12 Years of Kazhugu: ஆத்தாடி மனசுதான் ரெக்க கட்டி பறக்குது..மனதை பாதிக்கும் கதை..12ஆம் ஆண்டில் கழுகு
12 Years of Kazhugu: இசையால் மயக்கி புது உலகத்திற்கு கொண்டு சென்ற கழுகு திரைப்படம் ரசிகர்கள் மனதில் நீங்க இடத்தை பிடித்துள்ளது. இன்றுடன் இந்த திரைப்படம் வெளியாகி 12 ஆண்டுகளாகின்றன.
கிருஷ்ணா, பிந்து மாதவி, தம்பி ராமையா, கருணாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க அறிமுக இயக்குந சத்யசிவா இயக்கத்தில் 2012இல் வெளியான படம் கழுகு. 1981இல் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கழுகு படத்தின் டைட்டிலை முறையாக அனுமதி பெற்று இந்தப் படத்துக்கு வைத்தனர்.
படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப மலை உச்சியில் இருந்து தற்கொலை செய்து கொள்பவர்களின் பிணங்களை கீழே சென்று மேலே பத்திரமாக எடுத்து வரும் கதாபாத்திரத்தில் வரும் ஹீரோ தமிழ் சினிமாவுக்கு ப்ரஷ்ஷாகவே இருந்தது.
ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்கள் என்றாலே டுயட் பாடல் அல்லது காமெடி, காதல் போன்ற காட்சிகளை வைத்த பழக்கப்படுத்தி வந்த க்ளிஷேவை, சீட் நுனியில் அமரவைக்கும் த்ரில்லர் படங்களின் மூலம் இயக்குநர் பாலுமகேந்திர மாற்றி அமைத்தார்.
இதை நூல் போல் பிடித்துக்கொண்டு பல இயக்குநர்கள் திகில், த்ரில்லர் படங்களை இதுபோன்ற ரம்மியமான மலை பகுதியில் உருவாக்கி வந்தனர். ஆனால் அந்த மலை கிராமங்களிலேயே பிறந்து, வாழ்ந்து வரும் மண்ணின் மைத்தன் பற்றி படமாக இருந்தது கழுகு.
கதை என்பது காதல், வில்லனுடன் மோதில், இறுதியில் ரத்த தெறிக்க க்ளைமாக்ஸ் என கமர்ஷியல் படத்துக்கான அம்சங்கள் அச்சு பிசாகாமல் இருந்தாலும், படத்தை எடுத்த விதத்தில் இயக்குநர் கவனம் ஈர்த்தார்.
Suicide Point என்று சொல்லப்படும் இடத்தில் இருந்து கீழே குதித்து ஆண் அல்லது பெண் தற்கொலை, காதல் ஜோடிகள் தற்கொலை என நாளிதழ்கள், டிவியில் வரும் செய்திகளை பார்த்துள்ளோம். அப்படி இறந்தவர்களின் சடலங்களை மீட்பதற்கென்று அந்த பகுதியில் மீட்பாளர்கள் இருந்து வருகிறார்கள்.
அந்த மீட்பாளர்களின் வாழ்க்கை, அவர்களின் சந்தோஷம், துக்கம் போன்ற நிகழ்வுகள் மிகவும் எதார்த்தமாகவும், அதே சமயம் எந்தவொரு இடத்திலும் சுணக்கம் அடையாமலும் மிகவும் நேர்த்தியாக திரைக்கதை அமைத்து படத்தை உருவாக்கியிருப்பார்கள்.
படம் நடைபெறும் கதைகளமே அதன் அழகியலை கூட்டிய நிலையில், யுவனின் இசை அதை மேலும் மெருகேற்றியது. ஆத்தாடி மனசு தான், பாதகத்தி கண்ணுபட்டு பாடல்களில் மெலடி இதம் தந்த யுவன், ஆம்பளைக்கும் பொம்பலைக்கும் பாடல் மூலம் துள்ளல் கொண்டாட்டத்தில் ஈடுபட வைத்தார்.
க்ளைமாக்ஸ் தவிர தனிப்பட்ட முறையில் சொல்லும் விதமாக தாக்கத்தை ஏற்படுத்த கூடிய காட்சிகள் இல்லாவிட்டாலும், ரசிகர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு படமாக அமைந்திருந்தது. இதனால் கலவையான விமர்சனைங்கள் படத்தின் ரிலீஸின்போது பெற்றிருந்தாலும், பாக்ஸ் ஆபிஸிலும் கணிசமான வசூலை பெற்றது.
தனிப்பட்ட முறையில் இந்த திரைப்படத்தை வெற்றி பாதிக்க அழைத்துச் சென்றவர் யுவன் சங்கர் ராஜா. இவரைப் பற்றி கட்டாயம் சிறப்பாக பேசியே ஆக வேண்டும். அந்த அளவிற்கு தனது முழுமையான திறமையை இந்த திரைப்படத்தில் வெளிப்படுத்தி இருப்பார். தேவையான இடங்களில் அமைதியை கொடுத்து ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார்.
இயற்கையோடு விளையாடும் எந்த திரைப்படமாக இருந்தாலும் அங்கு யுவன் சங்கர் ராஜா தனது மொத்த வித்தைகளையும் வைத்து விளையாடி இருப்பார். அதில் காதல் வேறு சொல்லவே தேவை இல்லை, கதை ஒரு பக்கம் என்றால் யுவன் சங்கர் ராஜா மறுபக்கம் புரட்டி எடுத்து இருப்பார்.
இந்த கழுகு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், இசையால் மயக்கி புது உலகத்திற்கு கொண்டு சென்ற கழுகு திரைப்படம் ரசிகர்கள் மனதில் நீங்க இடத்தை பிடித்துள்ளது. இன்றுடன் இந்த திரைப்படம் வெளியாகி 12 ஆண்டுகளாகின்றன.
எளிய மக்களின் காவியமாக உருவான கழுகு திரைப்படம் எப்போதும் ரசிகர்கள் மனதில் பறந்து கொண்டே இருக்கும் என்று கூறினால் அது மிகையாகாது.
2012, மார்ச் 16-இல் ரிலீசான இந்தப் படம் அந்த ஆண்டில் நல்ல வசூலை குவித்த பட்ஜெட் படங்களில் ஒன்றாக இடம்பிடித்தது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்