Rashmika: ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா திருமணம் உண்மையா?: வெளியான ஷாக் தகவல்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rashmika: ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா திருமணம் உண்மையா?: வெளியான ஷாக் தகவல்!

Rashmika: ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா திருமணம் உண்மையா?: வெளியான ஷாக் தகவல்!

Marimuthu M HT Tamil
Jan 08, 2024 10:13 PM IST

நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா திருமணம் உண்மையா?: வெளியான ஷாக் தகவல்!
ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா திருமணம் உண்மையா?: வெளியான ஷாக் தகவல்!

2016ஆம் ஆண்டு, பெல்லி சூப்புலு என்னும் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆனவர், நடிகர் விஜய் தேவரகொண்டா. அதன்பின், இவரது நடிப்பில் 2017ஆம் ஆண்டு வெளியான அர்ஜூன் ரெட்டி படம் தென்னிந்திய அளவில் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. அதன்பின், இவருக்கு தெலுங்கில் வரிசையாக படங்கள் வந்து குவியத்தொடங்கின. இவரது நடிப்பில், 2018ஆம் ஆண்டு, கீதா கோவிந்தம் என்னும் படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. அதற்கு முக்கியக் காரணம், இப்படத்தில் விஜய்தேவரகொண்டாவுடன் முதன்முறையாக ராஷ்மிகா மந்தனா ஜோடி சேர்த்து நடித்திருந்தார். இந்த இருவரின் ஜோடி பொருத்தமுமே திரையில் பலரால் ஈர்க்கப்பட்டது. இப்படத்தில் இடம்பெற்ற 'இன்கே.. இன்கே.. இன்கே காவாலி.. சாலே.. இதுசாலே’என்னும் பாடல் மிகப்பெரிய ஹிட்டடித்தது மட்டுமல்லாமல், பலரையும் திரைக்கு கொண்டு வந்தது. இதன்மூலம் ரூ.5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 132 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனை செய்தது. இப்படத்துக்குப் பின் இருவரும் தத்தம் கேரியரில் கவனம் செலுத்தத் தொடங்கினர். மீண்டும் சேர்ந்து நடிக்கவில்லை. இந்நிலையில் இருவரும் ஒன்றாக சேர்ந்து வெளிநாடுகளுக்குச் செல்வது, அங்கு நேரத்தைக் கழிப்பது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்ததாக சில படங்கள் இணையத்தில் வைரல் ஆகின.

இந்நிலையில் இந்தாண்டு, பிப்ரவரி இரண்டாம் வாரம் விஜய் தேவரகொண்டாவுக்கும், ராஷ்மிகா மந்தனாவுக்கும் நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாகவும் இருவருக்கும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா திருமணம் உண்மையா என்பது குறித்து இருதரப்பிலும் எந்தவொரு தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

முன்னதாக விஜய் தேவரகொண்டா நேரடியாக நோட்டா என்னும் படத்தில் நடித்திருந்தார். ராஷ்மிகா மந்தனா, தமிழில் சுல்தான் மற்றும் வாரிசு ஆகியப் படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.