தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Is Karthi Was The Reason For Japan Movie Failure

Japan Movie Failure: தோல்வி அடைந்த ஜப்பான்.. கார்த்தி தான் அதற்கு காரணமா?.. என்ன சொல்கிறார் பவா செல்லதுரை

Aarthi Balaji HT Tamil
Mar 21, 2024 03:08 PM IST

ஜப்பான் பட தோல்விக்கு நடிகர் கார்த்தி தான் காரணம் என்று பிக் பாஸ் பிரபலமும், பிரபல எழுத்தாளருமான பவா செல்லதுரை கூறி உள்ளார்.

ஜப்பான் படத்தில் நடிகர் கார்த்தி
ஜப்பான் படத்தில் நடிகர் கார்த்தி

ட்ரெண்டிங் செய்திகள்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ஜப்பான் படம் அட்டகாசமான வெற்றியை பெரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் கடும் தோல்வியை தழுவியது. நடிகர் கார்த்தியின் கேரியரில் ஜப்பான் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. அவரின் 25 ஆவது படம் என்பதால், பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தோல்வி அடைந்தது ரசிகர்களை கடுமையாக சோகம் அடைய வைத்தது.

ஜப்பான் திரைப்படம்

இந்நிலையில் ஜப்பான் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த பிக் பாஸ் பிரபலமும், பிரபல எழுத்தாளருமான பவா செல்லதுரை ஒரு பேட்டியில் படத்தின் தோல்வி குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார். அதில் அவர் கூறியதாவது, " ஜப்பான் என்ற படத்தில் நடித்து இருந்தேன். இது ஒரு பயங்கரமான குழப்பம். மிகவும் வருத்தமாக இருந்தது. ஏனென்றால் ராஜு முருகன், முருகேஷ் பாபு மூவரும் அதில் பணியாற்றி இருந்தார்கள்.

ஜப்பான் திரைப்பட தோல்விக்கு காரணம்

ஜப்பான் படம், மிக அருமையாக வந்திருக்க வேண்டிய டார்க் ஹ்யூமருடன் கூடிய படம். ஆனால் அது அப்படி ஆகாது. படம் பார்க்கும் போது நகைச்சுவை என்று நினைத்ததெல்லாம் சீரியஸாகிவிட்டது. ஹீரோ இல்லாமல் ராஜு முருகன், முருகேஷ் பாபு போன்றவர்களிடம் படத்தை முழுவதுமாக விட்டு விட்டிருந்தால் , இது ஒரு அழகான நகைச்சுவைப் படமாக அமைந்து இருக்கும் என்று நினைக்கிறேன். தவிர அனைவரின் ஈடுபாடும் தமிழ் சினிமாவில் தான்.

பவா செல்லதுரை

படத்தின் ஹீரோ தனக்கு என்ன வேண்டும், எப்படி கதையை உருவாக்க வேண்டும் என்று சொல்கிறார். அப்போது தயாரிப்பாளர் தன் பங்கிற்கு ஏதோ சொல்கிறார். இதனால் இயக்குனரும் , கதாசிரியரும் குழம்பி போகிறார்கள். ஹீரோவை திருப்திப்படுத்த 10 % , தயாரிப்பாளரை திருப்திப்படுத்த 10 % என்று பிரித்தால் இயக்குனரின் கலை முற்றிலுமாக தொலைந்துவிடும் என்று பயத்துடன் பேசி உள்ளார். 

அவரது பேச்சு தற்போது வைரலாகி வருகிறது. இவர் சொல்வதை பார்த்தால் கார்த்தி மற்றும் தயாரிப்பாளரின் தலையீடு தான் ஜப்பான் படத்தின் தோல்விக்கு காரணம் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

பவா செல்லதுரை ஒரு கவிஞர், கதை சொல்பவர், பேச்சாளர், நடிகர் மற்றும் விவசாயி. இவர் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் பிறந்தவர். மின் வாரியத்தில் இளநிலை அதிகாரி பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். தமிழ் இலக்கியத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் இவரும் ஒருவர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்