Samantha: ‘வந்த தர்ம சங்கடம்.. முதன்முறையாக டிஸ்கிளைமர் போட்ட நடிகை சமந்தா..’: காரணம் தெரியுமா?
Samantha: வந்த தர்ம சங்கடம் , அதனால் முதன்முறையாக டிஸ்கிளைமர் போட்ட நடிகை சமந்தாவின் செயல் வைரல் ஆகியுள்ளது.

Samantha: சுவாசப் பிரச்னை இருப்பவர்கள் வாய் வழியாக மருந்தினை உறிஞ்சும் முறையான ஹைட்ரஜன் பெராக்சைடு நெபுலைசேஷனை எடுங்கள் என வலியுறுத்தியமைக்காக நடிகை சமந்தா விமர்சனங்களை எதிர்கொண்டார்.
சமீபத்தில் ’லிவர் டாக்’ பாட் காஸ்ட் நிகழ்வில் டாக்டர் சிரியாக் அபே பிலிப்ஸுடன் பேசும்போது, ஹைட்ரஜன் பெராக்சைடை வாய்வழியாக உறிஞ்சுவதற்கு, நடிகை சமந்தா சமீபத்தில் ஆதரவு கொடுத்தார்.
இதற்குப் பலரும் சமந்தாவுக்கு எதிராக சோசியல் மீடியாவில் கொந்தளித்த நிலையில், நடிகை சமந்தா, தனது உடல்நலம் சார்ந்த பாட்காஸ்டில் மறுப்புகளை, அதாவது டிஸ்கிளைமரை சேர்க்கத் தொடங்கியுள்ளார்.
நடிகை சமந்தாவுக்கு வந்த தர்ம சங்கடம்:
நடிகை சமந்தா தனது பாட்காஸ்டின் சமீபத்திய எபிசோடில், இயற்கை மருத்துவரும் எழுத்தாளருமான டேவிட் ஜாக்கர்ஸுடன் வைத்திய நிலைகள் பற்றி விவாதிக்கிறார். இருப்பினும், நடிகை சமந்தா தற்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள எபிசோடின் அனைத்து ரீல்களிலும் ஒரு டிஸ்கிளைமரைச் சேர்க்கத் தொடங்கியுள்ளார். இது 'தகவல் நோக்கங்களுக்காக' மட்டுமே எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.அதற்குக் காரணம், ஹைட்ரஜன் பெராக்சைடை வாய்வழியாக உறிஞ்சும் முறையினை எல்லோரும் எடுக்கலாம் என வலியுறுத்தியதே ஆகும்.
இது தொடர்பாக நடிகை சமந்தா அளித்த மறுப்பு பின்வருமாறு: ‘’இந்த அத்தியாயத்தில் உள்ள ஆடியோ, உரை, கிராஃபிக்ஸ், படங்கள் மற்றும் பிற பொருள்கள், அவை மட்டும் அல்லாத தகவல்கள், வெறும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இந்த அத்தியாயத்தில் உள்ள எந்த பொருளும் தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றாக இருக்க விரும்பவில்லை.
ஒரு மருத்துவ நிலை அல்லது சிகிச்சையைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் கேள்விகள், மாற்றுக்கருத்துகள் இருந்தால் மற்றும் ஒரு புதிய மருத்துவ சிகிச்சையை முறையை மேற்கொள்வதற்கு முன்பு, எப்போதும் உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள். மேலும் தொழில்முறை மருத்துவ ஆலோசனையை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள். இந்த பாட்காஸ்டில் நீங்கள் கேள்விப்பட்ட ஒன்றின் காரணமாகவும், அதுகுறித்த புரிதல் எனக்கு ஏற்பட தாமதம் ஆனதாலும் இந்தப் பதிவு’ என நடிகை சமந்தா கூறியுள்ளார்.
நடிகை சமந்தாவை வசைபாடிய நெட்டிசன்கள்:
இந்த மாத தொடக்கத்தில், சமந்தாவை பலரும் ' மருத்துவ கல்வியறிவு இல்லாவதவர்' என்று பலரும் வசைபாடினர்; ஏனென்றால், வைரஸ் தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க ஹைட்ரஜன் பெராக்சைடு உறிஞ்சுதலை நடிகை சமந்தா பரிந்துரைத்திருந்தார். அதுவே, நெட்டிசன்களின் கோபத்திற்கு காரணமாக மாறியது. அதை தாமதமாக உணர்ந்துகொண்ட நடிகை சமந்தாவின் ரசிகர்கள் சிலர்,"சமந்தாவுக்கு உதவி தேவை. அவளுடைய அணியில் ஒரு சிறந்த ஆலோசகர் தேவை," என்று எழுதியிருந்தனர். பல்வேறு வசைபாடுதலுக்குப் பிறகு, சமந்தா ஒரு விளக்கத்தை வெளியிட்டார். 'தனக்கு அற்புதமாக வேலை செய்த சிகிச்சைகளை மட்டுமே தான் பரிந்துரைப்பதாக’’ நடிகை சமந்தா பகிர்ந்து கொண்டார்.
தனது ரசிகர்களை சமாதானப்படுத்திய நடிகை சமந்தா:
மேலும் நடிகை சமந்தா, ‘’பாட்காஸ்டில் பங்கேற்ற நேயர்களின் நோக்கங்கள் உன்னதமானவை என்று நான் உறுதியாக நம்புகிறேன். சிலர் தனது வார்த்தைகளால் மிகவும் ஆத்திரமூட்டும் வகையில் இருந்திருந்தால் அவர்கள் மீது கொஞ்சம் கருணை காட்டுங்கள்," என்று தனது ரசிகர்களுக்கு எழுதியிருக்கிறார்.
அதேபோல் நடிகை சமந்தா, "குறிப்பாக என்னை சிறையில் தள்ள வேண்டும் என்று ஒரு நேயர் பரிந்துரைக்கிறார். பரவாயில்லை. ஒரு பிரபலம் என்பதால் இவ்வாறு பேசியிருக்கிறார் என்று நினைக்கிறேன். நான் மருத்துவ சிகிச்சைகள் தேவைப்படும் ஒருவராக பதிவிட்டேன், ஒரு பிரபலமாக அல்ல’ என தன் விளக்கத்தை வெளிப்படுத்தினார், சமந்தா.
சமந்தாவுக்கு ஏற்பட்ட உடல் நலப்பாதிப்பு:
மயோசிடிஸ் நோய்ப்பாதிப்பின் காரணமாக ஓய்வு எடுத்துவரும் நடிகை சமந்தா, கடைசியாக 2023ஆம் ஆண்டு, தெலுங்கில் குஷி திரைப்படத்தில் காணப்பட்டார். நடிகை சமந்தா நடித்த சிட்டாடல்: ஹனி பன்னி என்ற வெப்தொடர் விரைவில் ரிலீஸாகவுள்ளது. மா இன்டி பங்காரம் என்ற படத்தையும் தயாரித்து, தெலுங்கில் நடிக்கிறார், நடிகை சமந்தா.

டாபிக்ஸ்