தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஆதரவின்றி ஆசிரமத்தில் வளர்ந்த இளைஞன்.. வெளியுலகம் அவனுக்கு கற்று கொடுக்கும் பாடம்.. 21ஆம் ஆண்டில் காதல் கொண்டேன்!

ஆதரவின்றி ஆசிரமத்தில் வளர்ந்த இளைஞன்.. வெளியுலகம் அவனுக்கு கற்று கொடுக்கும் பாடம்.. 21ஆம் ஆண்டில் காதல் கொண்டேன்!

Divya Sekar HT Tamil
Jul 04, 2024 06:20 AM IST

20 Years Of Kaadhal Konden : செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்த காதல் கொண்டேன் படம் வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகள் ஆகிறது.

ஆதரவின்றி ஆசிரமத்தில் வளர்ந்த இளைஞன்.. வெளியுலகம் அவனுக்கு கற்று கொடுக்கும் பாடம்.. 21ஆம் ஆண்டில் காதல் கொண்டேன்!
ஆதரவின்றி ஆசிரமத்தில் வளர்ந்த இளைஞன்.. வெளியுலகம் அவனுக்கு கற்று கொடுக்கும் பாடம்.. 21ஆம் ஆண்டில் காதல் கொண்டேன்!

துள்ளுவதோ இளமைக்கு பிறகு இயக்குநர் செல்வராகவன், தனுஷ், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, பாடலாசிரியர் நா.முத்துகுமார் , ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா ஆகியோர் கூட்டணியில் 2ஆவது முறையாக இணைந்த படம் காதல் கொண்டேன். இப்படம் அனைவருக்கும் திருப்புமுனையாக அமைந்தது.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்த காதல் கொண்டேன் படம் கடந்த 2003ஆம் ஆண்டு ரிலீஸாகி பெரிய அளவில் வெற்றி பெற்றது.

கதை

அம்மா அப்பா இல்லாமல் தனியாக ஆதரவின்றி அநாதை ஆசிரமத்தில் வளர்ந்த இளைஞன் வெளியுலகத்தில் அடியெடுத்து வைக்கிறான். வெளியுலகம் மிகவும் புதுமையாக தெரியும். அதனை எவ்வாறு சமாளிப்பது என்று குழப்பம். கொஞ்சம் கொஞ்சமாக வெளியுலகம் என்னவென்று பார்த்து புரித்து கொள்கிறான்.

கெட்டுப்போன உணவை உண்டு, யாரிடமும் அதிகம் பேசமால், பழைய சட்டை, குச்சி மாதிரி உடல் இவைதான் இவனின் தோற்றமும், அனைவருக்கும் கடினமான விஷயத்தை இவர் ஈஸியாக செய்கிறான். ஆனால் அனைவரும் எளிமையாக நினைக்கும் விஷயங்கள் அனைத்துமே இவன் கண்ணுக்கு சிக்கலாகவும் தெரிகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

இதனால் கல்லூரியில் சக மாணவர்களுடன் சகஜமாக பழக முடியாமல் தவிக்கிறான். ஆசிரமத்தை தொடர்பு கொண்டு கதறி துடிக்கிறான். ஆனால் அவர்களோ படிக்க சொல்லி போன் அழைப்பை துண்டித்து விடுகின்றனர். பின்னர் கல்லூரில் கேலி கிண்டலால் அசிங்கப்படுகிறான். அனைவரும் இவனை பார்த்துச் சிரிக்கிறார்கள். இப்படியான சூழ்நிலையில் தான் இவனுக்கு ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைக்கிறது.

நட்பு நாளாடைவில் காதலாக மாறுகிறது

பின்னர் வெளியுலக வாழ்க்கை நட்பு வாயிலாக கொஞ்சம் கொஞ்சமாக புரிய வருகிறது. வேறோர் உலகத்தை வாழத் தொடங்குகிறான். நட்பு நாளாடைவில் காதலாக மாறுகிறது. ஒருதலையாக அப்பெண்ணை ரசிக்க ஆரம்பிக்கிறான். அவன் வித்தியாசமான ஒரு உலகை ரசிக்க ஆரம்பிக்கிறான். அவளை பார்க்க படிப்பை சாதகமாக பயன்படுத்தி வீடுவரை சென்று ரசிக்கிறான். அவளது சிறிய பிரிவை கூட அவனால் தாங்க முடியவில்லை. ஆனால் அவளுக்கோ இவனை நட்பாக தான் பார்க்க முடிந்தது. அவளுக்கு வேறொருவனோடு காதல் மலர்ந்தது.

இதனை அறிந்தும் அவனால் காதலை விட முடியவில்லை. தொடர்ந்து ரசித்து கொண்டே இருக்கிறான். மீண்டும் தனிமை இவனை ஆட்கொள்கிறது. காதல் வழியில் தன்னந்தனியாகப் பயணிக்கும் இவனால் மீண்டும் நட்பு வட்டத்துக்குள் வரமுடியவில்லை. 

காதலா, நட்பா

அவனது காதல் கடைசிவரை ஏற்கப்படப் போவதில்லை என்பதும் அவனுக்குத் தெரியும். இறுதியில் காதலா, நட்பா என அவளுக்குக் கேள்வி எழுகிறது. வலுக்கட்டாயமாக இழுத்து பிடித்து வைக்கப்பட்ட அன்பு அவனுக்கு நிறைவளிக்காது என்று உணர்ந்து தனது விதியை தானே தேர்வு செய்துகொள்கிறான்.காதலுக்கான அர்த்ததைப் புரிந்துகொண்டு உலகத்திலிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்கிறான் இவன்.

21ஆம் ஆண்டில் காதல் கொண்டேன்

இப்படத்தில் முத்துகுமார் வரிகளில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை அனைவரையும் கட்டிபோட்டு இருக்கும். அனைத்து பாடல்களும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. யாராலும் மறுக்க முடியாத உன்மை.

இப்படத்தின் தாக்கம் இன்றும் யாராலும் மறக்க முடியாது. இவனை போல இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படம் கொடுத்த தாக்கத்தை எப்போதாவது அனுபவித்திருப்போம். காதல் கொண்டேன் என்ற இந்த அற்புத படைப்பு வெளிவந்து இன்றோடு 21 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.