Vivek Film: கலக்கி எடுத்த கோவை சரளா.. புரட்டி போட்ட விவேக்.. நகைச்சுவை உச்சம் விஸ்வநாதன் ராமமூர்த்தி
Vivek Film: விஸ்வநாதன் ராமமூர்த்தி திரைப்படம் இன்றுடன் வெளியாக 23 ஆண்டுகளாகின்றன. இருப்பினும் நினைவு கூறும் அளவிற்கு இந்த திரைப்படம் வந்திருக்கிறது என்றால் அதுவே அந்த திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியாகும். ஆகச்சிறந்த கலைஞர்களின் உழைப்பிற்கு அழிவில்லை.
Vivek Film: குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் நகைச்சுவை சித்திரங்கள் தற்போது திரையரங்குகளில் வெளியாவது அரிதாகிவிட்டது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் எத்தனையோ திரைப்படங்கள் மக்களை மகிழ்வித்து வசூலை வாரி கொடுத்துள்ளன.
தற்போது சினிமாவில் எத்தனையோ நகைச்சுவை திரைப்படங்கள் வெளியாகும் இருப்பினும் குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் நகைச்சுவை திரைப்படங்கள் மிக மிக குறைந்துவிட்டன. 2000 காலகட்டங்களில் இதுபோன்ற குடும்ப திரைப்படங்கள் எத்தனை பேர் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.
அப்படிப்பட்ட திரைப்படங்களில் ஒன்றுதான் விஸ்வநாதன் ராமமூர்த்தி. முழுக்க முழுக்க இயக்குனர் ராமநாராயணன் கைவண்ணத்தில் எடுக்கப்பட்ட நகைச்சுவை திரைப்படம் தான் இந்த விஸ்வநாதன் ராமமூர்த்தி. இந்த திரைப்படத்தில் நாயகனாக ராம்கி விவேக் இருவரும் நடித்துள்ளனர்.
நடிகை ரோஜா, விந்தியா, கோவை சரளா, வெண்ணிறாடை மூர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் இந்த திரைப்படத்தில் நடித்தனர். குறிப்பாக இந்த திரைப்படத்தில் நடிகர் விஜயகாந்த் கௌரவ பாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த திரைப்படத்திற்கு இசையமைத்தவர் எஸ்.ஏ.ராஜ்குமார் இந்த திரைப்படம் வந்த காலகட்டத்தில் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றன.
கதை
சிறு கலைஞராக இருக்கக்கூடிய விஸ்வநாதன் தான் ராம்கி அவருடைய மனைவி ரோஜா. ராம்கியின் நண்பனாக வரக்கூடியவர் தான் ராமமூர்த்தி கதாபாத்திரத்தில் விவேக். விவேக் மனைவிதான் விந்தியா. திரைப்பட இயக்குனர் கனவோடு கிராமத்தை விட்டு தனது மனைவியோடு விவேக் சென்னை நோக்கி வருகிறார்.
அதற்குப் பிறகு விவேக் மற்றும் இந்தியா இருவரும் ராம்கியின் வீட்டில் தங்குகின்றனர். சினிமா நடிகையாக திமிர் பிடித்த கதாபாத்திரத்தில் ரோஜா நடித்திருப்பார். படப்பிடிப்பிற்காக ரோஜா வெளியூர் சென்று விடுவார். ராம்கியின் மாமா 30 லட்சம் ரூபாயுடன் ஒரு உயிர் எழுதிவிட்டு சொல்கிறார்.
ராம்கியின் மனைவி எப்போது அவரோடு அடிபணிந்து அன்போடு நடந்து கொள்கிறாரோ அப்போதுதான் இந்த 30 லட்சம் பணம் ராம்கிக்கு சேரும் என எழுதிவிட்டு செல்கிறார். இதனை உறுதிப்படுத்துவதற்காக பணத்தின் பொறுப்பாளர் வெண்ணிறாடை மூர்த்தி மற்றும் அவரது மகள் கோவை சரளா வருகின்றனர்.
அந்த சமயத்தில் ரோஜா இல்லாத காரணத்தினால் தனது நண்பனின் மனைவியான விந்தியாவை விவேக் ஜோடி சேர்த்து விடுகிறார். பணம் கிடைத்து விட்டால் நமது திரைப்படத்திற்கும் பணம் கிடைத்துவிடும் எனும் நம்பி இந்த நாடகத்தை விவேக் நடத்துகிறார்.
படப்பிடிப்பில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக மன உளைச்சலோடு மீனா திரும்பி வருகிறார். அப்போது இங்கு நடக்கும் நாடகத்தை கண்டு ஆத்திரம் கூறுகிறார். நடந்ததை எடுத்துக் கூறி ராம்கி அமைதிப்படுத்துகிறார் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக அவரும் அந்த நாடகத்தில் சேர்கிறார்.
இந்த இடைப்பட்ட சூழலில் நடக்கும் கதை தான் மிகவும் நகைச்சுவையின் உச்சமாக இருக்கும். ஒருபுறம் பெருமாளின் தீவிர பக்தையாகத் திகழ்ந்துவரும் கோவை சரளா. எப்போதும் தனது கனவில் பெருமாளை நினைத்துக் கொண்டே இருப்பார். அவரது சாயலில் விவேக் இருக்கின்ற காரணத்தினால் விவேக் தனது பெருமாள் அவர் நினைத்துக் கொண்டு காதல் டார்ச்சர் கொடுப்பார்.
அதன் பிறகு இது போன்ற கலாட்டா சூழலில் ரோஜா தனது ஆடம்பரத்தை விட்டுவிட்டு சரியான மனைவியாக மாறிவிடுகிறார். உண்மை தெரிந்த பிறகு இருவரிடமும் பணத்தின் பொறுப்பாளர் அந்த பணத்தை ஒப்படைத்து விட்டுச் செல்கிறார். அனைவருக்கும் சாதகமான சூழ்நிலை உருவாகின்றது.
கோவை சரளா விவேக் இவர்கள் இருவரும் அடிக்கும் கூத்து படம் முழுக்க வெடித்து சிதறி இருக்கும். அந்த அளவிற்கு நகைச்சுவையின் உச்சத்திற்கு இருவரும் சென்றிருப்பார்கள். கோவை சரளா பெருமாள்.. பெருமாள்.. என்று அழைக்கும் தோரணை இன்று வரை நகைச்சுவை தொலைக்காட்சிகளில் ஓயாது ஒலித்துக் கொண்டிருக்கின்றது.
வர்த்தக ரீதியாக இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், இன்றளவும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜயகாந்த் ஒரு சிறிய கௌரவ தோற்றத்தில் நடித்திருப்பார். குறிப்பாக இந்த திரைப்படத்தில் எந்த சம்பளமும் வாங்காமல் விவேக் மீது கொண்ட அன்பின்பால் நடிகர் விஜயகாந்த் நடித்திருப்பது அவரது மீது உள்ள மரியாதையை ஒரு படி அதிகரித்திருக்கின்றது.
விஸ்வநாதன் ராமமூர்த்தி திரைப்படம் இன்றுடன் வெளியாக 23 ஆண்டுகளாகின்றன. இருப்பினும் நினைவு கூறும் அளவிற்கு இந்த திரைப்படம் வந்திருக்கிறது என்றால் அதுவே அந்த திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியாகும். ஆகச்சிறந்த கலைஞர்களின் உழைப்பிற்கு அழிவில்லை என்பதற்கு இந்த திரைப்படம் ஒரு மிகப்பெரிய உதாரணமாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்