Middle Class Madhavan : 6 மணிக்கு மேல் போதை ஆசாமி.. நடுத்தர மக்களின் வாழ்க்கை பயணம்.. 23ஆம் ஆண்டில் மிடில் கிளாஸ் மாதவன்
23 Years of Middle Class Madhavan : மிடில் கிளாஸ் மாதவன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 23 ஆண்டுகளாகின்றன. நடுத்தர மக்களின் வாழ்க்கை பயணம் என்பது அவ்வளவு எளிதானது கிடையாது என்பதை நகைச்சுவை கலந்து நமக்கும் உணர்த்திய படம்.

மிடில் கிளாஸ் மாதவன் படத்தில் பிரபு மற்றும் அபிராமி நடித்துள்ளனர். வடிவேலு , விவேக் , மணிவண்ணன் மற்றும் பலர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். கூட்டுக் குடும்பத்தில் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் புதுமணத் தம்பதிகளின் துயரங்களை படம் நமக்கு உணர்த்தும். இந்தப் படம் தெலுங்கில் மீ இன்டிகோஸ்டே யெம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது . இப்படத்திற்கு தீனா இசையமைத்தார். வாலி பாடல்களை எழுதி இருப்பார்.
மிடில் கிளாஸ் மாதவன்
இயக்குநர் டி.பி கஜேந்திரனின் இயக்கத்தின் 2001 ஆம் ஆண்டு பிரபு, அபிராமி, வடிவேலு, விவேக் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் மிடில் கிளாஸ் மாதவன். முழுக்க முழுக்க காமெடி கலந்து வெளிவந்த இந்த திரைப்படத்தில் விவேக் மற்றும் வடிவேலுவின் காமெடி இப்போதும் கூட ரசிக்கப்பட்டு வருகிறது. அந்த அளவுக்கு ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த படம் மிடில் கிளாஸ் மாதவன். இப்படத்தில் தான் மாலா மாலா என்ற காமெடி இடம் பெற்று இருக்கும். இது இன்றும் அனைவரும் கிண்டல் செய்ய பயன்படுத்தும் ஒரு காமெடியாக உள்ளது.
மாதவன் வேடத்தில் பிரபும், அபிராமி பெயர் மாற்றாமல் அபிராமி என்ற காதபாத்திரத்திலும், வடிவேலு குழந்தைவேலுவாகவும், மணிமாறனாக விவேக்கும், மாதவனின் முதலாளியாக விசுவும், பெருமாள் - மாதவனின் அப்பாவாக டெல்லி கணேஷ், புஷ்பாவாக ரேவதி சங்கரன் மாதவனின் அம்மாவும், மால குழந்தைவேலுவாக (மாதவனின் சகோதரி) தரணியும், ராதிகா சௌதாரி நீலா மணிமாறனாகவும் (மாதவனின் சகோதரி), டி.பி.கஜேந்திரன் வழிப்போக்கராகவும் (சிறப்பு தோற்றம்) நடித்து இருப்பார்கள்.
படத்தின் கதை
உலகம் அறியாத இரண்டு தங்கைகள், சீட்டு விளையாடும் ஒரு தந்தை, அப்பாவின் தாய் என ஒரு குடும்பத்தைத் தாங்கக் கூடிய இளைஞனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படத்தின் கதை நகரும். தங்கைகளைத் திருமணம் செய்து கொள்ளக்கூடிய உதவாக்கரை மாப்பிள்ளைகள் வீட்டோடு தங்கி விடுகிறார்கள். அவர்களுக்கும் சேர்த்து உழைத்து தனது மனைவியோடு காதலைப் பரிமாற முடியாமல் வாழ்க்கையை மன வேதனையோடு கழித்து கடைசியில் குடும்பத்தில் உள்ள அனைவரும் அவரது நிலையைப் புரிந்து கொண்டு தனது மனைவியோடு சேர்த்து வைக்கின்றனர். இதுதான் இப்படத்தின் கதை.
இந்த படத்தில் இடம்பெற்ற நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் இன்றுவரை சூப்பர் ஹிட். நகைச்சுவை ஜாம்பவான்களான விவேக்கும், வடிவேலும் இணைந்து அடித்த லூட்டி தான் இந்த திரைப்படத்தில் மிகப்பெரிய வெற்றி. வடிவேலுவின் அசாத்திய காமெடிகள் வேற லெவலில் இருக்கும். அப்படிப்பட்ட முழுமையான நகைச்சுவை திரைப்படங்கள் இன்று வரை எதுவும் வரவில்லை அப்படி வந்திருந்தாலும் இத்தனை ஆண்டுகள் கடந்தும் நீடித்துப் பேசப்படவில்லை.
23 ஆண்டுகள் ஆகிறது
காலை தொடங்கி மாலை வரை ஆட்டோ ஓட்டுநராகத் தெய்வீகமாக வளம் பெறக்கூடிய வடிவேலு, ஆறு மணிக்கு மேல் போதை ஆசாமியாக மாறி பெற்றவர்களைப் போட்டு வெளுத்தெடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதேபோல எண்ணெய்யில் கால் வைத்து தாத்தா தருகிருட தைய தைய என எண்ணையில் வலுக்கிப் பீரோவில் முட்டிக் கொள்ளும் விவேக்கின் நகைச்சுவை அளப்பரியது. இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 23 ஆண்டுகளாகின்றன.நடுத்தர மக்களின் வாழ்க்கை பயணம் என்பது அவ்வளவு எளிதானது கிடையாது. ஏழை ஏழையாகவும், பணக்காரர் பணக்காரராகவும் வாழ்வதைவிட இதற்கு நடுவில் வாழ்வதுதான் மிகப்பெரிய கொடுமை என்பதை உணர்த்திய திரைப்படம் மிடில் கிளாஸ் மாதவன்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்