ததா? என்பது தான் இந்த படத்தின் கதையாகும்.

இந்த படத்தில் இடம்பெற்ற பல்வேறு காட்சிகள் பார்க்கும் ரசிகர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் அளவிற்கு எடுக்கப்பட்டிருக்கும். இறுதிக் கட்டத்தில் தனது மகனான் ராதாரவியிடம் பகை குறித்து மனோரமா பேசும் காட்சிகள் அனைத்தும் உணர்ச்சி பொங்க உச்சக்கட்டத்தில் இருக்கும்.

பணக்காரன் வீட்டுப் பிள்ளையை ஏழை திருமணம் செய்து கொள்வது, பின்னர் அவர்களை எதிர்ப்பது, ஓடுவது எனக் கதை காலம் காலமாகத் தொன்று தொட்டு எடுக்கப்பட்டு வந்தாலும். இதன் திரைக்கதையை இயக்குநர் பி.வாசு கையாண்ட விதம் சற்று விசித்திரமாக இருக்கும்.

இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றன. காரணம் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்தது இளையராஜா. இருவரின் வெறுப்பிற்காக இரண்டு கிராமமே எதிரிகளாக வாழும் சூழ்நிலையில் இடையில் புகுந்து கார்த்திக் இணைத்து அதில் வெற்றியும் காண்கிறார். தனியாகப் பிரிந்து கிடக்கும் பூமியை ஒன்று சேர்க்கும் மிகப்பெரிய போராட்டமே இது நம்ம பூமி.

வேறுபாடுகளை உடைக்கக்கூடிய கதையை மக்களுடையே புகுத்திய இது நம்ம பூமி திரைப்படம் இன்றுடன் வெளியாகி 32 ஆண்டுகள் ஆகின்றன. இயக்குநர் பி.வாசு திரைப்பயணத்தில் தவிர்க்க முடியாத படங்களில் இதுவும் ஒன்று என்று கூறினால் அது மிகையாகாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.