Vetrimaaran: வாடிவாசல் படத்தில் இருந்து தூக்கப்படும் சூர்யா.. அவருக்கு பதில் இவரா? - என்ன சொல்கிறது கோலிவுட்?
அந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அமீர் குறித்து ஒரு பக்கம் பேட்டிகொடுத்து பரபரப்பை கிளப்ப, இன்னொரு பக்கம் அமீரும் அவரை சார்ந்தவர்களும் பதிலடி கொடுத்தனர்.
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் இயக்குநர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘விடுதலை’. இந்தத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே அவர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட்டையும் நடத்தினார்.
ஆனால் அந்தப்படத்திற்கு அப்படம் தொடர்பான எந்த விதமான அப்டேட்களும் வெளியாக வில்லை. இந்த நிலையில்தான் சூர்யா தரப்பிற்கும், இயக்குநர் அமீர் தரப்பிற்கு இடையே பருத்திவீரன் படப்பிடிப்பின் போது நடந்த பிரச்சினை மீண்டும் சூடு பிடிக்கத்தொடங்கியது.
அந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அமீர் குறித்து ஒரு பக்கம் பேட்டிகொடுத்து பரபரப்பை கிளப்ப, இன்னொரு பக்கம் அமீரும் அவரை சார்ந்தவர்களும் பதிலடி கொடுத்தனர். திடீரென்று எழுந்த இந்த பிரச்சினையால் வாடிவாசல் படத்தில் நடிக்க கமிட் ஆன அமீர் அந்தப்படத்தில் இருந்து தூக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் அதனை மறுக்கும் விதமாக வெற்றிமாறன் தன்னுடைய தயாரிப்பு நிறுவன எக்ஸ் தளத்தில், அமீருடன் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்த நிலையில் வாடிவாசல் படத்தில் இருந்து சூர்யா விலகுவதகாவும், அவருக்கு பதிலாக நடிகர் சூரி நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் இதனை படக்குழு சார்பில் யாரும் உறுதிப்படுத்தவில்லை.
டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையதளம் வெளியிட்ட தகவலின் படி, விடுதலை இரண்டாம் பாகத்தை முடித்த உடன், உடனடியாக வாடிவாசல் பட வேலைகளை தொடங்கி, அந்தப்படத்தை 2025ம் ஆண்டு வெளிக்கொண்டு வர இயக்குநர் வெற்றிமாறன் திட்டமிட்டு இருந்தார். ஆனால் சூர்யா சுதா கொங்கராவின் புறநானுறு கமிட் ஆனதால், அது சாத்தியமாகாது என்று சொல்லப்படுகிறது.