களத்தில் இறங்கிய இளையராஜா பேரன்.. திருவண்ணாமலையில் முதல் பாடல்.. சினிமா வாய்ப்புக்கு காத்திருப்பதாக பேட்டி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  களத்தில் இறங்கிய இளையராஜா பேரன்.. திருவண்ணாமலையில் முதல் பாடல்.. சினிமா வாய்ப்புக்கு காத்திருப்பதாக பேட்டி!

களத்தில் இறங்கிய இளையராஜா பேரன்.. திருவண்ணாமலையில் முதல் பாடல்.. சினிமா வாய்ப்புக்கு காத்திருப்பதாக பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 08, 2025 04:53 PM IST

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் என்னுடைய மனைவியும் என்னுடைய மகனுமான யத்தீஸ்வரனும் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு ஒலிக்கப்பட்ட பக்தி பாடல்களை கேட்டு விட்டு இதேபோல நாமும் செய்யலாமே என்று யத்தீஷ்வர் கூறினான். - கார்த்திக் ராஜா பேட்டி!

களத்தில் இறங்கிம் இளையராஜா பேரன்.. திருவண்ணாமலையில் முதல் பாடல்.. சினிமா வாய்ப்புக்கு காத்திருப்பதாக பேட்டி!
களத்தில் இறங்கிம் இளையராஜா பேரன்.. திருவண்ணாமலையில் முதல் பாடல்.. சினிமா வாய்ப்புக்கு காத்திருப்பதாக பேட்டி!

கார்த்திக் ராஜா பேட்டி

இந்த பாடல் அறிமுகம் குறித்து கார்த்திக் ராஜா பேசும் போது, ‘திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் என்னுடைய மனைவியும் என்னுடைய மகனுமான யத்தீஸ்வரனும் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு ஒலிக்கப்பட்ட பக்தி பாடல்களை கேட்டு விட்டு இதேபோல நாமும் செய்யலாமே என்று யத்தீஷ்வர் கூறினான்.

நான் உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்யுங்கள் என்று கூறினேன். நான் பார்வையாளர் என்ற இடத்தில் இருந்துதான் இந்த பாடலை பார்த்திருக்கிறேன். நன்றாக செய்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். தமிழ் மக்கள் கேட்டுவிட்டு அதனை கூற வேண்டும்.

யத்தீஸ்வர் இசைத்துறைக்கு வந்திருப்பது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக பெருமையாக இருந்தாலும் இன்னொரு பக்கம் பயமாக இருக்கிறது. காரணம் அவன் நல்லபடியாக வரவேண்டும். இறுதியாக இங்கு மக்கள் தான் நீதிபதி. அவர்கள் தான் முடிவு செய்வார்கள்.’ என்று பேசினார்.

இளையராஜா கூறியது என்ன?

யத்தீஸ்வர் பேசும் போது, ‘ நான் சிறுவயதில் இருந்தே திருவண்ணாமலை கோயிலுக்கு வந்து கொண்டிருக்கிறேன். முதல் பாடல் ஆன்மீக ரீதியாக கடவுளுக்கு செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது தற்போது நனவாகி இருக்கிறது; எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

தாத்தாவிடம் (இளையராஜா) இந்த ஐடியாவை கூறிய போது எப்படி வருகிறதோ வரட்டும்; நீ செய்து விடு என்றார். இதையடுத்து நான் அப்பாவின் உதவியோடு பாடலை செய்து முடித்து இருக்கிறேன். பாடல் வரிகளில் அப்பாவின் உதவி எனக்கு இருந்தது ஆனால் இசைக்கருவிகள் தேர்வு, பயன்படுத்தும் முறை உள்ளிட்டவற்றில் நானே அனைத்தையும் செய்தேன். இரண்டு நாட்களில் இதை நான் செய்து முடித்தேன். சினிமாவில் இசையமைப்பாளராக பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக நான் பணியாற்றுவேன். வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்.’ என்று பேசினார்.