10 Years of Rummy : கூட மேல கூட வச்சு.. விஜய் சேதுபதி நடிப்பில் விறுவிறுப்பான காதல் கதை.. 10 ஆண்டுகளை கடந்த ரம்மி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  10 Years Of Rummy : கூட மேல கூட வச்சு.. விஜய் சேதுபதி நடிப்பில் விறுவிறுப்பான காதல் கதை.. 10 ஆண்டுகளை கடந்த ரம்மி!

10 Years of Rummy : கூட மேல கூட வச்சு.. விஜய் சேதுபதி நடிப்பில் விறுவிறுப்பான காதல் கதை.. 10 ஆண்டுகளை கடந்த ரம்மி!

Divya Sekar HT Tamil
Jan 31, 2024 06:24 AM IST

விஜய் சேதுபதி, காயத்ரி, ஐஸ்வர்யா ஆகியோர் நடிப்பில் வெளியான ரம்மி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகிறது.

10 ஆண்டுகளை கடந்த ரம்மி
10 ஆண்டுகளை கடந்த ரம்மி

இதில் விஜய் சேதுபதி , இனிகோ பிரபாகர் , ஐஸ்வர்யா ராஜேஷ் , காயத்ரி சங்கர் , சூரி மற்றும் ஜோ மல்லூரி ஆகியோர் நடித்துள்ளனர். ராஜா முகமது படத்தொகுப்பிலும், பிரேம்குமார் சந்திரனின் ஒளிப்பதிவிலும் படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு டி.இம்மான் இசையமைத்துள்ளார்.

இக்கதை புதுக்கோட்டை, காரைக்குடி மற்றும் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களான சக்தி மற்றும் ஜோசப் இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்களைக் காதலிப்பதைச் சுற்றி கதை நகர்கிறது. இனிகோ பிரபாகர் கிராமத்திற்கு அருகில் உள்ள கல்லூரிக்குப் படிக்க வருகிறார். அவருக்குக் உடன் படிக்கும் பூலாங்குறிச்சி காயத்ரிடன் காதல். இனிக்கோவின் தோழன் விஜய் சேதுபதி மற்றும் சூரி. பக்கத்து ஊரைச் சேர்ந்த சையத் காயத்ரிக்காகவே அதே கல்லூரியில் சேர்கிறார்.

ஒரு கட்டத்தில் இனிக்கோ சக்திக்கும், சையத்துக்கும் மோதல் வெடிக்கிறது. ரவுடிகளைக் கூட்டிப் போய் கல்லூரி விடுதியில் சண்டை போடுகிறார். அதனால் கல்லூரி நிர்வாகம் சையத்தைக் கல்லூரியை விட்டு நீக்குகிறது. சக்தியையும் ஜோசப்பையும் கல்லூரி விடுதியை விட்டு மட்டும் நீக்குகிறது.

அவர்கள் பூலாங்குறிச்சி கிராமத்தில் சூரி உதவியுடன் வீடு எடுத்துத் தங்குகிறார்கள். ஜோசப்புக்கும், ஜஸ்வர்யா என்கிற உள்ளூர்ப் பெண்ணுக்கும் இடையே காதல் உருவாகிறது. ஊர்ப் பெரியவருக்கு தன் தம்பி மகளான காயத்ரியின் காதல் விவகாரம் தெரிகிறது. இனிகோ தன் சொந்த ஊருக்குச் சென்றிருந்த சமயம் ஐஸ்வர்யாவிற்குக் திருமண ஏற்பாடுகள் நடக்க, விஜய் சேதுபதியும் ஐஸ்வர்யாவும் ஊரை விட்டு வெளியேறுகிறார்கள்.

ஐஸ்வர்யா ஊர் பெரியவரின் மகள் என்பது அப்போது தான் தெரிய வருகிறது. பெரியவரின் ஆட்கள் ஜோசப்பைக் கொன்று ஐஸ்வர்யாவை அழைத்து வருகிறார்கள். பெரியவர் ஐஸ்வர்யாவையும் கொல்லத் துணிகிறார். இதையெல்லாம் காயத்திரி கேட்டுவிடுகிறார். தனக்கும் இனிகோவிற்கும் இந்த நிலைதான் நடக்கும் எனப் பரிதவிக்கிறார். ஆனால் அவர்கள் காயத்திரியைப் பார்த்துவிடுகிறார்கள்.

காயத்திரி - இனிகோ காதல் சேர்ந்ததா, ஐஸ்வர்யா கொலை செய்யப்பட்டாரா என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் கே.பாலகிருஷ்ணன். கதை முழுவதும் 1987இல் நடக்கிறது. இதுதான் இப்படத்தின் கதை. இப்படத்தில் ஜோசப், சக்தியின் நண்பராக விஜய் சேதுபதியும், ஜோசப்பின் நண்பராக இனிகோ பிரபாகர் சக்தியும், சொர்ணமாக ஐஸ்வர்யா ராஜேஷ் , ஜோசப்பின் காதலி மீனாட்சியாக காயத்ரி சங்கர் , சக்தியின் காதலி அருணாசலமாக சூரி, சக்தியின் நண்பனாக சென்ட்ராயன்,சக்தியின் அம்மாவாக சுஜாதா சிவக்குமார்,

சொர்ணாவின் சகோதரனாக சரண் சக்தி, சக்தியின் அப்பாவாக எல்.ராஜா, சொர்ணத்தின் மாமாவாக மூணார் ரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் இடம்பெற்ற கூட மேல கூட வச்சு பாடல் செம ஹிட். வி.வி.பிரசன்னா , வந்தனா சீனிவாசன் ஆகியோர் இணைந்து பாடி இருப்பார்கள். இப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.