தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Surya Vamsam: வசூலை குவித்த படம்.. ஒரே பாடலில் கலெக்டரான தேவயானி.. மக்களை வென்ற சூரியவம்சம்

Surya Vamsam: வசூலை குவித்த படம்.. ஒரே பாடலில் கலெக்டரான தேவயானி.. மக்களை வென்ற சூரியவம்சம்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 27, 2024 05:45 AM IST

Surya Vamsam: வெளியாகி 27 ஆண்டுகள் கடந்த பிறகும் இப்படத்திற்கான வரவேற்பு இருந்து கொண்டே தான் இருக்கின்றது. குடும்ப படம் என்றால் அது சூரியவம்சம் தான். எந்த காலகட்டத்திலும் மவுசு குறையாத படம் தான் சூரிய வம்சம்.தலைமுறை கடந்தாலும் கொண்டாடப்படும் ஒரே காவியம் சூரிய வம்சம்.

வசூலை குவித்த படம்.. ஒரே பாடலில் கலெக்டரான தேவயானி.. மக்களை வென்ற சூரியவம்சம்
வசூலை குவித்த படம்.. ஒரே பாடலில் கலெக்டரான தேவயானி.. மக்களை வென்ற சூரியவம்சம்

ட்ரெண்டிங் செய்திகள்

படத்தில் வில்லனாக நடித்திருந்த ஆனந்தராஜின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதுவும் இப்படத்தில் அவர் பயன்படுத்தும் மரிக்கொழுந்து சென்ட் அவ்வளவு ஃபேமஸ். இந்த சென்ட் படத்தின் க்ளைமேக்ஸ்க்கு முக்கிய காரணமாக அமையும்.

இந்த படத்தில் டபுள் ஆக்ஷனில் நடித்திருந்தார் சரத்குமார். அப்பா கதாபாத்திரத்தில் சக்திவேல் கவுண்டராகவும், மகனாக சின்ராசு என்ற கதாபாத்திரத்திலும் சரத்குமார் நடித்திருப்பார். பெற்றோர்களின் சம்மதம் இன்றி தேவயானியை திருமணம் செய்யும் சரத்குமார் அப்பாவின் வெறுப்பை சம்பாதித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே செல்கிறார். 

நன்கு படித்த தேவயானியை கலெக்டருக்கு படிக்க வைப்பார். சிறிய லெவலில் பஸ் கம்பெனி தொடங்கி, அதிலிருந்து பெரிய பஸ் கம்பெனிக்கு முதலாளியாக மாறுவார் சரத்குமார். அப்போது இடம்பெறு இந்த பாடல்,

’நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது

சிறகை விரித்துப் பறப்போம் நம் உறவில் உலகை அளப்போம்

விளையாடலாம் நிலாவிலே நிழல் மூழ்குமோ தண்ணீரிலே

வானைப் புரட்டிப்போடு புது வாழ்வின் கீதம் பாடு’ அல்மேட்.

படிக்காதவன் என்று சரத்குமாரை வெறுத்து படித்த இன்ஜினியரை திருமணம் செய்து கொள்வார் பிரியா ராமன். பின்னர் அவர் தொழில் தோல்வி அடைந்து சரத்குமாரிடம் வேலை கேட்கும் காட்சி அற்புதமாக அமைந்திருக்கும். பிரியா ராமன் கதாபாத்திரமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படி படத்தில் காதல், செண்டிமெண்ட், ஆக்சன் என்று அனைத்தையும் கலந்து சரிசமமாக ரசிகர்களுக்கு விருந்தளித்து இருப்பார் இயக்குநர் விக்ரமன். இப்படத்தில் தான் இட்லி உக்மா செம ட்ரெண்டானது. இன்று இட்டி உப்புமா என்றால் அனைவருக்கும் சூரிய வம்சம் தான் நினைவுக்கு வரும்.

இந்த படத்திற்கு பக்க பலமாக இருந்தது எஸ் ஏ ராஜ்குமாரின் இசை. தேவையாணி காதலை வெளிபடுத்தும் போது வரும் பாடலான,

“காதலா காதலா காதலின் சாரலா

காதலா காதலா காதலின் சாரலா

தீயிலே தென்றலாய் வாழ்கிறேன் காதலா

கண்களா தூண்டிலா கண்களா தூண்டிலா

மாறினேன் மீன்களா' இந்த பாடலும் செம ஹிட்.

அதே போல சரத்குமார் பிரியா ராமன் நினைத்து காதல் கொண்ட போது வரும் இந்த பாடலை யாராலும் மறக்க முடியாது. இன்றும் முனுமுனுக்கும் பாடல் அது.

“ரோசப்பூ சின்ன ரோசாப்பூ

உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ

ரோசப்பூ சின்ன ரோசாப்பூ

உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ

காத்தில் ஆடும் தனியாக

என் பாட்டு மட்டும் துணையாக

காத்தில் ஆடும் தனியாக

என் பாட்டு மட்டும் துணையாக

ரோசப்பூ சின்ன ரோசாப்பூ

உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ” என்ற பாடல் தான் அது.

இப்படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட். இப்படத்தில் இடம்பெற்றுள்ள சலக்கு சலக்கு பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த திரைப்படம் வெளியாகி 27 ஆண்டுகள் கடந்த பிறகும் இப்படத்திற்கான வரவேற்பு இருந்து கொண்டே தான் இருக்கின்றது. குடும்ப படம் என்றால் அது சூரியவம்சம் தான். எந்த காலகட்டத்திலும் மவுசு குறையாத படம் தான் சூரிய வம்சம்.தலைமுறை கடந்தாலும் கொண்டாடப்படும் ஒரே காவியம் சூரிய வம்சம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.