தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  31 Years Of Amaravathi : ரொம்ப வாலு பையன் அஜித்.. அமராவதி திரைப்படத்தில் கமிட் ஆனது இப்படி தான்.. 31ஆம் ஆண்டில் அமராவதி!

31 years of Amaravathi : ரொம்ப வாலு பையன் அஜித்.. அமராவதி திரைப்படத்தில் கமிட் ஆனது இப்படி தான்.. 31ஆம் ஆண்டில் அமராவதி!

Divya Sekar HT Tamil
May 24, 2024 06:00 AM IST

31 years of Amaravathi : கதாநாயகனாக அஜித்குமாரும், கதாநாயகியாக சங்கவியும் நடித்த 1993-இல் வெளிவந்த அமராவதி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 31 ஆண்டுகள் ஆகிறது.

ரொம்ப வாலு பையன் அஜித்.. அமராவதி திரைப்படத்தில் கமிட் ஆனது இப்படி தான்.. 31ஆம் ஆண்டில் அமராவதி!
ரொம்ப வாலு பையன் அஜித்.. அமராவதி திரைப்படத்தில் கமிட் ஆனது இப்படி தான்.. 31ஆம் ஆண்டில் அமராவதி!

ட்ரெண்டிங் செய்திகள்

கவிதா, நாசர், சார்லி, தலைவாசல் விஜய், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இந்த படமானது 1933ல் திரையரங்கில் வெளியானது.

இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்துகொண்டிருந்தபோது தான் அஜித் பைக் ரேஸ் விபத்தில் சிக்கினார். பின்னர் அவருக்கு நடிகர் விக்ரம் டப்பிங் பேசினார்.

அமராவதி கதை

வீட்டை விட்டு ஓடிப்போகும் அப்பாவிப் பெண். அவள் நல்ல மனதுள்ள ஒரு மனிதனின் வீட்டில் அடைக்கலம் அடைகிறாள். அங்கே அவள் நன்றாகப் பராமரிக்கப்படுகிறாள். அர்ஜுன்(அஜித்) அவளை காதலிக்கும்போது அவள் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது. அது என்ன என்பது தான் கதை. இப்படம் கலவையான விமர்சனம் பெற்றது.

பாடல்கள் ஹிட்

இசையமைப்பாளர் பாலபாரதி இசையில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தின் பாடல்களை எழுதியவர் கவிப்பேரரசு வைரமுத்து. அமராவதி படத்தின் வெற்றிக்குப் பாடல்கள் முக்கிய பங்கு வகித்தன. இப்படத்தில் இடம்பெற்ற  தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே, புத்தம் புது மலரே போன்ற பாடல்கள் மிகவும் பிரபலமாக இருந்தன.

அமராவதி படத்தில் அஜித் நடிக்க வந்தது எப்படி

அமராவதி படத்தில் அஜித் நடிக்க வந்தது எப்படி, அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பள விவரம் உள்ளிட்ட விஷயங்களை, பட தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதில்,இயக்குநர் செல்வா என்னிடம் வந்து அமராவதி பட கதை சொல்லும் போது, புது முகங்களை வைத்து தான் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அவர் சிலரை காட்டினார், ஆனால் எனக்கு பிடிக்கவில்லை. நேரம் இல்லை என்பதால் உடனே ஊட்டியில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. 15 நாட்கள் நடந்தது.

அவசர அவசரமாக படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. சங்கவியை, பாக்யராஜ் அலுவலகத்தில் இருந்து நான் தான் தேர்வு செய்தேன். அந்த நடிகர் சரியாக நடிப்பை வழங்கவில்லை.

ரொம்ப வாலு பையன் அஜித்

 இதன் விளைவாக எங்களுக்கு நாட்கள் தான் சென்றது. ஒரு விளம்பரத்தில் அஜித்தை பார்த்தேன். பிரசாத் ஸ்டுடியோவில் ஒரு படத்தின் படப்பிடிப்பில் இருந்தார். அப்போது தான் நான் அவரை முதலில் சென்று சந்தித்தேன்.ரொம்ப வாலு பையன் அஜித். எப்போது படப்பிடிப்பு, தமிழ் படத்தில் தான் நடிப்பேன் என அஜித் என்னிடம் சொன்னார். இரவோடு இரவாக அங்கு படப்பிடிப்பு முடிந்து அடுத்த நாள் காலை என்னுடன் படப்பிடிப்புக்கு வந்தார். 

அஜித்தை எனக்கு முதலில் பிடிக்க காரணமே, எடுத்தவுடன் எனக்கு எவ்வளவு சம்பளம் கொடுப்பீர்கள் என கேட்டார். அது எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அது போன்று படத்தில் ஆர்வமாக இருப்பவர்கள் கேட்பது தவறு இல்லை. அது தான் தொழில் நம்பிக்கை. அப்பவே 5 ஆயிரம் ரூபாய் கையில் கொடுத்து அனுப்பினேன். அதற்கு பிறகு இயக்குநருடன் மிகவும் கஷ்டப்பட்டார். பிறகு எல்லாம் சரி செய்யப்பட்டு அமராவதி படம் முடிக்கப்பட்டது “ என்றார்.

கதாநாயகனாக அஜித்குமாரும், கதாநாயகியாக சங்கவியும் நடிப்பில் 1993-இல் வெளிவந்த அமராவதி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 31 ஆண்டுகள் ஆகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்