Tamil News  /  Entertainment  /  It Has Been 15 Years Since Bala 2009 Film Naan Kadavul

Naan Kadavul : பிச்சைக்காரர்களின் உலகம்.. அகோரிகளின் வாழ்வு.. அஜிதுக்கு பதில் ஆர்யா..15ஆம் ஆண்டில் நான் கடவுள்!

Divya Sekar HT Tamil
Feb 06, 2024 06:15 AM IST

15 Years of Naan Kadavul : பிச்சைக்காரர்களின் உலகம், அகோரிகளின் வாழ்வு, தெரு கலைஞர்களின் வாழ்வு, கடவுளாக வாழும் அகோரிகள், பண முதலைகளாக வாழும் முதலாளிகள் என ஒவ்வொரு சகாப்தத்தையும் ஒரே ஒரு கட்டுக்குள் அடக்கப்பட்ட திரைப்படம் நான் கடவுள்.

15ஆம் ஆண்டில் நான் கடவுள்
15ஆம் ஆண்டில் நான் கடவுள்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் சினிமா தவிர்க்க முடியாத இயக்குநர்களைப் பாலாவும் ஒருவர். கலை படைப்பாளி பாலுமகேந்திராவின் பட்டரையிலிருந்து வந்தவர் இயக்குநர் பாலா. முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றவர். திரைப்படங்கள் பொதுவாக கலர்ஃபுல்லாக இருக்கும். என்ற எண்ணத்தை உடைத்து எதார்த்தத்தை வித்தியாசமான கோணத்தில் விதைத்தவர் இயக்குநர் பாலா. முன்னணி நட்சத்திரங்களாக இருக்கக்கூடிய நடிகர்கள் இவரது படத்தில் நடிக்கத் தயங்குவார்கள்.

ஏனென்றால் இயக்குநர் பாலா இயக்கும் விதமும், நடிப்பு கற்றுத் தரும் விதமும் வித்தியாசமானது. சேது, நந்தா, பிதாமகன் ஆகிய படங்களுக்கு அடுத்து இவர் இயக்கிய திரைப்படம் நான் கடவுள். இந்த திரைப்படத்தில் முதலில் அஜித்குமார் நடிப்பதாக இருந்தது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த படத்திலிருந்து நடிகர் அஜித்குமார் விலகினார்.

அதாவது இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் நடிகர் அஜித்.நான் கடவுள் படத்திற்காக முடியெல்லாம் வளர்த்து தன்னை தயார் படுத்திக்கொண்டிருந்தார் அஜித்.இதற்கிடையில் பாலாவிற்கும் அஜித்திற்கும் இடையே சண்டை மூண்டது. இந்த சண்டையில் பாலா அஜித்தை அடித்தார் என்ற தகவலும் இருக்கிறது. இதனையடுத்து தான் அந்த கூட்டணி முறிந்தது.

இதுவரை வட மாநிலத்தைப் பார்க்காத கோணத்தில் காட்டி இருப்பார் பாலா. பார்க்கும் இடமெல்லாம் பிணங்கள், எரியும் நெருப்பில் தவம், அகோரிகளின் வாழ்வு, தென்பகுதியிலிருந்து காசியில் பிச்சை எடுக்கும் அனாதைகள், முதல் ஊனமுற்றவர்கள் என அனைத்து உலகங்களையும் ஒரு கட்டுக்குள் இணைத்து கதையாகக் காட்டப்பட்ட திரைப்படம் நான் கடவுள்.

இதில் இளையராஜாவின் இசை ஒரு பக்கம் ருத்ர தாண்டவம் ஆடும், அதிகம் பேசாத ஆர்யா ருத்ரனாக படத்தில் வாழ்ந்திருப்பார். நான் கடவுள் படத்திற்கு முன்பு வரை நடிகர் ஆர்யா நடித்திருந்த விதத்திற்கும் இந்தப் படத்திற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. இந்தக் கதாபாத்திரத்திற்காக ஆர்யாவுக்கு பாராட்டுகளும் கிடைத்தது.

எந்தக் கதாநாயகியாக இருந்தாலும் இப்படி ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பாரா? என்று சந்தேகம் அனைவருக்கும் எழும் அளவிற்குத் தனது நேர்த்தியான நடிப்பை பூஜா அழகாக வெளிப்படுத்தி இருப்பார்.வ்இந்த திரைப்படம் ஜெயமோகன் எழுதிய ஏழாவது உலகம் நாவலிலிருந்து எடுத்ததாகும். இதுவரை யாரும் கண்டிராத பிச்சைக்காரர்கள் இந்த உலகத்தைத் தெளிவாக இந்த படத்தில் காட்டி இருப்பார் பாலா.

இந்த படத்தில் எந்த இடத்திலும் செயற்கை என்ற பிம்பமே தெரியாது அந்த அளவிற்குத் தனது மூன்று வருடக் கடின உழைப்பைத் தெளிவாக உணர்த்தி இருப்பார். பிச்சைக்காரர்களின் உலகம், அகோரிகளின் வாழ்வு, தெரு கலைஞர்களின் வாழ்வு, கடவுளாக வாழும் அகோரிகள், பண முதலைகளாக வாழும் முதலாளிகள் என ஒவ்வொரு சகாப்தத்தையும் ஒரே ஒரு கட்டுக்குள் அடக்கப்பட்ட திரைப்படம் நான் கடவுள்.

ஒட்டு மொத்த காசியையும் ஒரு கேமராவிற்குள் ஆர்தர் வில்சன் சுருட்டி திரையில் கொடுத்திருப்பார். பல கொலைகளைச் செய்யும் ருத்ரன் ஆர்யாவை நீதிமன்றம் விடுதலை செய்து விடும், படத்தில் சர்ச்சைக்கான பல முகாந்திரம் இருந்தாலும் பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது என்றே சொல்ல வேண்டும். இப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.