தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Fact Check : 'சிறுவன் முன்பாக கையில் மதுவுடன் போஸ் கொடுத்த ரஜினிகாந்த்’ வைரலாகும் போட்டோ.. உண்மை என்ன?

Fact Check : 'சிறுவன் முன்பாக கையில் மதுவுடன் போஸ் கொடுத்த ரஜினிகாந்த்’ வைரலாகும் போட்டோ.. உண்மை என்ன?

Fact Crescendo HT Tamil
Jul 09, 2024 03:44 PM IST

Fact Check : ‘சிறுவன் முன்பாக, கையில் மதுவுடன் போஸ் கொடுத்த ரஜினிகாந்த் என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் உண்மையா என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

 'சிறுவன் முன்பாக கையில் மதுவுடன் போஸ் கொடுத்த ரஜினிகாந்த்’  வைரலாகும் போட்டோ.. உண்மை என்ன?
'சிறுவன் முன்பாக கையில் மதுவுடன் போஸ் கொடுத்த ரஜினிகாந்த்’ வைரலாகும் போட்டோ.. உண்மை என்ன?

ட்ரெண்டிங் செய்திகள்

தகவலின் விவரம்:

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ சிறுவன் முன்னாடி மதுபானத்தை கையில் வைத்திருக்கும் வந்தேறி ரஜினி 🔥🔥🔥’’, என்று எழுதப்பட்டுள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்த தகவல் உண்மையா என்று நாம் குறிப்பிட்ட புகைப்படத்தை கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது இந்த படத்தில் ரஜினியுடன் நிற்கும் சிறுவன் நடிகர் ஜீவா என்பது தெரியவந்தது.

இதன்படி, கடந்த 2012ம் ஆண்டு நடிகர் ஜீவா அவரது ட்விட்டர் பக்கத்தில் மேற்கண்ட புகைப்படத்தை பகிர்ந்து, ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.

 நடிகர் ஜீவா அவரது ட்விட்டர் பக்கத்தில் மேற்கண்ட புகைப்படத்தை பகிர்ந்து, ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.
நடிகர் ஜீவா அவரது ட்விட்டர் பக்கத்தில் மேற்கண்ட புகைப்படத்தை பகிர்ந்து, ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.

இதேபோன்று, 2022ம் ஆண்டும் இதே புகைப்படத்தை பகிர்ந்து, ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.

இதன்மூலமாக, நடிகர் ஜீவா அவரது சிறு வயதில் ரஜினியுடன் எடுத்த புகைப்படம் இது என்று தெளிவாகிறது. மேலும், ரஜினி கையில் குளிர்பானம் மட்டுமே உள்ளது. எனவே, இந்த படத்தை எடுத்து, ரஜினி கையில் மதுபானம் உள்ளது போன்று எடிட் செய்துள்ளனர், என்று உறுதி செய்யப்படுகிறது.

எனவே, ‘ரஜினி கையில் மதுபானம்,’ என்று கூறி பகிரப்படும் புகைப்படம் எடிட் செய்யப்பட்ட ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

‘’ சிறுவன் முன்பாக, கையில் மதுவுடன் போஸ் கொடுத்த ரஜினிகாந்த்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம்
‘’ சிறுவன் முன்பாக, கையில் மதுவுடன் போஸ் கொடுத்த ரஜினிகாந்த்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம்

முடிவு

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது.

பொறுப்புத் துறப்பு

இந்தச் செய்தி முதலில் Fact Crescendo-இல் வெளியிடப்பட்டது மற்றும் சக்தி கலெக்டிவின் ஒரு பகுதியாக HT Digital ஆல் மறுபிரசுரம் செய்யப்பட்டது.

அடுத்து அடுத்து படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கும் ரஜினி

ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக லால் சலாம் படம் வெளியானது. படம் படுதோல்வியை சந்தித்தது.இப்படத்தில் ரஜினி கெஸ்ட் ரோலில் நடித்து இருப்பார். ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்திருக்கிறார். ஜெய் பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் அந்தப் படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது.

படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜெய் பீம் படத்தின் மூலம் பெரும் கவனத்தை ஈர்த்தவர் ஞானவேல் என்பதால் இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. படத்தின் டைட்டில் டீசரும் நல்ல வரவேற்பையே பெற்றது. படமானது அக்டோபர் மாதம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். படத்துக்கு கூலி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன்புதான் தொடங்கியது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.