நடிகையின் மீது காதல்..விக்ரம் முகத்தை அறிந்த படம்.. சொந்த கதையை படமாக்கிய இயக்குநர்
Vinnukum Mannukum: நடிகர் விக்ரமுக்கு சேது திரைப்படம் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால் இந்த விண்ணுக்கும் மண்ணுக்கும் திரைப்படம் நடிகர் விக்ரம் முகத்தை மக்கள் மத்தியில் யார் என்று காட்டியது.

ஒரு கிராமத்தில் வசிக்கும் செல்வாக்கு மிகுந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனுக்கு சினிமாவில் நடிக்கும் பிரபல கதாநாயகியின் மீது காதல் ஏற்படுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் ராஜகுமாரன் கொடுத்த அழகான குடும்ப திரைப்படம் தான் விண்ணுக்கும் மண்ணுக்கும்.
திரையரங்கில் சினிமா பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது இடையே வரும் விளம்பரத்தின் போதும் நடிகை தேவயானி வருவதைக் கண்டு கிராமத்தில் பெரிய குடும்பத்தைச் சேர்ந்த விக்ரமுக்கு அவர் மீது காதல் ஏற்படுகிறது.
யதார்த்தமாக கிராமத்திற்குப் படப்பிடிப்பிற்காக வரும் தேவயானியை நடிகர் விக்ரம் தொடர்ந்து காதலிக்கிறார். விக்ரமின் குடும்பம் அவரை மருமகளாக ஏற்றுக் கிராமத்தில் படப்பிடிப்பு எடுக்க ஒத்துக் கொள்கின்றனர். ஆனால் இது நடிகை தேவயானிக்கு தெரியாது. அவரது அம்மாவிற்கு மட்டும் தெரியும்.