தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ishari K Ganesh On Silambarasan: ‘சிலம்பரசன் ஏமாத்துறார்; மணிரத்னம் படத்தை உடனே நிறுத்துங்க’ - கொந்தளித்த தயாரிப்பாளர்!

Ishari K Ganesh on Silambarasan: ‘சிலம்பரசன் ஏமாத்துறார்; மணிரத்னம் படத்தை உடனே நிறுத்துங்க’ - கொந்தளித்த தயாரிப்பாளர்!

Kalyani Pandiyan S HT Tamil
May 10, 2024 02:44 PM IST

Ishari K Ganesh on Silambarasan: அவர் மணிரத்னம் படத்தில் நடிக்கக்கூடாது. அதன் படப்பிடிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Ishari K Ganesh on Silambarasan: ‘சிலம்பரசன் ஏமாத்துறார்; மணிரத்னம் படத்தை உடனே நிறுத்துங்க’ - தயாரிப்பாளர் புகார்!
Ishari K Ganesh on Silambarasan: ‘சிலம்பரசன் ஏமாத்துறார்; மணிரத்னம் படத்தை உடனே நிறுத்துங்க’ - தயாரிப்பாளர் புகார்!

ட்ரெண்டிங் செய்திகள்

வெந்து தணிந்தது காடு - பிரச்சினை 

தமிழ் சினிமாவில் ‘தேவி’, ‘போகன்’, ‘எல்.கே.ஜி’, ‘கோமாளி’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘குட்டி ஸ்டோரி’, ‘வெந்து தணிந்தது காடு’ உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் போது, இவருக்கும், நடிகர் சிலம்பரசனுக்கும் இடையே பிரச்சினை எழுந்ததாக சொல்லப்பட்டது. இந்த நிலையில், இவர் தற்போது சிலம்பரசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.

கொரோனா குமார்

அந்த புகாரில் சிலம்பரசன் கொரோனா குமார் என்ற திரைப்படத்தில் நடித்துக்கொடுப்பதாக கூறி, என்னுடைய நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்திருந்தார். ஆனால் அவர் அந்தப்படத்தில் நடித்துக்கொடுக்காமல், தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்.

இதற்கிடையே, சிலம்பரசன் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். தன்னுடைய நிறுவனத்தில் போடப்பட்ட ஒப்பந்ததின் படி, கொரோனா குமார் படத்தில் நடித்துக்கொடுக்காமல், அவர் மணிரத்னம் படத்தில் நடிக்கக்கூடாது. அதன் படப்பிடிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

முன்னதாக, இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அதில், கொரோனா குமார் படத்தில் நடிப்பதற்காக சிலம்பரசனுக்கு 9.5 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு, அதில் 4.5 கோடி ரூபாய் முன்பணமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அந்தப்படத்தில் நடிப்பதற்கு தற்போது வரை அவர் நேரம் கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார். முன் பணத்தையும் திரும்ப தர மறுக்கிறார் என்று கூறியிருந்தார்.

இது தொடர்பான விசாரணை தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்தது. இதனையடுத்து, ஐசரி கணேஷூக்கு போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி, அவரது படத்தில் நடிக்காமல் சிலம்பரசன் வேறு படத்தில் நடிக்கக்கூடாது என்று கூறி தயாரிப்பாளர் சங்கம், மறைமுகமாக அவருக்கு ரெட் கார்டு போட்டதாக சொல்லப்படுகிறது. 

முன்னதாக, ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் படம், தக் லைஃப். நடிகர் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, நாசர், கவுதம் கார்த்திக், ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டப் பலர் நடித்துவருகின்றனர்'. ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தை மணிரத்னம் எழுதி இயக்குகிறார்.

36 ஆண்டுகளுக்குப் பின் கமல்ஹாசன் -மணிரத்னம் கூட்டணி!

தக் லைஃப் படத்தின்மூலம் 36 ஆண்டுகளுக்குப் பின், கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணி மீண்டும் ஒன்றுசேர்ந்துள்ளது, இந்தப்படம், இந்திய அளவில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்து இருக்கிறது. ஏனெனில், மும்பையில் கோலோச்சிய தாதா வரதராஜ முதலியாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, 1987ஆம் ஆண்டு உருவாக்கிய ‘நாயகன்’ திரைப்படம் உலகளவில் கல்ட் ஃபிலிமாக இன்றளவும் பார்க்கப்படுகிறது. 

இதனால், கமல்ஹாசன் மற்றும் மணி ரத்னம் மீண்டும் இணைந்து உருவாகவுள்ள ‘தக் லைஃப்’படத்துக்கும் மிகப்பெரிய வரவேற்பு உலகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தக் லைஃப் படத்தின் முதல் செட்யூல் சென்னையில் முடிந்ததைத் தொடர்ந்து, இரண்டாவது செட்யூல் செர்பியாவில் நடைபெற்று வருகிறது. 

விலகிய துல்கர் சல்மான்: 

இதனிடையே இப்படத்தில் நடித்து வந்த துல்கர் சல்மான், திடீரென கால்ஷீட் பிரச்சினையால் விலகி, லக்கி பாஸ்கர் என்னும் தெலுங்கு படத்தில் முழுமையாக நடித்து வருகிறார். இதனால், அந்த இடத்தில் துல்கர் சல்மானுக்குப் பதிலாக, சிம்புவை நடிக்க வைத்திருக்கிறார் மணிரத்னம்.

இப்படத்தின் ஷூட்டிங்கிற்காக சிம்பு, ராஜஸ்தானின் ஜெய்சல்மர் நகருக்குச் சென்றிருக்கிறார். கடும் வெயிலிலும் வெப்பத்தைப் பொருட்படுத்தாமல் சிம்பு நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. அப்போது எடுக்கப்பட்ட சிம்புவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்